ஒரு ஊரிலிருந்து வருகிறாள்!
எனது ஊருக்கு மேற்காய் உள்ள ஊரில்!
ஒட்டிக்கிழங்கு!
பெரிய குளத்தில் பிடுங்கிய கிழங்கு!
கூவிவிற்று பசியாறும் கிழவி!
அவளோ செத்து மடிந்துபோய் இருப்பாள்.!
ஊர்விட்டு ஊர் தாவிப்போய் இருப்பாள்!
சாவுக்காவது போராடிக் கொண்டிருப்பாள்.!
நானோ நினைத்தக் கொண்டிருந்த மாதிரிகள்.!
இஸ்ஷராக் காலத்து இடியுரல் அரிசிச் சோறும்!
திரிகைக் கல்லு குரக்கன் கஞ்சும்!
தூள்!
குளிசை!
எண்ணெய்!
நாட்டு வைத்தியமும்!
அவளை வாழ வைத்துக்கொண்டிருக்கும்.!
இந்த மார்கழிக்கும் வந்துவிட்டாள் கிழவி!
அவள் சதை வற்றிய உடம்பைக்காட்டி!
அவளுக்கு சீவன் கிடந்தால்!
அடுத்த மாரிக்கும் வந்து போகட்டும்!
எனக்கும்!
காது!
கண்!
உடம்பெல்லாம் கிரந்தி பிடிக்கட்டும்.!
டீன்கபூர்!
• !
நன்றி-!
02021992 - வீரகேசரி
டீன்கபூர்