ஆத்தாளுடன் நெல்லறுக்கப் போகும்போது !
நெற்தாள் அறுத்தக் கையின் தடத்தை !
இன்னும் என்னால் தாண்டிக் குதிக்கமுடியவில்லை. !
கஞ்சி குடிக்க பனம்பட்டை வெட்டும்போது !
மயில்முடி குட்டிபோட இரை எடுத்து !
கால் சட்டையின் இரகசிய அறையில் - என்று !
மாற்றிப்போட்டு ஊரலாகிப்போனது !
தேரிக்குளத்தின் தாழம்மூடுகளில் !
வாத்து முட்டை பொறுக்கப்போய் !
சாரையும் நல்ல பாம்பும் கனவில் !
வந்து பிணைந்தாடி காய்ச்சல் வந்ததும் !
தெவங்கி நிற்கும் செம்மண் மழைநீரில் !
விழுந்தெழுந்து வெள்ளைச்சட்டை நிறம்மாறி !
முழங்காலின்கீழே தெறச்சி வால் தடம் பதித்ததும் !
ஆத்தா அடித்தழுதழுது ஏசி !
கண்ணீர் கவிதை எழுதி !
கிழித்து எரிக்கப்பட்டதும் !
பின்னாளில் என்ன எளவல எழுதா ? !
எவளுக்குல எழுதா !
எனும் இரணங்களின் மீதே !
என் கவிதை இரத்தம் குடித்துக் கிடந்ததும் !
இப்படியாய் என் பழய நான் !
கணிணியின் காலடியில் காலாவதியாகிக் கிடக்கும் !
நவீன நானிடம் மறந்துவிட்டாயா? !
எனக் கண்ணடித்துச் சிரிக்கும் கதை !
இரா.அரிகரசுதன் !
நாகர்கோவில். குமரி