விரல்களின் பயணம்.. விழித்துக்கொள்!
01. !
விரல்களின் பயணம் !
--------------------!
அவனின் அய்ந்து விரல்களும்!
அவசரமாக பயணம் செய்துக்கொண்டிருக்கிண்றன!
ஆறாவது விரலை நோக்கி!
அவனின் முதல் பயணம்!
பதிமூன்று வயதில் தொடங்கியது!
முப்பது வயதைக் கடந்தும்!
அவன் விரல்கள் செல்லும் பாதையில் மாற்றமில்லை!
ஆறாவது விரலைத் !
தொட்டவாரே தொடர் யுத்தம்!
இடை இடையை சில இடைவேலைகள்!
அய்ந்து விரல்களின் அரவணைப்பில்!
அடுத்த தலைமுறை ஆக்ரோசமாக வெளியேரியது!
எங்கள் பெண்டீரை கொன்று!
குவித்துவி;ட்டால் எங்கள் இனம்!
மறைந்துவடுமென்று கனவு கான்கிறாயா?!
மண்ணில் கலந்துள்ள !
அவள் செல்களை சென்றடைந்து!
என் தமிழினத்தை தளைக்கச்செய்யும்!
என் வீரியமுள்ள விந்துக்கள்.!
!
02.!
விழித்துக்கொள்!
-----------------!
அம்மா என் தாய்மொழி!
என்னம்மா?!
ஏண்டா,உனக்கு!
அதபத்தி இப்ப என்ன கவல?!
இல்லம்மா சொல்லும்மா?!
எதுக்குடா கேக்குற?!
எங்க வாத்தியார் கேட்டாரும்மா!
தமிழ்மொழின்னு சொல்லுடா!
நாம பேசர மொழி!
என்ன மொழிம்மா?!
அதுவும் தமிழ்தாண்டா!
தமிழ்மொழி பேசறவங்க!
தமிழர்களாம்மா?!
ஆமாண்டா!
இலங்கையில பேசர மொழியும்!
தமிழ்மொழியம்மா?!
ஆமாண்டா!
அப்ப அவங்க தாய்மொழியும்!
தமிழாம்மா?!
ஆமாண்டா!
அப்ப அவர்களும் !
தமிழர்களாம்மா?!
ஆமாண்டா!
அப்படின்னா ஏம்மா என்ன மாதிரி!
பள்ளிகூடத்துல தமிழ் படிக்கிற !
குழந்தைகளை இலங்கையில !
குண்டுபோட்டு கொல்றாங்க?!
சொல்லும்மா அப்படின்னா!
எங்களையும் கொன்னுடுவாங்கலா?!
சொல்லும்மா…!
எங்களையும் கொன்னுடுவாங்கலா?!
சொல்லும்மா…!
தமிழ் படிக்கிற குழந்தைகளையெல்லாம்!
குண்டுபோட்டு கொன்னுடுவாங்கலா? !
சொல்லும்மா…!
சொல்லும்மா…!
சொல்லும்மா…!
!
-கு.சிதம்பரம்,சீனா
கு.சிதம்பரம், சீனா