தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

அனிச்சை வால்கள்

ரவி அல்லது
எப்படி
சொன்னாலும்
புரிய மறுக்கிறது
நாய்.
நன்றி கெட்டவர்கள்
நாங்களென.

நிச்சலனமற்ற நிதானப்பொழுதினில்

ரவி அல்லது
ஓரமாக
நடந்து பழகிய
கால்களின் கால்கள்தான்
உங்களின் பாதைகளில்
நடக்கத் துவங்கியது
இனத் துவக்க எழுச்சியாக
ஏக்கச் சுவை மொட்டுகளுக்கு
நம்பிக்கை
ஆசுவாசங்களைத் கொடுத்து.

இணக்கப் பயணத்தில்
எதிர்கொண்ட
இன்னல்கள் ஏராளம்
எப்பொழுதும்
சகோதர
திசை மாற்றி
சந்தர்ப்ப குதறலின்
தந்திரக் குழிகளால்
நிறைந்திருந்த
ஆதுரம் மேவியதான
உங்களின்
அத்தனை
அங்கலாய்ப்புகளுக்கு
இடையிலுமான
பரிவு.

யாதொரு குற்றமற்று
எம்மால்
நிகழ்ந்த மாற்றங்கள்தான்
வரலாறாகி இருக்கும்
பளபளப்பு
அடையாளங்கள்.
பகட்டுப் பொய்களில்
நீங்கள்
பாராளும்பொழுதும்
இயல் உண்மையாக.

தொடத் தயங்கியவைகளின்
லயம் கூட்டிய
இசையில் தான்
இப்பொழுது
நீங்கள்
கட்டுண்டு கிடக்கிறீர்கள்
வாயில்
வேதக்கவசங்களைத்
தரித்தாலும்.

நெருப்பாற்றில்
நீந்திய
எமக்குப்
புரிகிறது.
நீங்கள்
நீதி பரிபாலன
பொய்களில்
நூல் பிடித்து
தப்பித்துக் கொள்ளும்
நுண்ணறிவுகளால்
நிறைத்திருப்பது
தந்திரோபாய
தகிடுதத்தங்களில்
தலை சிறந்வர்களென்பதால்
மட்டுமல்ல
அதிகார துணைகொண்டே
அநீதமிழைத்தவர்கள் என்பதாலும்.

வென்று கொண்டிருக்கும்
இவ்வேளையில்
கொன்றழித்த
கோபத்திற்கு
சிறை நிறைப்போமென்ற
உங்களின்
சின்னப் புத்தி
புரிகிறது
எமக்கான
நிதானப் பாடுகளில்.

வஞ்சகத்தில்
வீழ்ந்து
வழி வழியாக
வீறு கொண்டு
பெரு நாச
பேராயுதம் எடுக்கவிட்டபோதும்
பாடிப்பாயுதம் ஏந்தி
பாதிபேர்
பயணிக்கிறார்கள்
வெல்லும் கலையை
கற்று
நாங்கள்
வெகு நாட்கள் கடந்திருப்பதால்.

முக்காட்டு தேவதைகள்

எம்.ரிஷான் ஷெரீப்
தீயெரித்த வனமொன்றின்!
தனித்த பறவையென!
வரண்டு வெடித்த நிலமொன்றின்!
ஒற்றைச் செடியென!
சாக்காட்டுத் தேசமொன்றிலிருந்து!
உயிர் பிழைத்தவள்!
நிறைகாதலோடு காத்திருக்கிறாள்!
அவன் சென்ற அடிச்சுவடுகளில் விழிகள்!
சோரச் சோரச் சொட்டுச் சொட்டாய்க்!
கண்ணீர் தூவி நிறைத்து!
பொழுதனைத்தும் துயர்பாடல்கள் இரைத்து!
எண்ணியெண்ணிக் காத்திருக்கிறாள் !
பிரவாகங்கள் சுமந்துவரும் வலிய கற்களும்!
ஒலிச் சலனத்தோடு நகர்கையில்!
தொன்ம விடியலொன்றில் நதியோடு மிதந்த!
இலையொன்றின் பாடல்கள் குறித்துக்!
காற்றிடமோ நீரிடமோ குறிப்புகளேதுமில்லை!
அவளது தூய காதல் குறித்தும்!
அவளைத் தவிர்த்துக்!
குறிப்புகளேதுமற்றவளானவளிடம்!
ஏதும் கேட்டால்!
வெட்கம் பூசிய வதனத்தை!
திரையை இழுத்து மூடிக் கொள்கிறாள்!
நிரம்பி வழியத் தொடங்கும் கண்களையும் !
அவன் போய்விட்டிருந்தான்!
அச்சாலையில் எவரும் போய்விடலாம்!
மிகுந்த நம்பிக்கைகளைச் சிதைத்து!
ஏமாற்றங்களை நினைவுகளில் பரப்பி!
துரோகங்களால் போர்த்திவிட்டு!
அவனும் போய்விட்டிருந்தான்!
அதைப் போல எவரும் போய்விடலாம்!
தூய தேவதைகள் மட்டும்!
என்றோ போனவனை எண்ணிக்!
காத்திருப்பார்கள் என்றென்றும்

இடர்மழை

எம்.ரிஷான் ஷெரீப்
நமக்கிடையே வான் தெளித்த!
அடர்த்தியான மழையைத் தவிர்த்து!
வேறெவருமிருக்கவில்லை!
தூறல் வலுத்த கணமது!
வீதியின் ஒரு புறத்தில் நீ!
இதுவரை கவிழ்ந்திருந்த தலையை!
முக்காட்டுக்குள்ளிருந்து நிமிர்த்தி!
எதிரே வருமென்னைப் பார்க்கிறாய் !
காற்றடித்து வலுத்த மழைக்குத் தப்பியோட!
நானிருக்கும்போது நீ முயற்சிக்கவில்லை!
உன் நாணத்தை முழுமையாக வழித்தெறியத்!
தூறலுக்குத் தெரியவுமில்லை !
உன்னிடமோ என்னிடமோ!
அந்திவேளையின் மழையை எதிர்பார்த்த!
குடைகள் இல்லை!
வானிலிருந்து பொழியும் நீர்த்துளிகளைத் தடுக்க!
மேனிகளுக்குத் தெரியவுமில்லை !
இத்தனைகள் இல்லாதிருந்தும்!
ஆண்மையென்ற பலமிருந்து நான்!
அருகிலிருந்த என் வீட்டிற்கு ஓடுகிறேன்!
காற்சட்டையில் சேறடித்திருக்கக்!
கவலையேதுமில்லை!
தேய்த்துக் கழுவ அம்மா இருக்கிறாள்!
நான் மறையும்வரை காத்திருந்து நீயும்!
புத்தகங்களை நெஞ்சில் அணைத்து!
பேருந்து நிறுத்தம் நோக்கி!
ஓடத்துவங்குகிறாய் !
திரைக்காட்சிகளில் வரும்!
அழகிய இளம்பெண்களின்!
மழை நடனங்கள் பற்றிய கனவுகளோடு!
யன்னல் வழியே பார்க்கிறேன் உன்னை !
ஆங்காங்கே ஒழுகிவழியும்!
பேரூந்து நிறுத்தத்துக்குள்!
நீ முழுவதுமாக நனைந்திருக்க!
அடிக்கடி பின்னால் திரும்பி!
சேற்றோவியம் வரைந்திருந்தவுன்!
நீண்ட அங்கியைக் கவலையுடன்!
பார்த்தவாறிருக்கிறாய்!
தேய்த்துக் கழுவுவது நீயாக இருக்கக்கூடும்

உஷ்ண வெளிக்காரன்

எம்.ரிஷான் ஷெரீப்
கொதித்துருகும் வெயிலினை!
ஊடுருவிக் காற்றெங்கும்!
பரந்திடா வெளி !
வியாபித்து!
ஊற்றுப் பெருக்கும் புழுக்கம் !
வெப்பம் தின்று வளரும்!
முள்மரங்கள்!
நிலமெங்கிலும்!
கனிகளைத் தூவுகின்றன !
உச்சிச் சூரியனுக்கும்!
வானுக்கும் வெற்றுடல் காட்டி!
நிழலேதுமற்று கருகிய புல்வெளியில்!
ஆயாசமாகப் படுத்திருக்கும்!
சித்தம் பிசகியவன்!
புழுதி மூடிய பழங்களைத் தின்று!
கானல் நீரைக் குடிக்கிறான் !
கோடை!
இவனுக்காகத்தான் வருகிறது போலும்

அன்பளிப்பு!

வரதப்பிரியை
பெற்றோர்க்கு பெருமையை அன்பளித்தாய்!
உற்றார்க்கு உயர்ச்சியை அன்பளித்தாய்!
ஊருக்குமகிழ்ச்சியை அன்பளித்தாய் - எனக்கோ !
வாழ்க்கையையே அன்பளித்தாய்!!
எத்தனை அன்பளிப்புகள் நீயெனக்குத் தந்தாய்-உன்!
அன்பை விட இவையெல்லாம் பெரிதோ என்றேன்!
அன்பின் அடையாளம் அன்பளிப்புகள் என்றாய்!
உன் உரிமை என்றாய்; கடமை என்றாய்;!
என் அன்பின் அடையாளமாய் எதை தந்தால்!
உன் அன்பிற்கு ஈடாகும் என்றே நான் சிந்தித்தேன்!
உயிரை விட உயர்ந்ததான என் காதலைத் தவிர!
உயர்வாக வேறெதுவும இல்லை என்னிடம் !
களங்கமில்லா என் காதலை ஏற்றுக்கொள் என்னுயிரே

புரிதல்

சினேகா மணிவேல்
வீட்டுடன்
சுவற்றுடன்
காற்றுடன்
மழையுடன்
புத்தகங்களுடன்
பேனாவுடன்
வானத்துடன்
மேகத்துடன்
நிலவுடன்
பூக்களுடன்
விலங்குகளுடன்
பறவைகளுடன்
இன்னும் எதன் எதனுடனோ
நன்றாக பேச தெரிந்த எனக்கு
ஒன்றை பேசினால் மற்றொன்றைப் புரிந்துகொள்ளும் மனிதர்களிடத்தில் மட்டும் பேசவே தெரியவில்லை!..

நீ

செ.இராமதனவந்தினி
நீ!!
என் மழை நாட்களின்
இருளை விழுங்கி
என்னை ஆர்ப்பரிக்க வைக்கும்
என் வனப்பான வானவில்

நீ!!!
என் வசந்த காலங்களின்
மிச்ச சொச்ச நினைவுகளை
பத்திரப்படுத்தும்
என் அமுதான தேனீ

நீ!!
என் பின்பத்தை மட்டுமே
சுகமாக விழுங்கும்
என் வீட்டு நிலைக்கண்ணாடி


நீ!!!
நடுங்கும் குளிரில்
என்னை ஆரவரம்
இல்லாமல் அரவணைத்து
ஒரு கோப்பையில் அன்பை தேக்கி
கசப்புகளை தனியே வடிகட்டும்
அன்பான தேநீர்....

நீ!!
நான் என்பதை
அடிக்கடி நினைவு படுத்தும்
என் அழகான நினைவோடை!!

நீ!!!
நான்!!
நாம்!!!

பிரளயம்!

இன்பசுதேந்திரன்
அந்த வறண்ட!
வான் நிலத்தில்!
மின்னல்கள்!
வேர்களாய்த் துளிர்விட்டு!
சூய மரமாகி!
ஒளிக்கதிர்கள்!
கிளைகளாக விரிந்தபோது!
வானவில்லாய்!
நிறம் மாறி உதிர்ந்த!
இலைகளின்அசைவில் மேகக் கூட்டங்களின்!
திரை விலக.....!
நட்சத்திரப் பூக்களின்!
நிழலில்!
பல கோள்களும்!
சுழல!
வளர்ந்து!
தேய்ந்து கொண்டிருந்த!
அந்த நிலவின் கூட்டில்.........!
காயமில வாயுக்களும்!
பிராண வாயுக்களும்!
புணர்தலும் புணர்தல்!
நிமிர்த்தமான வேளையிலே!
எறிகற்களின் விழுதுகள்!
ஒன்றுடன் ஒன்று!
ஒன்றி உரச!
எறும்புக் கூட்டங்கள்!
தனது கருமுட்டைகளோடு!
அதள பாதளம் நோக்கி!
பூமியைக் குடைந்தபோது!
விஞ்ஞான மனிதர்கள்!
உருவாக்கிய ஏவுகணை!
முடியைத் தேடிப் பறந்தன!
பன்றி வேடமிட்ட!
மனிதர்கள்!
கடவுளின் கால் தடத்தைத்!
தேடி அலைந்தனர்......!
இயற்கையின் பிடியில்!
இறுகிய!
இந்தப் பூமியின்!
தொங்கு தோட்டமான!
சகாரா!
சாகா வரம் பெற்ற!
திரிசங்கு சொர்க்கம்

மிரள வேண்டாம்! இவர்கள் வெறும் மனிதர்கள்!

இன்பசுதேந்திரன்
சூரனுக்கு!
ஒரு!
வேலாயுதம்!
இரண்யனுக்கு!
ஒரு!
சிங்க முகம்!
சிரித்து எரிப்பதற்கு!
ஒரு!
திரிபுரம்!
சாத்தானை!
விரட்ட!
புனித நீர்!
அவதாரங்களே உங்கள்!
ஆயுதங்களால்!
எதிரிகளைத்தானே கொன்றீர்கள்!
இவர்களின் ஆயுதங்களோ!
எதிரிகளின்!
இனத்தையே கொன்று குவிக்கிறது!
இதையெல்லாம் கேட்டு!
மிரள வேண்டாம்!
இவர்கள் வெறும்!
அணுக்குண்டு மனிதர்கள்!