தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

பலி

நிர்மல்
ஆசிரியர் பெயர்; நிர்மல்!
--------------------------------------!
பலி கொடுக்கின்றோம்!
வலியோ உடன் தெரியாது!
எனக்கும் பிறருக்குமான!
எல்லோருக்கு பொதுவானதுமான!
பலி தினமும் உண்டு!
வாகனத்தின் புகையிலும்!
வாரி இறைக்கப்படும் ப்ளாஸ்டிக்கிலும்!
நதி நீரில் கலக்கும்!
நாசம் கொண்ட கழிவாலும்!
மறக்காமலுண்டு சுற்றுச்வழலின் பலி!
பனிக்கரடியின் து£க்கம் கலைத்திட்டோம்!
புலிக்கூட்டத்தின் இருப்பை அழித்திட்டோம்!
இடம் மாறும் பறவையை நிறுத்திட்டோம்!
சூழலும் சுற்றமும் தாங்கிடுமோ பலி!
கடல் கொண்டு காணாமல் போன!
குமரிக்கண்ட கதை ஆவோமா நாம்!
புடைத்த வேர்களுள்ள!
பருத்த மரத்தில் விஷமூட்டி!
கனி காண நிற்கின்றோம்!
தனைகாத்தல் மரத்தின் இயல்பு!
தனைகாத்தல் மரத்தின் அவசியம்!
அரவங்களாய் வேர் மாற்றலாம்!
அதன் முறுக்கின பிடியில்!
பலி கொடுத்தவன் அன்று பலியாடு

ஆய்வு

காருண்யன்
ஊரின் கிழக்குக் கோடிதீரம் !
ஓங்கும் நெடிய அத்தி !
சும்மா உலவப்போன காலை !
அதனை மேலே நிமிர்ந்து பார்த்தேன் !
இலை செறிந்தவோர் கிளையில் !
எவரும் கண்படாத மறைவில் !
செக்கல் வானச்சிவப்பில் !
கோரிக்கையற்றுத் தொங்குது !
ஒரு பெரிய தேன் செறிந்த வதை !
தேனீக்கள் ஒன்றும் இல்லாமல் !
கூடு மட்டுந்தனியாக !
தபஸிருக்கக் கண்டேன் !
மழை வந்து கழுவிப்போச்சோ !
கொள்ளைதான் கொண்டு போச்சோ !
முற்றும் கூட்டாகக் கலைந்துபோக !
எரிபந்தம் யார்தான் பிடித்தார் !
கல்லெறிந்து யார் கலைத்தார் !
உயிர் தப்பக் கலைஞ்சு போச்சோ !
உயிர் கொண்டு பிரிஞ்சு போச்சோ !
இங்கே கூடு மட்டும் தனியாகத் !
தொங்கும் சோகமென்ன? !
கூடுவிட்டு கலைந்துபோக !
நேர்ந்ததின் அவலம் என்ன? !
காரணகாரியத்தை நண்பன் !
அறிவானோ !
விண்டுரைத்தேன் பூராவும் !
கேட்ட பின் !
அவன் பகர்ந்தான்: !
தேனீக்கள் எங்கே போனால் !
குறைஞ்சதெனன உனக்கு? !
கண்டவுடன் குலையை !
கெட்டோடு கொண்டராத !
அரைவேக்காட்டுக் கவிஞா....... மூடா

எதிர்காலமே

சின்னபாரதி
எழுத்து: சின்னபாரதி!
முகவரி தேடி!
முகத்தை தொலைக்கிறோம்!
உயிரை காக்க!
உயிரை பணயம் வைக்கிறோம்.!
தமிழ் வாழுமென்றே!!
சாகிறோம்!
உடைமையென்று ஒன்றுமில்லை!
உடுத்திய உடை தவிர!
உயிரென்று ஒன்றுமில்லை!
உன்னைத் தவிர!
விதையிட்ட நிலத்திலெல்லாம்!
விதைகளாய் புதைகிறோம்!
நாளை...!
உழும்போது எழும்பும்!
எலும்புகளாயிருப்போம்.!
விதை விருட்சயமாய்!
வளர உரமாயிருப்போம்.!
எழுத்து: சின்னபாரதி

காத்திருக்கிறேன்

கவிதா. நோர்வே
ஒரு தீவு!
ஒரு நிலவு!
ஒற்றை மரம்!
கரையில் ஓடம்!
காத்திருக்கிறேன்!
நான் மட்டும்!
கலைத்துப் போகும்!
காற்றைப் போல்... !
என் முடிஅலையும்!
உன் கைகளுக்காகவே!
பின்னி விடும்!
என் கூந்தலையும், என்னையும்!
கோர்த்துக்கொள்!
உன் விரல்களில்!
நான் !
தீட்டி வந்த கண்மை...!
என்னை பின்னிப்போடும்!
உன் விழிகளுக்காகவே!
ஸ்தம்பித்துவிடும்!
என் காட்சிகளையும்!
கலைத்துப் போடு!
உன் கட்டுப்பாட்டிற்குள் !
நான் உடுத்துவரும்!
சேலையெல்லாம்!
தேவதையென்று சொல்வாயே!
அந்த வார்த்தைக்காகவே !
உடுத்துக்கொள் என்னை!
விடுதலை செய்!
அந்த ஒற்றை பூவையும்!
என் உதட்டின்!
மென்சாயமெல்லாம்!
அள்ளிப் போகும்!
உன் உதடுகளுக்காவே!
அறுவடை செய்!
உனக்காகத்தானே!
எனது விளைநிலங்கள்!
வட்ட நிலவொளியில்!
வையகம் மறந்திடலும்!
கவிதை விரல்களால்!
மெய்க் காவியம் எழுதிடலும்!
ஓசையற்ற இசைப் பயணம்!
ஓடம் அழைக்கிறது!
வா!!
போய் வரலாம் அக்கரைக்கு!
விடை கொடு!
வார்த்தைக்கு

அன்றாடச் செய்தி.. டமில்நாடு

இ.பு.ஞானப்பிரகாசன்
01.!
அன்றாடச் செய்தி!
-----------------------------!
பங்குச் சந்தை நிலவரம்!
தங்க விலை விவரம்!
வானிலை அறிக்கை!
இவ்வரிசையில்!
அண்மையில்!
புதிதாகச் சேர்ந்திருக்கிறது!
'தமிழ் மீனவர் மீது!
இலங்கை ராணுவம் தாக்குதல்'!
02.!
டமில்நாடு!
-------------------!
தமிழினத் தலைவரின் (!)!
வேண்டுகோள் ஏற்று!
இனமானத் தமிழர்!
தைத்திங்கள் திருநாளில்!
தம் இல்லத்து வாயில்களின்!
வண்ணக் கோலங்கள் கீழ்!
வரைந்தனர்...!
குறுந்தகவல்களில்!
அனுப்பினர்...!
கைகுலுக்கிப்!
பகிர்ந்தனர்...!
ஹேப்பி பொங்கல் அண்டு!
ஹேப்பி டமில் நியூ இயர்!!
வாழ்த்துகள்

ஒரு கடல் நீரூற்றி

பஹீமா ஜஹான்
நட்சத்திரங்கள் பூத்த வானம் விரிந்திருந்தது!!
எமக்குப் பின்னால் !
பாதியாய் ஒளிர்ந்த நிலவு தொடர்ந்து வந்தது!!
தூரத்து வயல் வெளியை மூடியிருந்தது !
வெண்பனி!
தென்னைகளில் மோதி குடியிருப்புகளை ஊடுருவி!
எம் செவி வழி நுழைந்தது!
வங்கக் கடலில் எழுகின்ற அலையோசை !!
சந்தடி ஓய்ந்த தெரு வழியே !
நீயும் நானும் விடுதிவரை நடந்தோம் !!
இப்படியே !
எத்தனையோ இரவுகளில் !
விவாதிப்போம் நெடு நேரம்!
முடிவில் ,எதிர்காலம் குறித்த அவநம்பிக்கைகளுடன்!
பிரிந்து செல்வோம் !!
பின் வந்த, பதற்றமான பொழுதொன்றில்!
உன் விடுதலை வேட்கைக்குத் தடையாயிருந்த !
அனைத்தையும் உதறி அடவி புகுந்தாய் !!
பரணி... !
உன் நினைவுகள் தேய்ந்து கொண்டிருந்த வேளை!
மாரி கால அந்திப் பொழுதொன்றில் !
நனைந்த சீருடைகளில் இருந்து நீர் சொட்டச் சொட்ட!
மீளவும் நீ வந்தாய் !!
அலையெழும்பும் கடல் பரப்பினில் !
உனக்கான பணி முடிக்கவென விடைபெற்றுப் போனாய்:!
வாழ்த்துச் சொல்ல வாயெழவுமில்லை!!
ஆரத்தழுவிட நீ விரும்பவுமில்லை !!
வெளியே பெய்த மழை என் கன்னங்களில் வழிந்தோட...!
மழைப் புகாரினூடே மறைந்து போனாய் !!
திரைகடல் சென்ற திரவியமானாய் !!
ஆழிப்பரப்பெங்கும் ஊழித்தீ எழுந்து தணிந்தது-நீ!
திரும்பி வரவே இல்லை !!
இன்று வீரர்கள் துயிலும் சமாதிகள் மீது !
காலத்துயரின் பெரு மௌனம் கவிழ்ந்துள்ளது !!
சமுத்திரத்தையே சமாதியாகக் கொண்டவனே !!
இங்கு ஏதுமற்ற உன் கல்லறையில்!
ஒரு கடல் நீரூற்றி நிரப்பிடவோ? !
- பஹீமா ஜஹான்!
2002!
ஒரு கடல் நீரூற்றி...தொகுப்பிலிருந்து

பேசு

எம்.எல்.எம். அன்ஸார் -இலங்கை
சீர்வரிசை கேட்காத மச்சான் - என்!
சிந்தையிலே தேனள்ளி வச்சான்!!
மார்கழிக்கு இன்னும்நாள் உண்டு - வரும்!
மார்ச்சில்நீ எந்தேகம் அண்டு!!
நீர்காற்று வானமழை என்றாய் - இள!
நெஞ்சைநீ காதலினால் கொன்றாய்!!
கூர்கத்தி நான்வைத்து உள்ளேன் - நாளை!
கொள்கைநீ மாறிவிடில் கொல்வேன்!!
மாமியிடம் சொன்னாயா என்னை - அவ!
மறுத்தாவா வீடுகாணி பொன்னை!!
பூமியிலே நீவீரன் ஆனாய் - இதைப்!
புரியாட்டால் தூசாய்த்தான் போவாய்!!
---------------------------------------!
06-02-2010 அன்று வார்ப்பில் வார்க்கப் பட்டிருந்த ஈழநிலா வின்(இலங்கை) ”தூசு கவிதைக்கான பதில் கவிதை

இரணைமடு

தீபச்செல்வன்
01!
காலாவதியான ஒரு!
கொக்கக்கோலாவை சுற்றி!
எறும்புகள் சூழ்ந்திருந்தன.!
எனது வஸ்திரங்கள் கரைய!
அதிகாரத்தின் முன்!
நிருவாணமாய் நின்றிருந்தேன்!
அது என்னை அடிமையாக்கி!
பயங்கரவாதி என அழைத்தது.!
புரட்சி ஒன்றின் விளிம்பில்!
அடிமை பீடிக்கிறதை!
நான் உணர்ந்தேன்!
கூச்சலிட்டு சொல்லி உதருகிறேன்.!
சனங்கள் நிறைந்த!
எனது கிராமத்தின் மேலாக!
வேக விமானம் ஒன்றை!
உக்கிரேன் விமானி ஓட்டுகிறாள்.!
பயங்கரவாதிகளுக்குள்!
பதுங்குகுழிகள் பதுங்குகின்றன.!
குழந்தைகள்!
தாய்மார்கள்!
முதியவர்கள் எல்லாம் பயங்கரவாதிகள்!
என ஜநா அறிவித்தது.!
நான் பயங்கரவாதி என்பதை!
உரத்து சொல்கிறேன்.!
என்னை அமெரிக்காவின் நேர்மை!
தேடிவருகிறது!
ஜநா படைகளும்!
அமெரிக்காப் படைகளும்!
இந்தியப் படைகளும்!
இலங்கைப்படைகளைப்போல!
எனது தெருவுக்கு வர!
ஆசைப்படுகிறார்கள்.!
நான் அப்பிள் பழங்களை!
புசிப்பதற்கு ஆசைப்பட்டிருக்கிறேன்.!
கிரேப்ஸ் பழங்களை!
உற்பத்தி செய்யத்தொடகினேன்.!
நான் ஒலிவம் இலைகளை!
மறந்திருந்தேன்!
பேரீட்சை பழங்களை!
உண்ணாதிருந்தேன்!
எனது பனம்பழங்களை!
இழக்க நேர்ந்தது.!
ஒட்டகங்களின் முதுகில்!
குவிந்திருந்த பொதிகள்!
சிதைந்ததை நான் மறந்தேன்!
எனது மாட்டு வண்டிகள்!
உடைந்து போயின.!
தலைவர்களின் இடைகளில்!
எண்ணைக்குடங்கள் நிரம்பியிருந்தன!
அவர்களின் கூடைகளில்!
எனது பனம்பழங்கள்!
நிறைக்கப்பட்டிருந்தன.!
கனியின் விதை கரைய!
என்மீது கம்பிகள் படர்ந்தன.!
02!
திருவையாற்றில் குருதி!
பெருக்கெடுத்து ஓடுகிறது!
பிணங்களை அள்ளிச் செல்கிறது!
வெங்காயத்தின் குடில்கள்!
கருகிக்கிடந்தன!
தோட்டம் சிதறடிக்கப்பட்ட!
செய்தியை அமெரிக்கா வாசிக்கிறது.!
இரணைமடுவில் பறவைகளின்!
குளிர்ந்த சிறகுகள் உதிர்ந்தன!
தும்பிகளும் நுளம்புகளும்!
எழும்ப அஞ்சின!
இரணைமடுக்குளத்தில்!
குருதி நிரம்ப பிணங்கள் சேர்ந்தன!
நோர்வேயின் படகு மிதக்கிறது.!
இந்தியாவும் பாகிஸ்தானும்!
ஆயுதங்கள் பெருக!
எனது ஊரின் நடுவில்!
போரிட்டுக்கொண்டிருக்கிறது.!
உலைப்பானைகளும்!
அடுப்புகளும் சிதைய!
எனது மனைவி நசிந்து கிடந்தாள்.!
எனது வீதியை ஜப்பான்!
சுருட்டி எடுத்தது!
அமெரிக்காவும் ஜநாவும்!
எனது குழந்தையை!
பள்ளியோடு கொன்று விட்டது!
பிரித்தானியாவின்!
சிறையில் நானிருந்தேன்.!
ஒரு மாம்பழத்தை தின்பதற்கு!
எல்லோரும் அடிபட்டு!
எனது காணியை சிதைத்தார்கள்!
கத்திகளை இன்னும்!
கூர்மையாக்கி வருகிறார்கள்.!
இந்தியாவும் அமெரிக்காவும்!
எனது தலையில்!
காலுன்ற அடிபடுகிறது!
சீனாவும் ரசியாவும்!
எனதூர் ஆலயத்தின்!
கூரைகளை பிரித்துப்போட்டது.!
நான் முதலில் அமெரிக்காவிற்கு!
பதில் சொல்ல வேண்டும்!
கோதுமைகளுடன்!
அமெரிக்காவின் கப்பல்!
திருமலைக்கு வருகிறது!
அமெரிக்கா எனது படத்தை!
குறித்திருந்தது!
ஜநா எனது குழந்தையின் படத்தை!
குறித்திருந்தது.!
எல்லாவற்றக்காகவும்!
வலிந்து விழுங்கிய!
அதிகாரங்களால்!
நான் பயங்கரவாதி எனப்பட்டேன்!
ஒடுக்கப்பட்டவர்களின் கூட்டத்தில்!
நான் தூக்கி எறியப்பட்டேன்.!
நமது ஓலங்களிற்குள்!
பெருகும் குருதி ஆறுகளிற்குள்!
சந்தைகள் பரவி நிகழ்ந்ததன.!
அமெரிக்கா இரணைமடுவுக்கு!
ஆசைப்படுகிறது.!
------------------------------------------------------!
தீபச்செல்வன்!
!
'இரணைமடு' ஈழப்போராளிகளான விடுதலைப் புலிகளின் விமானதளம் இருப்பதாக கூறப்படுகிற!
வடக்கின் முக்கிய தளமாகும். இப்பகுதி மீதும் இதனை அண்டியிருக்கும் பகுதிகள்!
மீதும் இலங்கை அரசாங்கம் தொடர்ந்து விமானத்தாக்குதல் நடத்தி வருகிறது

கருப்புச் சுதந்திரத்தின் வெள்ளைக் கனவுகள்

வித்யாசாகர்
ஒரு பழங்கிணற்றின் அடியில் உடையும்!
நீர்க்குமிழியென!
உடைகிறது என்!
ஒவ்வொரு ‘தேசத்தின் கனவுகளும்..’!
கார்த்திகை தீபத்தன்று பனைப் பூ முடிந்து!
சிறுவர்கள் சுழற்றும்!
மாவலியிலிருந்து உதிரும்!
நெருப்புமீன்களாக பறந்து பறந்து!
வெளிச்சமிழந்து மண்ணில் புகுகிறது – என்னந்தக்!
கனவுகளும் ஆசைகளும்.. !
எட்டி கிளை நுனி பிடித்திழுத்து!
பறித்துக் கொள்ளும் இலைகளாகவும்!
உதிர்ந்து காலுக்கடியில் மிதிபடும்!
மலர்களின் கண்ணீர் தொய்ந்த வாசமாகவும்!
எம் கனவுகள் இத் துரோக மண்ணில்!
காய்ந்துப் போவதின்னும் எவ்வுயிர் பிரிந்து மிஞ்சும்!
கடைசி பொழுது வரைக்குமோ.. அறியோம்; அறியோம்;!
இறக்கை முறித்து -!
உயிர் உதிர்த்து -!
உடல் முடைந்த பின்னலாக!
காலத்தின் கண்களில் விரிக்கப்பட்ட எம்!
கனவுகளின் ஒற்றை அர்த்தம்!
ஒரு தமிழினத்தின்!
ஒற்றை விடுதலை மட்டுமென புரியும் நாளில்!
எம் கனவுகளுக்காய் முளைக்கும்!
மொத்த சிறகுகளையும் எப்படி!
முறித்துவிடுமிவ்வுலகு…?!
நசுக்கப்பட தலைகளும்!
வெட்டப்பட்ட கைகளும்!
வெடித்துச் சிதறிய மார்பும்!
மனதின் கருமை பூசிக் கொண்ட நிர்வாணமும்!
தனக்கான கேள்விகளை!
சுமந்துக் கொண்டுதானே மண்ணில்!
ரத்தத்தால் நனைக்கப் பட்டிருக்கிறது?!
இப்போதது தேசத்தின்!
விடியலை நோக்கி –!
நாங்கள் விட்ட உயிரின் ஈரத்தில் துளிர்க்கும்!
எம் தமிழீழ பிறப்பின் இறக்கைகளாக!
மேலிடப்பட்ட பிணக் குவியல்களை விளக்கிக் கொண்டு!
பிறக்கின்றன..தான், !
இருந்தும் -!
அவ்வப்பொழுது கைகோர்த்துக் கொள்ளும்!
தமிழரின் நிரந்தரமற்ற ஒற்றுமையுணர்வில்!
எந்த பாம்பும் பல்லியும் பயந்து -!
தன் வாலை சுழற்றிக் கொள்வதில்லையே; எங்கள் முன்!
மாறாக –!
அது எம் முகத்தின் மீதேறி!
தலை வரை கால்தூக்கிவைத்து மிதித்து – எம்!
சுதந்திரத்தை இம்சிக்க இம்சிக்க -!
ரத்தம் வழியும் முகத்தில்!
எம் விடுதலையின் கனவு!
அந்த பழங்கிணற்றின் அடியில் உடையும்!
நீர்குமிழியென உடைந்துதான் போகிறது…,!
இதலாம் கடந்தும்!
அக்கனவு உடையா விடியலொன்று!
மீண்டும் எம் ஈழ திசையில் பூக்கும்.. !
அந்த பூப்பின் வாசத்தில்!
தமிழின விடுதலையின் குரல் - பெரும்!
சப்தமாக ஒருநாள் உலகெங்கும் கேட்கும்..!
கருப்பழிந்துப் போனதொரு விடுதலையின்!
வெளிச்சம் நிறைந்த காற்றொன்று எங்களின் -!
வெள்ளைக் கனவுகளின் மீது -!
தின்மமாய் பட்டுச் செல்லும்..!
ஒரு இனத்தின் விடியல்!
அன்று எங்களுக்காய் விடியும்!!!

நண்பனுக்கோர் கடிதம்

மாலியன்
உறவுகளின் அடைப்புக்குள் சுற்றிக்கொண்டிருந்தேன்!
சுற்றிலும் வேலிகளாய் மனிதர்!
வேலி தகர்ப்பு இந்தியத்தெருக்களில்!
என் புதிய அத்தியாயங்களுக்காய்!
நண்பர்கள் வந்தனர்!
இப்படித்தான் நீயும் நானும்!
சந்தித்துக்கொண்டோம்!
பல வேடிக்கை கதைகள் பேசினோம்!
ஈழவிடுதலையும் ரஸ்சியாவில் இருந்து!
அமெரிக்காவையும் அலசித்தொலைத்தோம்!
கற்பனைத் தொலைநோக்கியில்!
அண்டங்களின் அறியாத முகங்களை!
அறிய முற்பட்டோம்!
போயின நண்பனே யாவும்!
காலம் கொடிது வாழ்வின் துயர்களை!
மீண்டும் எமக்குள் புதைத்துக்கொள்ள!
திசைதப்பிய புலம் பெயர் பறவையாய்!
நீயும் நானும் எங்கோ தொலைந்தோம்!
மீண்டும் ஒருமுறை!
சில மாற்றங்களுடன் நானும் நீயும்!
தொலைந்துவிட்ட மகிழ்ச்சியுமாய்!
புதிய அத்தியாயங்களுக்காய் காத்திருக்கிறோம்!
பேசுவதற்காக அகதி வாழ்வு!
இலக்கியம் இனவாதம் தமிழ்!
பண்பாடு என்று வி£¤ந்துசெல்லும்!
மீள்வோம் நண்பனே !!
வானத்தின் எல்லைகளை!
தொடுவதற்காய் முறிந்துவிட்ட!
சிறகுகளை பழுதுபார்ப்போம்