புணர்ச்சி - துவாரகன்

Photo by Sajad Nori on Unsplash

முற்றுப்பெறாத கதை !
இன்னமும் தொடர்கிறது. !
மிக அவசர அவசரமாக !
ஒவ்வொருவராக !
புணர்ந்து கொள்கிறார்கள்.!
புனிதம், அந்தரங்கம் எல்லாம் !
அவசர அவசரமாக !
தன்நிலை இழக்கிறது. !
வீரியம் குறைந்து விடும் என்பதற்காகவோ!
முதுமை வந்துவிடும் என்பதற்காகவோ!
அழகு குலைந்து விடும் என்பதற்காகவோ!
முழுதாக அவிழ்க்காத ஆடைகளோடு !
புணர்ந்து கொள்கிறார்கள். !
மூத்திரம் கழிக்கும் சந்துகளில்!
வெற்றிலைத் துப்பல் நிரம்பிய சுவர்களுக்கிடையில்!
மலக்குழிகளின் வாயில்களுக்கிடையில்!
வாத்ஸாயனரின் சூத்திரம் எல்லாம் பறந்து போக !
எல்லோரா ஓவியங்களின் காட்சிகள் எல்லாம் கழிந்து போக !
சொறிநாய்களும் !
விரல்கள் இழந்த குஷ்டரோகக்காரனும்!
வாயில் வீணீர் வடித்தபடி பார்த்துக் கொண்டிருக்க!
எங்கும் புணர்ச்சி. !
மூத்திரம் கழிக்கும் சந்துகளில்!
வெற்றிலைத் துப்பல் நிரம்பிய சுவர்களுக்கிடையில்!
மலக்குழிகளின் வாயில்களுக்கிடையில்!
இரவு அவசர அவசரமாக !
இருளை விழுங்கிக் கொள்கிறது. !
-துவாரகன்.!
140920060025
துவாரகன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.