தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

எவ்வளவு அழகியது அம் மாலை நேரம்

ஷஸிகா அமாலி
மழைக் காலநிலையென்ற போதும்!
தெளிவானதும் அமைதியானதுமான அந்தி நேரம்!
வாசிகசாலை முற்ற சீமெந்து வாங்கின் மீது!
நாங்கள் அமர்ந்திருந்தோம்!
எவ்வளவு அழகியது அம் மாலை நேரம்!
இறந்த காலத்துக்கு மீளச் செல்ல இயலாத!
கதைத்துக் கொள்ளாத போதிலும்!
இதயங்களில் ஒன்றே உள்ள,!
கவிதைகள் எழுதிய போதிலும்!
வாழ்க்கையை விற்கச் செல்லாத!
நட்புக்கள் இடைக்கிடையே வந்து அமர்ந்துசென்ற!
சீமெந்து வாங்கும் கூட ஆறுதலைத் தரும்!
காலத்தின் தாளத்திற்கேற்ப மாற்றங்கள் நேராத போதும்!
வெளியே உரைக்க முடியாத் துயரம் உள்ளத்தில் உறைந்த போதும்!
வில்லோ மரக் கிளைகள் காற்றோடு இணைந்து சரசரக்கும்போது எழும்!
எம் புன்னகை கண்டு திறக்கும் எம் மாயலோக இல்லம்

திறப்பதற்கு மறுக்கட்டுமே

அனாமிகா பிரித்திமா
பிற்பகல் இரண்டு மணி...!
முருங்கை குழம்பு...!
வெண்டை பொரியல்...!
நெய் மீன் வறுவல்...!
பரிமாற தயாராக நான்...!
அழைப்புமணி ஒலித்தது...!
சாவியுடன் ஓடினேன்... !
என்னவர் பசியுடன்...!
ஆவலாய் ...!
கதவு திறக்க மறுக்கிறது...!
நல்ல வேளை...!
அவரிடம் மாற்றுச்சாவி உண்டு...!
அதுவும் கை கொடுக்கவில்லையே?...!
பூட்டை திறப்பவனை அழைத்தால்...!
வர இரண்டு மணி நேரம் ஆகும்...!
மீண்டும் வேலைக்குச்செல்ல வேண்டுமே?...!
உள்ளே நான்...!
வெளியே என்னவர்...!
நான் கதவின் வழி ஊட்ட...!
என் குழந்தை சாப்பிட்டது ...!
அடுத்த வீட்டு மலாய் பாட்டி...!
கேலியாய்...!
“கணவர் மேல் இத்தனை பாசமோ” ?...!
என் மனதில் சின்ன ஆசை ...!
தினமும் கதவு ...!
திறப்பதற்கு ...!
மறுக்கட்டுமே

கேள்போல் பகை

முருகடியான்
ஒன்றுபட மாட்டார் உருப்படவும் மாட்டாமல்!
நண்டுகதை போன்றே நடந்திடுவார்! -மண்டுகளாய்!
வெண்டா மரைத்தேனை வேட்காமல் வேற்றுமொழித்!
தண்டுகளைத் தண்மலரென் பார்!!
மூவேந்தர் ஆட்சி முடிந்து முளைத்தவிதை!
சாவேந்திப் போய்வரையில் சாவாதோ? -தாவடிமைப்!
பிட்டேந்தி உண்ணப் பெரிதும் விரும்பியெங்கும்!
தட்டேந்து வார்தமிழ ரே!!
தட்டிக் கொடுத்துவிட்டுக் கால்தொட்டுக் கைதொழு(து)!
எட்டி உதைத்தால் இளித்துவிட்டு -மட்டிகளாய்!
இன்னும் இறைதமிழை ஏற்றமுடி யாதிருக்கும்!
மண்ணே மறத்தமிழர் மண்!!
சூரியனின் சூடாய்ச் சுடுந்தொலைக் காட்சிவழி!
ஆரியத்தோ டாங்கிலத்தின் ஆளுகையால் -வீரியமே!
இல்லாத் தமிழ்பரப்பி ஏய்க்குந் தலைவ(ர்)களை!
நல்லாராய் நம்புவதேன் நாம்?!
ஆதித்தர், அண்ணா, அருந்தலைவர் மா.பொ.சி!
சாதிக்க மாட்டாமல் சாவடைந்தார் -பாதிக்கப்!
பட்டதெல்லாம் நீக்குவதாய்ப் பாலொழுக்கம் பேசிவிட்டு!
வெட்டுகிறார் வெல்தமிழின் வேர்!!
பிள்ளை மகுடமிட் பேரரெல்லாம் கொள்ளையிட்!
நல்ல தமிழழிக்கும் நாடகத்தால் -கள்ளமுடன்!
சேற்றில் அமுதமிட்டுச் செம்மொழியென் றார்ப்பரித்தல்!
காற்றைக் கயிறாக்கல் காண்!!
!
- பாத்தென்றல்.முருகடியான்

முற்றும் தொடரும்

சகாரா
கண்களைக் குருடாக்கும் பெருமை!
வெற்றியை விலைபேசும் பொறாமை!
இருப்பைத் தின்னும் சோர்வு!
அடிக்கடி குழம்பித் தடுமாறும் பலவீனம்!
புன்னகையை மறைத்தழிக்கும் பொய்ப்புழுதி!
மகிழ்ச்சியைக் கொத்தத் துடிக்கும் துரோகம்!
நேர்மையை நோகடிக்கும் குரூரம்!
நட்பைத் தூரவிரட்டும் மௌனம்!
எதிரியையும் நெகிழ வைக்கும் துயரம்!
துயரங்களைத் தித்திக்கவைக்கும் விரக்தி!
விரக்தியைத் துளித்துளியாய்க்!
கரைய வைக்கும் கவிதை!
சூன்யத்தில் கயிறுதிரிக்கும் குடும்பம்!
சுயத்தைச் சாகடிக்கும் உலகம்!
தன்னம்பிக்கையின் மறுபரிசீலனையில்!
தள்ளிப் போடப்படும் மரணம்!
எல்லாம் உறிஞ்சித் தீர்த்தபின்னும்!
எப்படியோ மிச்சமிருக்கிறது!
இன்னும் கொஞ்ச வாழ்க்கை.!
நன்றி ::!
”-நதிக்கரையில் தொலைந்த மணல்”!
வெளியீடு : பயணம் புதிது!
புலியூர் 639 114!
கரூர் வட்டம்!
தொலைபேசி :: 04324 - 50292

ஞாபங்கள் முடிவில்.. நவீனத்துவம்

ராசை நேத்திரன்
01.!
ஞாபங்கள் முடிவில் !
--------------------------!
சம்பளத்தை நோக்கிய !
மாத மாத வாழ்க்கை பயணம் !
எளிதாய் மனித வாழக்கையின் !
நாட்களை நொடிப்பொழுதில் !
தின்று விடுகிறது !
தேவைகளை பூர்த்தி செய்து !
கொள்ளவே வாழ்க்கை பயணம் !
என்று மாறிவிடுவதில் சாதிக்க !
பிறந்த மனிதன் எங்கே யோசிக்க !
சாதனையின் படிக்கட்டுக்களை !
திடும் என திரும்பி பார்க்கிறேன் !
பள்ளிப்பருவம் மறக்க தொடங்கி !
அனிச்சையாய் ஓடிக்கொண்டு !
இருக்கிறேன் ..... !
இது போலவே இன்னும் சிறிது !
நாட்களில் கல்லூரி காலம், !
உயிர் நண்பனின் நட்பு, !
உறவின் பாலம் !
கொஞ்சம் கொஞ்சமாய் !
தேயத்தொடங்கிவிடுகிறது !
நாட்காட்டியை போலவே !
ஞாபங்களும்....... !
!
02.!
நவீனத்துவம்

தொலைவு

ரசிகன்!, பாண்டிச்சேரி
பயணத்தின்!
பெயர் மற்றும் முகவரி!
நட்பென குறிப்பெடுக்கப்படுகிறது!!
மெல்லினம் அவளெனவும்..!
வல்லினம் நானெனவும்,!
முரண்பாடுகள் ஒன்றுவது போல்!
சித்தரிக்கப்படுகிறது பயண வழி !!
தோள் சாய்தல் பகிர்வதாகவும்!
கரம் கோர்த்தல் பிணைப்பதாகவும்!
மடிசாய்தல் இளைப்பாறுவதாகவும்!
வழித் தடங்களில் சுட்டப்பட்டுள்ளது!!
இந்நெறிமுறைகளுக்குட்பட்டு!
பாதைகள் தீர்மானப்பட.. !
நடுவானத்தில் ,!
பிறிதொரு வழிப்போக்கனின் விழியில்!
மெல்லினம் காதல் சுவையுணர்கிறாள் ,!
முடியாது நீளும்!
என் பயணத்தில்!
இன்று நட்பிற்குப் பதில்!
தனிமை விரல்கள்! !

பால்யம் நகரும் பொழுதை மிதி

எம்.ரிஷான் ஷெரீப்
ஆலயங்களின் பெரும்பரப்பில் !
அமைதி தேடிப் பாதங்கள் பதியும்!
நாட்கள் நினைவில் இடற!
ஒரு மலை போன்ற வேதனை,!
ஒரு வனாந்தரப்பசுமை!
அத்தனையும்!
ஒருங்கே கொண்ட நெஞ்சுடன்!
கனவாய்க் காற்றாய்!
வாழ்க்கை தொலைத்தேன்;!
யாதுமாகி நின்ற உன்னையும்தான் !!
பால்யத்துப் பள்ளிக்கூடங்களில் !
ஒன்றாய்த் திரிந்தோம்;!
கூழாங்கற்கள்,ஓட்டுத் துண்டுகளைக்!
கையால்,காலால் விளையாடிச் சோர்ந்துபின்!
காட்டு இலைகளையும்,மணலையும்!
சிரட்டையில் அள்ளிச் சோறாயெண்ணி உண்டோம் !!
என் முழங்கால்ச் சிராய்ப்புக்கு!
உன் எச்சில் தடவினாய்,!
எவனோ உன் பட்டப்பெயர் சொல்லிக்கூவ!
அவன் சட்டை கிழித்துச் சண்டை பிடித்தேன் !
காதலில்லை,காமமில்லை!
அறுவெறுக்கும் எந்த அசிங்கங்களும்!
அதிலிருக்கவில்லை !!
புது வயதுகள் பிறக்க,!
பால்யம் பாதி கரைய,!
வசந்தங்கள் உன் வாழ்வில் வர!
நான் தனித்து வரண்டுபோனேன் ;!
என் இரகசியச் சினங்களைத்!
தூறலாய்ப்பொறுத்து!
முக்காட்டுக்குள் நீ புகுந்தாய்,!
நான் யாதாகித் திரிகிறேன்...?!
நாடுதாண்டிக் கண்டம் தாண்டி,!
செவியேற்க யாருமற்ற!
பாழ்வீதியொன்றில்- நானின்று!
நின்றுகொண்டேயிருக்கிறேன்!
என் துயரங்களைப் பாடியபடி;!
சாபங்கள் துரத்தித் துரத்தி விழுங்கி!
பூமிக்குள் புதையுண்டிருக்குமெனது!
பாதங்களை மீளப்பெறும் நாளில்!
நாடேகுவேன் !!
அன்று !
வீதியில் உன் மழலைகள்!
செம்மண் தூசு உடல் அப்ப!
பால்யத்தில் திளைத்து விளையாடுவதைக் !
காண நேரிடலாமெனக்கு..!!
!
-எம்.ரிஷான் ஷெரீப்,!
மாவனல்லை,!
இலங்கை

இசையாக, அய்யனார்

ப்ரியன்
இசையாக!
******!
ஒடிந்த வலியினையும்!
தீக்கோலிட்ட!
புண்ணினது ரணத்தையும்!
காற்றினூடே!
சொல்லிச் சொல்லி!
அழுகிறது!
புல்லாங்குழல்!
- ப்ரியன்.!
அய்யனார்!
*********!
சென்ற வருட வறட்சிக்கே!
ஊர் காலியானது தெரியாமல்!
இன்னும்,!
காவல் காத்துக்!
கொண்டிருக்கிறார்!
ஊர் எல்லையில் அய்யனார்!
- ப்ரியன்

அடக்குமுறை அறுத்தெறிவோம்

நிந்தவூர் ஷிப்லி
புதிய நாள் புலர்கையிலே!
புதிது புதிதாய் கற்பனைகள்!
அந்தி மாலை மலர்வதற்குள்!
அடுத்தடுத்து படுகொலைகள்!
மூபத்து அகவைகளாய்!
மூடப்பட்ட உரிமைகள்!
எல்லோர்க்கும் சொல்வதற்கு!
இல்லை இங்கே உவமைகள்!
வலிகளுக்குள் உறைந்து போனோம்!
வழிகளற்ற பயணமடா !!
அடுத்த திசை மறந்து போனோம்!
அநேகம் அத மரணமடா !!
அவலங்களும் அழுகைகளும்!
எஞ்சி நிற்கும் சொத்தாச்சு!
சத்தமிட்டு கதறியழும்!
சுதந்திரமும் ரத்தாச்சு!
நாய்களும் பேய்களும்!
நல்லவராய் நடிக்கிறது!
உப்பிலிருந்து கற்பு வரை!
அத்தனையும் கடிக்கிறது!
பத்தோடு பதினொன்றாய்!
பயந்த காலம் கொளுத்திடுவோம்!
கைகளெல்லாம் துணிந்தபின்னே!
கயவர் தலை அறுத்திடுவோம்!
பொறுமைகள் கொதித்தெழுந்தால்!
பூமியினி தாங்காது!
சிறுமைகள் களைத்தெறிவோம்!
சிலுவைகள் இனியேது ?!
தடையுடைத்து புறப்படுவோம்!
தடுமாற்றம் தேவையில்லை!
அடக்குமுறை அறுத்தெறிவோம்!
அதன்பின்னே வேலையில்லை!
வெகுண்டெழுவோம் நண்பர்காள்!
வாருங்கள் ஒன்றிணைவோம்!
இழந்துவிட்ட உரிமைகள்!
அத்தனையும் அன்றே அடைவோம்!
-நிந்தவூர் ஷிப்லி!
தென்கிழக்குப்பல்கலை!
இலங்கை

எனது தாய் நிலம்

அசரீரி
காலைகளின் அதிகாரத்தால்!
தினமும் உடைந்து சிதறுகிற!
எங்களின் சூரியனும்!
அதி இருட்டான எம்!
பயணப் பாதையில்!
பயந்தரும் பெரும் சப்தத்தோடு!
நெருப்புத்தனமாய் முடியும்!
பெருமூச்சுகளுக்குமப்பால்!
வேறொன்றுமில்லை இனி..!
மிக மிக அதிகமாய்!
கைதிகள் நிரம்பியும், நிரம்பவும் இருக்கிற!
என் தாய்நிலத்தில்!
வேறொன்றுமில்லை இனி..!
-அசரீரி