தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

அகந்தை கொள் ஆனால் ஆணவம் கொல்

பா நந்தன்
என்ன நண்பனே, !
ஏன் மகுடம் கழற்றுகிறாய்? !
இன்னும் யுத்தம் முடியவில்லை... !
சிரச்சேதம்கூட நிகழலாம் !
சிந்தைக்குதான் சேதம் நேரக்கூடாது !
மறைக்குதான் மரணம் சம்பவிக்கக் கூடாது. !
கவலைப்படாதே நண்பா... !
எத்தவறும் காலப்போக்கில் சரியாகும் !
எச்சரியும் காலப்போக்கில் தவறாகும். !
சதை தொடுவதிலும் !
உதை படுவதிலும் அல்ல !
வதை வெல்வதில்தான் உள்ளது !
வாழ்க்கை! !
இன்று அவர்கள் !
வென்றிருக்கலாம்... !
நன்றிகூறு அவர்களுக்கு !
வாழ்த்தோடு சேர்த்து !
உனது நிரந்தர வெற்றிக்கு வெறியுடன் !
உழைக்க உத்வேகம் கொடுத்ததற்கு! !
!
தெரிந்து கொள் !
தோல்விக்குப்பின் பெறும் !
வெற்றிக்குத்தான் அதிக சுவையுண்டு. !
அவநம்பிக்கை கொள்ளாதே !
உன்னை நீ நம்பாவிடில் !
ஊர்மட்டும் நம்புமா? !
உன்மேல் உனக்கு நம்பிக்கையிருந்தால் !
ஊர் நம்பாததைப்பற்றி கவலை !
உனக்கெதற்கு? !
தன்னம்பிக்கையானது !
உன் திறமை !
உனக்கு சூட்டும் !
கர்வ கிரீடம்! !
முட்டி முட்டி பாறையைப் பிளந்தால்தான் !
நீ விதை !
முயலாமல் இருந்தால் நீ மூச்சுமட்டும் விடும் சதை! !
கர்வம் கொள் உன் திறமை மீது. !
அகந்தை கொள் !
ஆனால் !
ஆணவம் கொல். !
அகந்தையின் கர்பத்தில் அவதரி !
ஆணவத்தை கல்லறைக்குள் அவிழ்த்தெறி. !
மற்றவன் திறமையை மட்டம் தட்டாதே !
ஆனால் விமர்சனம் செய்! !
உன் திறமையை உயர்த்திப் பேசு !
ஆனால் குற்றமிருப்பின் ஏற்றுக்கொள்! !
தற்பெருமை கொண்டவனென ஏசும் !
திட்டி திட்டியே பழகிய இந்த !
திமிர்பிடித்த சமுதாயம்! !
சமுதாயத்தை நீ திருப்பித் திட்டு !
முதலில் அலட்சியத்துடன் பார்க்கும் !
பின் அச்சத்துடன் !
பின் அர்த்தத்துடன் !
கடைசியில் !
சமரசம் பேச வரும் !
சாமரம் வீச வரும். !
பின் உலகம் உன்னை நம்பட்டும் !
தாமதமாய் உன்னை தரிசித்ததற்காக !
வெற்றி வெம்பட்டும்! !
முடியும் என்பது !
எல்லோராலும் முடியும் !
முடிப்பது மட்டும் !
உன்னால்தான் முடியும். !
ஆகையினால் !
அகந்தை கொள் !
ஆனால் !
ஆணவம் கொல். !
- பா நந்தன்

எனது மனங்கொத்திப் பறவை

ரவி (சுவிஸ்)
இன்று நான் சந்தோசமாயிருக்கிறேன்!
எனது பிரிய மனங்கொத்திப் பறவையின்!
மீள்வரவில்!
நான் இலேசாகிப்போயிருக்கிறேன்.!
நான் எதையும்!
விசாரணை செய்வதாயில்லை.!
ஏன் பறந்தாய்!
ஏன் எனைவிட்டு தொலைதூரம் பயணித்தாய்!
என்பதெல்லாம்!
எனக்கு பொருட்டல்ல இப்போ.!
என் பிரிய மனங்கொத்தியே!
நீ சொல்லாமலே பறந்து சென்ற!
காலங்கள் நீண்டபோது!
என் மனதில் உன் இருப்பிடம்!
பொந்துகளாய்!
காயங்களாய் வலிக்கத் தொடங்கியதை!
அறிவாயா நீ.!
நீ அறிந்திருப்பாய்!
நீ இரக்கமுற்றும் இருப்பாய்.!
மீண்டும் உன் கொத்தலில்!
இதமுற்றிருக்கிறேன் நான்!
கொத்து!
கோதிவிடு என் மனதை!
இதுவரையான உன் பிரிவின் காலங்களில்!
என் மனம் கொத்திச் சென்ற!
பறவைகளில் பலவும் என் !
நம்பிக்கைகளின் மீது!
தம் கூரலகால்!
குருதிவடிய!
எழுதிச்சென்ற வரிகளெல்லாம்!
வலிகள் ஊர்கின்றன.!
மறக்க முனைந்து மறக்க முனைந்து!
தோற்றுப்போகிறேன் நான்.!
நான் நானாகவே இருப்பதற்காய்!
காலமெலாம்!
வலிகளினூடு பயணிக்கிறேன்.!
சொல்வதற்காய் எனை மன்னித்துவிடு!
உன் மீள்வரவும்!
மீள்பறப்பாய் போய்விடும்தான்.!
என்றபோதும் இன்று நான்!
இதமுற்றிருக்கிறேன் - நீ!
கோதிய பொந்துள்!
சிறகை அகல விரித்ததனால்!!
20092011

மருத்துவக் குழல்

சஹ்பி எச். இஸ்மாயில்
தொலை காட்டியைப் போல் !
நீ எப்பொழுதும் உயரத்தையே பார்க்கிறாய் !
உன் காதல் மின்னல் !
அடிக்கடி கட்டிட உச்சியை நோக்கியே பாய்கிறது!
உனக்காக வானில் பட்டம் விட்டு சமிஞை செய்கிறேன். !
நீயோ என்னிடம் சிறகுடைந்த பட்டங்கள் கேட்கிறாய் !
கடிகார முட்களைப் போல் ஒவ்வொரு !
நிமிடமும் உன்னையோ தழுவுகிறேன் !
காதல் மதுக்கடையில் அதிகமாகக் !
குடிப்பவனுக்கு போதை ஏறுவதில்லை !
நான் உன் பெயரில் கவிதைகள் வரைகிறேன் !
நீயோ என்பெயரில் பதவிகள் தேடுகிறாய்!
காதல் கடிகாரத்தில் நாட்களை விட !
நிமிடங்களே மெதுவாகச் செல்லும்!
நீ வண்டுகளின் கால்கள் எண்ணுகிறாய் !
நான் பூக்களின் அழகை ரசிக்கிறேன்!
காதலில் கனவுகளை விட நிஜங்களே !
அதிகம் உண்மை பேசும் !
பகலில் என் காதலிக்காக உணர்வு !
வலையை வீசுகிறேன் !
இரவில் நீ உன் காதலனுக்காக !
அறிவு வலையை வீசுகிறாய்!
எனக்குத் தெரியும் நீயும் காதல் !
வீணை இசைக்கிறாய் என்று !
என்னவோ அது ஒரு நாளும் என் !
காதில் விழுவதில்லை!
குழல்களும் உன் இதயத் துடிப்பை !
ரசிக்க வேண்டுமென்கிறாய் !
என்னிடம் உள்ளது வெறும் செவிகள் மட்டுமே !
நான் கண்ணீரால் கடிதம் எழுதுகிறேன் !
அவற்றை நீ புன்னகையால் கிழித்தெரிகிறாய் !
காதல் சுவர்க்கத்தின் முடிவு நரகத்தின் வாயில்!
உன் காதல் ஒன்றுசேறும் நாளில் நானும் வருவேன் ஒரு காதல் மடலுடன் !
அது உனக்கல்ல என் மரணக் காதலிக்கு

முகம்

பாஷா
எத்தனை முகம் !
வைத்திருக்கிறாய் நீ? !
ஏறிட்டு பார்க்க !
ஏளனம் செய்ய !
ஏமாற்றிப் போக !
அத்தனையையும் என்னில் !
பூக்களாய் கோர்த்து !
வைத்திருக்கிறேன். !
சத்தி சக்திதாசன்

உன்னைச் செறிவூட்டு

இ.ஜேசுராஜ்
வானம் நிகர்த்தளவு !
வைர நெஞ்சம் நிறுத்தி !
பூமி புரட்டமுடியுமென !
பூதமென உறுதிகொள்வாய் ! !
பகுத்த சிறுகடுகின் !
பல்லாயிரத்தி லொன்றொத்த !
அளவினதுதான் !
அணுவதன் சிறு பிளவுதான் !
அண்டம் நொறுக்கும்தான் !
அதனுள்ளடைத்த செறிவுதான்! !
சினமூட்டும் நிகழ்வுகளால் - உனை !
செறிவூட்டி வைப்பாய் ! !
சிறிதளவேனும் சினமாற்றாது !
உனக்குள் உனையே !
உருக்காலையென !
நெருப்பு பூட்டிக்கொள்வாய் ! !
எரிமலையென !
நெருப்புக் குழம்பினை !
நெஞ்சத்துள் புதைத்துவைப்பாய் ! - நீ !
வாய்க்கும் காலத்தே !
வெடித்துவிடு !
புரட்சிக்கணலாய் சீறியெழு !
பூதமென !
பூமிதனை புரட்டிப்போடு ! !
மாற்றம் கிட்டும் ! ஏனெனில் !
எல்லாமும் !
மாற்றத்திற்குட்பட்டதுதான் ! !
!
ஆக்கம் !
இ.ஜேசுராஜ் - கீரனூர்

பச்சிளங் குழந்தை.. பூவின்.. கடவுளாய்

வை. அண்ணாஸாமி
பச்சிளங் குழந்தை.. பூவின் கூற்று.. கடவுளாய் என்றும்!
01.!
பச்சிளங் குழந்தை!
-------------------------!
ஒருவரிக் கவிதை! காண்போரின் கவலைகளை!
சுருக்கியே வாழ்வில் சுவைகூட்டும் நல்லதோர் மருந்து.!
ஒவ்வோர் அசைவும் நமக்கு ஊட்ட்ம்தான்.!
எவ்விதம் மறப்பார் இவ்வின்பத்தை.!
சிரிப்பினை, ஈர்க்கும் சின்ன இதழ்!
விரிப்பினை கண்டு மயங்காதோர் உண்டோ? அரிதான!
இறைவன் இவந்தானோ? பன்னாட்கள் 'பளிச்சென்ற'!
பிறைனுதல் நம்வீட்டு வானிலும்!!
!
02.!
பூவின் கூற்று!
-----------------!
வானமே, நீவிரிந்து படர்ந்து கிடந்தாலும்,!
மனம் கவரும் வண்ணக் கலவை உனக்குண்டோ?!
சுவையான தேனையடக்கும் திறமையும் என்னுள்.!
கவிகளின் கற்பனை 'ஊற்றும்'நானே!
!
03.!
கடவுளாய் என்றும்...!
---------------------------!
கடவுளாய் என்றும் எண்ணும் மனிதன்-அதனைக்!
கடந்து மனிதனாய் வாழும் புனிதன்.!
மனிதனையும் கடவுளையும் கண்முன்னே ஒருங்கே,!
தனிமையில் கண்டன மற்ற உயிரினங்கள்

பொறுப்பு

முத்தாசென் கண்ணா
அப்பா சட்டையில்!
நாலணா எடுத்தால் கூட!
கோள்மூட்டிவிடவும்...!
சனிக்கிழமை!
சம்பள நாளின் தீனிகளில்!
பெரும்பங்கு கொண்டு!
ஒழுங்கு காட்டுவதும்.......!
அவளுக்காக பயந்து!
நான் அடுப்பங்கரையில்!
செல்பேசுவதும்....!
பைசாவுக்கு கூடப் பெறாது!
அவளிடம் மதிப்பிழப்பதுமாக!
தங்கை என்று ஒருத்தி!
ஆனால் ஏதோ ஒரு!
பொறுப்பு வந்ததை!
தோன்றுகிறது!
உன் தங்கை பெரிய மனுஷி ஆயிட்டா!
என்று என் அம்மா சொன்னபோது!
-முத்தாசென் கண்ணா

கைகள்

ராஜா கமல்
ஒ என் தேசத்தவனே!
உன் கைகளை ஏந்தப் பயன் படுத்தாதே!
ஊன்றப் பயன் படுத்து!
ஊன்றப்படும் வித்து தான்!
விருட்சமாகிறது!
அழுத்தப் படும் பந்து தான்!
மேலேழுகிறது!
இழுக்கப் படும் அம்பு தான்!
இலக்கு எய்துகிறது!
!
ஆகவே என் தேசத்தவனே!
உன் கைகளை ஏந்தப் பயன் படுத்தாதே!
உழைக்கப் பயன் படுத்து!
உழைக்கும் வர்கம் உயர்ந்ததாகத்தான்!
உலக வரலாறு!
ஏய்த்தவர்கள் எழுந்ததில்லை!
உழைத்தவர்களால் தான்!
உலகம் ஒளிர்கிறது!
முடிந்தால் உலகத்துக்கு உழை!
இல்லையேல் நாட்டுக்கு!
குறைந்தபட்சம் வீட்டுக்காவது உழை!
உழைப்பு என்ற மந்திரம் இருக்கும் வரை!
ஏழ்மை என்ற சைத்தான் நெருங்குவதில்லை!
!
ஆகையால் என் தேசத்தவனே!
உன் கைகளை ஏந்த பயன் படுத்தாதே!
நூறு கோடி கைகளும் இந்தியாவின்!
இரும்பு தூண்கள்!
உன் கைகள் புரட்சிகள் செய்யட்டும்!
புதுமைகள் செய்யட்டும்!
நாளை உலகம் நம்மை!
நல்ல தலைவன் என்று சொல்ல வேண்டாம்!
நல்ல மனிதன் எனறாவது சொல்லட்டும்!
!
ஆகவே என் தேசத்தவனே!
உன் கைகளை ஏந்தப் பயன் படுத்தாதே!
ஊன்றப் பயன் படுத்து

யாரால் சபிக்கப்பட்டவர்கள்.. பயணிகள்

நெடுந்தீவு முகிலன்
யாரால் சபிக்கப்பட்டவர்கள் இந்த பூக்கள்!
------------------------------------------------------!
ஈழத்து தமிழ் பெண்கள் - 36 வயதிலும்!
அடிசல்லியில் கொக்கான்!
...விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்!
...!
வடக்கு கிழக்கு விதவைகள்!
85 ஆயிரத்தையும் தாண்டி விட்டதாக!
தகவல்கள் தெரிவிக்கின்றன!
தொழில் இல்லையா ...? பெண்களை!
விபச்சாரம் செய்ய சொல்கிறார்கள்!
நம் நாட்டில் படித்த இராமர்களும் கூட ...!
ஆடுப்புளுக்கையை கூட்டியள்ளி!
தோட்டத்தில் பசளை இடுகிறாள்!
ஒரு பட்டதாரி பெண்!
இலங்கையின் கல்வியறிவு 96 வீதம்!
ஆகிவிட்டது - இதில்!
வேலைவாய்ப்பு எத்தனை வீதம்!
மகரந்தமணிகள் காற்றில் பறந்து!
கல்யாணம் செய்து கொள்கின்றன!
பூக்கள் கர்ப்பமாகின்றன - பாவிகளாகிவிட்டனர்!
முதிர்கன்னிகள்!
பேரீச்ச மரங்கள் கூட!
பாலை வனத்தில் பூத்து காய்த்து!
சிரித்துக்கொண்டிருக்கின்றன!
மலையக பெண்களின் வியர்வை துளிகளையும்!
பறித்து விடுகின்றன தேயிலை செடிகள்!
யூரோக்களையும்... ஸ்டெலிங் பவுன்களையும்....!
டொலர்களையும் .. ரூபாய்களுக்கு மாற்றி!
நம் நாட்டில் கோயில்களை தான் கட்டுகிறார்கள்!
முதிர் கன்னிகளை யாரும் கட்டிக்கொள்கிறார்கள் இல்லையே .....!
02.!
பயணிகள் கவனத்திற்கு - கவிதைத்தொகுதியில் இருந்து.....!
---------------------------------------------------------!
ஒற்றை கதவு!
பேரூந்து!
உருண்டுகொண்டிருந்தது!
எழுந்து நின்றவர்களுக்கு!
...மேற்தட்டு தலைக்கு!
அடிக்கிறது!
அரிசி மூட்டைகள்!
வாழைக்குலைகள்!
என்னைபெரல்கள்!
பால்மாப்பெட்டிகள்!
விளக்குமாறு தும்புத்தடிகள் என்று ...........!
எல்லா இருக்கைகளையும்!
இடம்பிடித்துவிட்டன!
புழுதி!
மேல் எழுந்து பறப்பதால்!
சாளரங்கள்!
அடைக்கப்பட்டிருந்தன!
அதனால்!
உள்ளே வியர்வை!
வெள்ளம் போட்டுக்கொண்டிருந்தது!
புழுக்கத்தில்!
குழந்தைகள் குமரிகள்!
முனகிக்கொண்டிருன்தனர்!
அதற்குள்ளும்!
ஒவ்வொருவரையும்!
துளாவி தட்டி தடவி!
கையை நீட்டி!
காசு கேட்கும்!
நடத்துனரின் நர்த்தனம்!
நல்லாவேயில்லை!
கிடங்குகளில் உள்விழுந்து!
பேரூந்து நிமிருகையில்!
முகம் தெரியாதவர்கள்!
முன் பின் தெரியாதவர்களுக்கே!
முத்தம் கொடுத்துக் கொண்டு!
நின்றார்கள்!
வெற்றிலை துப்புபவர்களுக்கும்!
புகைப்பிடிப்பவர்களுக்கும் ஒதுக்கப்பட்டதாகவே!
பின் இருக்கைகள்!
காட்சி அளித்தன!
!
வயிற்றில் குழந்தையோடு!
வந்த பெண்ணுக்கு!
இருக்கையாக மாற்றப்பட்டது!
சீமெந்து பைக்கற்றுக்கள் தான்!
என்ன தான் நாடகங்கள்!
நடந்து முடிந்தாலும்!
ரசிக்க கூடியதாக!
இருந்தது!
வரவிருக்கும்!
புதுத் திரைப்படங்களினது!
புதுப் புது பாடல்களை

அழகு

ச.மகிந்தினி
பச்சைப் புல் வெளி மீது !
பனித்தூறலும் !
இரண்டு இலையிடையே !
இரட்டை ரோஜாவும் !
பட்டுச் சேலையில் !
சமைந்த பெண்ணும் !
பசித்தவனுக்கு கறி சோறும் !
பண்பற்றவனுக்கு பணமும் !
அனாதைக்கு அன்பும் !
ஆதரிப்போருமே உண்மையான !
அழகு !
ச.மகிந்தினி !
***** !
அன்பகம் - திக்கற்றோருக்கான காப்பகத்திலிருந்து ஒரு குழந்தைக் கவிஞர்