தினம் ஒரு கவிதை

Photo by Daniele Levis Pelusi on Unsplash

மரண ஒத்திகை

எனக்கான அழைப்பு வந்துவிட்டது!
கையூட்டு கொடுத்து காரியம்!
சாதிக்க முடியாது அங்கே!
நாட்கள் நத்தை போல்!
நகர்ந்ததாக நினைவிலில்லை!
எனது வாழ்க்கை கோப்பை!
நிரம்பி வழியவில்லை!
எனது மரணமொன்றும்!
உலகுக்கு இழப்பில்லை!
வாழ்க்கை என்னை!
சாறாகப் பிழிந்து!
என்ன சாதிக்க நினைத்ததோ!
துயரங்களை மூட்டையாகச் சுமந்து!
உடல் கோணிப் போனது!
எனது உறுப்புகள்!
எனது கட்டளைக்கு!
இணங்க மறுத்தன!
இவ்வுலகத்தில் எனது இருப்பு!
கேள்விக்குறியானது!
மரணத்திற்குப் பிறகு வாழ்வுண்டா!
என்ற கேள்விக்கு விடை!
கிடைக்கப்போகிறது!
வாழ்க்கையெனும் மைதானத்தில்!
மற்றவர்கள் கால்களில் உதைபடும்!
பந்தாகத்தான் இருக்க முடிந்தது
ப.மதியழகன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.