இனி தனித்துப் பயணிக்கலாம்!
என்ற கணிப்புடன்!
சைக்கிளில் அமரவைத்து மெதுவாய்!
தள்ளிவிட்டான் நண்பன்.!
கைப்பிடி விறைப்பாயும்!
மிதிக்கட்டைகள் நடுக்கத்திலேயும்!
தனிச்சையாய் முதல்முறை!
உருள்கின்றன சக்கரங்கள்.!
எதிர்வரும் சுவருக்கும் நபருக்கும்!
அதீத கவனம் கொள்!
என்ற அறிவுரை நினைவுக்கு வருகிறது.!
குளக்கரையைக் கடந்து!
கிணற்றடி வந்தாயிற்று.!
குடம் சுமந்துவரும் மைதிலியைத்!
தவிர்க்கும் முயற்சி தோற்கிறது!
விழுந்து மடித்தெழுந்த!
அவளின் வார்த்தைகளால் பொசுங்கி !
உத்வேகம் உருவிழந்து மரிக்கிறது.!
தவிர்ப்புக்குரியவைகள் மீதே!
ஈர்ப்புகொள்கிறது மனமும் பயிற்சியும்!
முதிர்ச்சி அடையும் காலம்வரை.!
-- !
சூர்யா
சூர்யா