01.!
விண்ணப்பம் !
-------------------!
அன்றாடம்..!
அரசியல்...!
அறிக்கை....!
அநியாயங்கள்...!
அக்கிரமங்கள்...!
அதிகார துஸ்பிரயோகம்....!
அடிதடி....!
அகால மரணம்....!
ஆக்கிரமிப்பு...!
இறுதி அஞ்சலி....!
ஈடற்ற இழப்பு....!
உடல் தகனம்...!
ஊக்கத்தொகை....!
ஊழல் பேர்வழிகளின்!
எச்சத்தின் மிச்சம்....!
ஏழைபாலைகள்.........!
ஏமாற்றங்கள்....!
ஒடுக்கப்பட்டவர்கள்........!
ஓட்டுக்காக மட்டும்.....!
சனநாயகம் இங்கே !
கூறு போட்டு விற்க்கபடுகிறது.....!
நெஞ்சு பொறுக்காமல்!
சுத்திகரிக்க!
முனைபவர்களிங்கே!
சுழற்றியடிக்கப்படுகின்றனர்!
முட்டாள்களின் முதல் வரிசையில்....!
அவ்வளவையும்!
கண்டும், காணாததுமாய்!
கடந்து செல்லும்!
வாழ்க்கைப்பயணத்தில்!
வெறும் உயிருள்ள பிணங்களாய்!
வளம் வருகின்ற வரையில்!
அரசியல்வாதிகலென்ற பெயரில்!
சுயநலவாதிகளின்!
மடியில் மனிதம்!
மடிந்துகொண்டுதானிருக்கும்....!
படைத்த இறைவனிடம்!
விண்ணப்பிக்கும்!
வசதி வேண்டும்!
சுயநலவாதிகளுக்கும்....!
அரசியல்வாதிகளுக்கும்....!
தண்ணியில்லா!
வேற்றுகிரகத்துக்கு!
மாற்றல் வேண்டி....!
!
02.!
காணவில்லை!!!!
------------------------!
அலமாரியில்தான வச்சிருந்தேன்...!
எங்கம்மா போச்சு...!
என் ஹால் டிக்கெட்டு......!!!!
பரீட்சைக்கு நேரமாச்சு...!
நீ பார்த்தியா ...?!
இப்படி பரபரப்பாக!
பல நேரங்களில்!
எல்லாவற்றையும்!
எங்காவது தொலைத்து விட்டு!
அம்மாவோடு சண்டையிட்டு!
அவசரமாய் கிளம்பும் நான்.....!
இன்று தொலைந்துவிட்டிருந்தும்!
அறையெங்கும் தேடாதிருக்கிறேன்....!
அம்மா வந்து தானாகக் கேட்டபோதும்!
வார்த்தைகளின்றி தவிக்கிறேன்.!
ஒன்றுமில்லையென்று!
அவசரமாக மறுக்கிறேன்.....!
என்னையறியாமல் மனசுக்குள்!
முணுமுணுத்துக்கொள்கிறேன்.!
செய்வதறியாமல் !
தனிமைக்குள் பதுங்கிக்கொள்கிறேன்....!
இப்பொழுது சண்டையிடுவதற்கு நீதானடி வேண்டும்!
என் இதயத்தை காணவில்லை
கவிதன்