தமிழ் கவிதைகள் - Page 351

தமிழ் கவிதைகள் - Page 351

ஆற்றிலிருந்து!
தோண்டப்படுகிறது மணல்!
அக்குழியிலேயே அவ்வாற்றை!
சமாதியாக்க!!
*!
வெள்ளி ஒட்டியாணமாய்!
ஆறு ஓடிய!
எம் ஊரின் தெருவெல்லாம்!
தண்ணீருக்காய்!
பிளாஸ்டிக் குடங்களின்!
தவங்கள் இன்று!!
*!
கால் நனைத்து!
மனம் சில்லிடவைத்த!
ஆற்றை இன்று கடக்கையில்!
தட்டிவிழ வைக்கிறது - பல் இளிக்கும்!
அதன் விலா எலும்புகள்!!
*!
ஊருக்கே தண்ணீர் கொடுத்த ஆற்றுக்கு!
நாக்கு வறண்டு கிடக்கிறது!
ஒரு குவளை தண்ணீர் தர யாருமில்லை;!
தண்ணீரும் இல்லை!!
*!
கிராமத்துக்கு செல்லுகையில் எல்லாம்!
ஏதாவதொரு மாற்றம் கண்ணில் படும்!
ஆனாலும்,!
பளேரென இதயத்திலேயே அறையும்!
ஆற்றின் ஆழம்!!
*!
முந்நாட்களில்!
தொப்பென குதிக்கையில்!
கால் சல சலக்க நடக்கையில்!
தவம் கலைந்த!
அவசரத்தில் பறந்த கொக்குகள்;!
வற்றி நிற்கும் ஆற்றோரம் உலாத்துகையில்!
பேர பிள்ளைகளுக்கு!
பழைய கதைகள் சொல்லி செல்லக்கூடும்!
என்னைப் போலவே
என் பாலைவனப்பயனத்தில் ஒரு நாள்!
மல்லிகைச் செடியைக்கண்டேன்!
மல்லிகையும் பூத்திருந்தது!!
முகர்ந்தேன் மணல் வாசம்!
அதைச்சொல்லிக்குற்றமில்லை!
நீருண்டு வாழ்ந்திருந்தால்!
நீர் வாசம் வீசும்,இது!
மணலுண்டு வாழ்ந்ததால்!
மணல் வாசம் வீசுகிறது!!
ஊரிலும் இதை உணர்ந்தேன்!!
உண்ணும் உணவிலும்!
உடுக்கும் உடையிலும்!
மனைவியின் அணைப்பிலும்!
மகளின் முத்தத்திலும்!
ஆக மொத்தத்திலும் மணல் வாசம்!!
மீன் விற்ற காசு நாறுகிறதோ இல்லயோ!
மணல் தேசக்காசு மணல் வாசம் வீசுகிறது!!
மனைவியிடம் சொன்னேன்!
அதற்கு மறுமொழி சொன்னாள்,!
'உங்களுக்கு வீசுவது மணல் வாசம் ஆனால்!
உங்களிடம் வீசுவது பண வாசம்.....!
வேறு வேலையைப்பாருங்கள், !
இன்னும் இருப்பது ஒரு மாசம்!'!
-- கோ.சிவசுப்ரமணியன்!
சௌதி அரேபியா

தடங்களழியும் பொழுதிலுன் நேசம்

வெப்பக்கணப்பொழுதின்!
ஆவியேற்றப்பட்ட மேகப்பொதியை!
மண்டைக்குள் பிதுக்கியடைத்ததாய்!
பேய்க்கனம் கனக்கும் !
இருவிழியும் மிகக்கலங்கி!
தலைக்குள் வலியெடுக்கும்!
மரணத்தின் எல்லையில்!
ஆரம்பிக்கும் பாடலெனது !!
!
எந்தப்பொழுதொன்றில்!
என் பெயர் சொல்லியழைக்கின்றாய் ?!
ஒரு கோடிக்கீற்றுக்களும்!
எனக்கு மட்டுமேயான!
அந்தகாரத்திலொரு பகுதிக்கேனும்!
ஒளியினை வழங்கமுடியாப்பட்சத்தில்!
எந்த நம்பிக்கையிலெனை!
வழி தொடருகிறாய்...?!
!
ஒப்பாரிக்கவி மட்டுமே பாடும்!
ஒரு குயிலின் ராகத்தை!
எந்தக்காற்றின் தேசத்திற்குள்!
சிறையடைக்கப் பார்க்கின்றாய்?!
அல்லது!
எந்தக்காலத்தினறைகளுக்குள்!
ஒளித்து வைக்கப்போகின்றாய்...?!
!
உலகத்திலெனதிருப்பு!
இந்நாள் வரை மட்டும்தானென!
முடிவானதன் பிற்பாடுமதனை!
மாற்றமுடியுமெனில் மட்டுமிங்குனக்கு!
இருதுளிக் கண்ணீர் விடலாம் !!
!
எனினும்,!
கரையானாய்க் குடிபுகுந்து!
மூளைக்குள் அரித்தெடுக்கும்!
வலியுணர்ந்தவன்(ள்) நீயல்ல !!
!
-எம்.ரிஷான் ஷெரீப்,!
மாவனல்லை,!
இலங்கை

அழகுச் சொல்லொன்று வேண்டும்

அழகுச் சொல்லொன்று வேண்டும்!
அறிவெது சொல்லிடத் தான் வேண்டும்!
இழியது இவ்வுலகில் இல்லை!
இயற்றிய பொருளில் வாழ்ந்தால்!
என்று சொல்லிடவும் வேண்டும்!
தொடர்கதை போலன்று வாழ்வு!
விட்டுத் தொடர்ந்திட முயன்றால்!
துரத்திடும் சாவு!
என ஓதிடவும் வேண்டும்!
கொடியது இவ்வுலகில் இல்லை- அனைவரும்!
கொற்றவர் ஆவதும் இல்லை - வாழ்வில்!
தோல்வி என்பது இல்லை - வாழ்வை!
வென்றார் எவரும் இல்லை!
என ஓங்கி உரைத்திட வேண்டும்!
அன்பைச் சொல்லிடவேண்டும்!
ஆனந்தம் எதுவென்றும் சொல்லும்!
அழகுச் சொல்லொன்று வேண்டும்!
செந்தமிழ்ச் சொல்லொன்று வேண்டும்!
சென்னியில் உரைத்திட வேண்டும்

நிற்காமல் நின்றுகொண்டு

பள்ளி விட்டதும்!
எங்கும் நிற்காமல்!
வீட்டுக்கு வந்துவிடு!
அம்மா சொன்னது!
மனதில் ஒலித்தது!
காத்திருந்தேன் பேருந்துக்காக!
இருட்டியதும் வந்தது!
பேருந்து இறுமாப்புடன்!
இடம் கிடைக்குமா என்ற!
ஏக்கத்துடன் படியில்!
உந்தி ஏறியதும்!
நிற்காமல் பறந்தனர்!
நடத்துனரும் ஓட்டுனரும்!
மதியம் உண்ட களைப்பில்!
மயங்கிப்போய் நான்!
இருக்கையில் இருக்க !
இடமில்லாமல்!
நின்று கொண்டே விழுந்தேன்!
தூக்கம் சொக்கியதும்!
இடம் வந்ததும்!
இறங்கிக்கொண்டேன்!
எதுவுமே தெரியாத இருட்டு!
இருந்தாலும் கண்டேன்!
தெரியாத தெருவும்!
எரியாத விளக்கும்!
அதற்குத்தான்!
தெருவிளக்கென்று பேரோ?!
கும்மிருட்டில் காத்திருந்த!
சிற்றொளிக் கைவிளக்கு!
தம்பி என்று தழுவிக்கொண்டது!
என் தாய்.!
!
-அத்திவெட்டி ஜோதிபாரதி

பிறவாத மகளுக்கு

பரவசம் அளித்திடும் நீ உயிர்த்தெழும் தருணத்தை!
சிலிர்ப்புடன் உணர்ந்திட துடித்திடும் தாய் நான்!
கிளி என மிழற்றிடும் உன் கனி மொழி அமுதினை!
களிப்புடன் பருகிட தவித்திடும் தாய் நான்!
நான் உணர்ந்திடும் அனைத்தையும் உனக்குள்ளே விதைத்திட!
அடங்கொனா ஆவலில் திளைத்திடும் தாய் நான்!
என் விழி எனும் வாசலில் கனவுகள் பயிரிட!
வெற்றிடம் நிரப்பிட விரைந்து வாராயோ

வாழ்க்கை.. துப்பாக்கிகள்.. வாழை குலை

வாழ்க்கை!
------------!
எப்போதும்!
வேர்களின்!
நம்பிக்கையில் இறுமாப்புடன்!
நிற்கும்...!
புயல்!
வந்து மோதினாலும்!
வெற்றிவீரனாகவே சாயும்..!
நாணல்!
மரத்தைப் பார்த்தே கிண்டலடிக்கும்..!
தன்னைப்போல்!
இரு...!
வாழலாம்...!
பூக்கள்!
வண்டுடன் காமுற்ற!
போதையில்!
கிடக்கும்..!
இலைகள் யாராவது !
உரசமாட்டார்களா !
என்று சிலிர்த்து !
நிற்கும்...!
சருகாவதற்குள்!
வாழ்வை !
அனுபவித்துவிடும் துடிப்பு...!
மரம்!
தன்னில் !
முளைத்தவற்றைப் பார்த்து !
சிரித்துக் கொண்டாலும்!
மௌனமாகவே!
நிற்கும்..கம்பீரமாக..!
இலைகளும்..பூக்களும்!
விசுவாசமாகவே!
இருக்கும்!
என்கிற!
நம்பிக்கையில்!
குருவிச்சை!
ஒட்டி!
முளைத்ததை!
அறியாமாலேயே வளர்ந்தது.!
பூக்களின்!
காமம்,!
இலைகள்!
குருவிச்சையுடனான !
உரசல்..!
மரத்தை!
வெட்டிச் சாய்க்க!
சரிந்து வீழ்ந்தது...!
வேர்கள்!
மட்டும் கவலைப்படாதே...!
இதுதான் வாழ்க்கை...!
நானிருக்கிறேன்..!
என்னிலிருந்து!
புதிதாய்!
வீச்சுடன் மரம் !
முளைக்கும் என்றது....!
02.!
துப்பாக்கிகள்!
----------------------!
துப்பாக்கிகள் கூட!
அகிம்சை !
பற்றி !
போதிக்கிறது.!
சமாதானம் பேசிய படியே!
எங்களூரில்!
இயந்திர வாகனங்கள்!
வந்தன..!
குழந்தைகளின் தலைகளை!
நெரித்தபடி..!
இராணுவம்!
வயிற்றை கிழித்து!
பயங்கரவாதியைத் தேடுகிறான்..!
வகுப்பறையில்!
தலமைஆசிரியர் முன் நின்றேன்!
எங்கு!
குண்டு வைத்தாய் !
என்ற விசாரனைக்காக...!
நீ சுட்டாய்..!
தீவிரவாதி என்று நீயே!
சொல்லிக்கொள்கிறாய்..!
ஆமாம் என்கிறார்கள்!
அண்டி நிற்பவர்கள்.!
இறந்த பின்!
எந்த உடன்படிக்கையின் கீழ்!
என்!
பிணத்தை!
விசாரனை செய்யப்போகிறீர்கள்?!
03.!
வாழை குலை!
---------------------!
வாழை குலை!
தள்ளி!
மகிழ்ச்சியாய்!
முற்றத்தில் நின்றது.!
கிணற்றடியில்!
நின்று வாழையைப் !
பார்த்தால்!
அப்பாவின் முகத்திலும் மகிழ்வு!
பொங்கும்...!
உறவுகள்!
விரதம் என்று !
இலைகளை வெட்டிச் செல்வர்.!
தங்கை!
கணவனுக்குப் பிடிக்கும்!
என்று!
பொத்தியை !
கொண்டு சென்றாள்.!
மிச்சமிருந்த குலையை !
மருமக்கள் உரிமையுடன்!
பங்கு போட்டனர்.!
போதாதற்கு-!
வாசிகசாலைக்காரரும்!
விளக்கீட்டுக்கென!
குத்தியை வெட்டிச் செல்ல!
மொட்டையாய் !
அந்த வாழை மரம்..!
அப்போதும் அப்பா !
சிரித்தபடியே இருந்தார் !
புகைப்படமாய்
வார்த்தைகள் தவமிருக்கும் கூடாரம்!
வாழ்க்கை நமக்களித்த இளைப்பாறுதல்!
உள்ளத்தை வெளிப்படுத்தும் உணர்வலைகள்!
கால வெள்ளத்தால்!
அழியாத கனவு பெட்டகம்!
காலத்தின் கண்ணாடி!
கற்பனைகளின் முன்னோடி!
நிறைவேறா ஆசைகளின்!
நிழல் வடிவம்!
உள்ளதை உரைத்து!
நல்லதை விதைக்கும் நல் ஆசான்!
அல்லவை போக்கி!
நல்லவை தரும் நண்பன்!
உன்னதத்தை நோக்கிய பயணம்!
உயர்வைதேடும் இமயம்!
வார்த்தைகளை இணைக்கும் விளையாட்டு!
வருங்காலத்தை பாடும்!
வசந்த ராகம்!
கோடையில் வீசும் தென்றல்!
குளிர்விக்க வந்த மலைச்சாரல்!
எழுத்துக்களை மாலையாக்கி!
சிந்தனையை சீர்படுத்தும் பூஞ்சோலை

தெய்வம் தெரிய மனிதம் தொழு

புண் போல மனசு முள்போல எண்ணம் !
எல்லோருக்குமே குத்தும் வாழ்க்கை,!
இங்கே யார்மேல் வருந்தி !
யாருக்கென்னப் பயன்.. ?!
ஒரு சொட்டு உண்மை !
சிறுதுளி கருணை !
உருகாத மனசுருக; உள்ளேப் !
பேரன்பு ஊறாதோ...?!
கோபத்தை முட்களுள் தொலைக்கும்!
நினைக்க மனசு துடிக்கும் !
மன்னிப்பில் எல்லாம் மறக்கும்!
மனசெங்கும் வாராதோ... ?!
அன்பிற்கே அணங்கும் உடம்பு!
அடுத்தவற்கழவே கண்ணீர்!
கொடுக்க உயிர்!
கொஞ்சும் தீண்டலில் கொடுவாள் உடையாதோ...?!
கைத்தடிபோல் பெரியோர்!
ஊனியெழ பாடம்!
விளங்கிக்கொள்ள வலி!
வாழ்க்கை' திருத்தத்தைத் தாராதோ...?!
திட்டம் விடு இயல்பு உணர்!
திருப்பி அடித்தாலும்!
திருத்த யோசி!
திருந்தா உள்ளமும் வலிக்காதோ...?!
நல்லது செய்!
கெட்டதைத் தவிர்!
கல்லுக்கும் புல்லுக்கும்கூட!
மனதைத் திற; சமயம் சொல்படி கேளாதோ...?!
மொத்தத்தில் - சுயநலம் விடு!
மனிதம் கொள்!
மனமாசு அறு!
மறுபக்கமிருக்கும் தெய்வம்; தோல்வியை மற!!!

இதமாய் இனிக்கிறது

ஒருமுறை உன்னை பார்த்தேனே -என் !
இதயம் உடைந்ததடி !
மறுமுறை உன்னை ரசித்தேனே -என் !
இளமை கொல்லுதடி !
நீ முத்தம் சிந்தவில்லை - ஆனால் !
இதமாய் இனிக்கிறது !
நீ கவிதை பேசவில்லை -ஆனால் !
மனசும் இசைக்கிறது !
விழியினில் விழுந்திட்ட ஒரு விதை நீ !
நினைவினில் வளர்ந்திடும் ஒரு செடி நீ!
உயிரினில் உலவிடும் ஒரு மதி நீ!
உதட்டினில் பிறந்திடும் ஒரு மொழி நீ!
பூக்களின் இதழில் உந்தன் வதனம் !
நிலவின் மடியில் உந்தன் புருவம் !
கண்களை திறந்தாய் பகலின் ஜனனம் !
கூந்தலை கலைத்தாய் இரவின் மரணம் !
காதல் செய்தேன் உன்னை மட்டும் !
கனவில் காப்பேன் உன்னை மட்டும் !
நெஞ்சில் சுமந்தேன் உன்னை மட்டும் !
என்னுயிர் கொடுப்பேன் உனக்காய் மட்டும் !
முளைக்கின்ற தடங்களில் இருப்பிடம் அமைத்தேன் !
சிரிக்கின்ற விழிகளின் புதுமொழி படித்தேன் !
தவிக்கின்ற நிழலிடம் முகவரி கொடுத்தேன் !
பிரிகின்ற நொடியினில் என்னுயிர் விடுவேன்
India T-shirts - Buy Indian Flag Collections