வெற்றியில் கிறக்கம் - ராமலக்ஷ்மி

Photo by Tengyart on Unsplash

இலக்கைத்!
தொட்டு விட்ட!
புள்ளியில் நின்று!
தன்னை மறப்பதும்!
தற்பெருமை பேசுவதும்!
சிறையில் இருப்பவன்!
அறையின் விசாலத்தை!
சிலாகிப்பதாகாதா?!
அடைந்த உயரம்!
அளிக்கலாம் ஊக்கம்!
ஆனால் அதுவே!
தரலாமா தலைக்கனம்?!
பரந்தது உலகம்!
உணர்வது முக்கியம்;!
வெற்றியில் கிறக்கம்!
வீழவும் வைக்கும்.!
எத்தனை நேரம்தான்!
ஏந்தியே நிற்போம்?!
கிடைத்த கோப்பையை!
கீழே வைத்துவிட்டு!
வந்த பாதைக்குஒரு!
வணக்கம் சொல்லிவிட்டு!
இந்தப் பக்கம்!
திரும்பினால்தானே-!
தென்படும் தூரத்தே..!
சவாலாய் நமக்குக்!
காத்திருக்கின்ற!
அடுத்த இலக்கு?
ராமலக்ஷ்மி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.