நான் நானாக இருந்தபோது!
நலமாகவும் இருந்தேன்!
என்வீட்டு மாங்காயை!
எவனையோ பறிக்கவிட்டு!
அடுத்தவீட்டு மாங்காயை - நான்!
பறித்து அடிவாங்கி…….!
அப்போதும்!
இன்னும்பிற வெளியில்!
வெக்கக் கேடுகள்!
சொல்ல முடியா!
நடந்த போதும்…….!
நான் நானாக இருந்தேன்!
நலமாகவும் இருந்தேன்!
பிறகெப்போது!
என்வீட்டுக் கண்ணாடி- எப்போது!
என்னை அழகாகக்!
காட்டியதோ அப்போது!
நான் நானாகவும் இல்லை……!!!!!
நலமாகவும் இல்லை……….!!!!!
!
-கண்டனூர் சசிக்குமார்
கண்டணூர் சசிகுமார்