தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

தூசிபடிந்த சாய்மனைக் கதிரை நாட்கள்

துவாரகன்
தூசிபடிந்த சாய்மனைக் கதிரை நாட்களாக !
நகர்ந்து கொண்டிருக்கிறது வாழ்வு.!
கொளுத்தும் வெய்யிலில் !
கொட்டித் தள்ளும் இலைகளின் உதிர்ப்பில் !
பேய்க் காற்றுத் தாண்டவத்தில் !
எல்லாமே அள்ளுண்டபடி. !
சிவப்பு கறுப்பு பொட்டிட்ட!
ஒரு தனியன் வண்ணத்துப்பூச்சி!
செழிப்பிழந்து போன!
நித்திய கல்யாணிப் பூக்களில் !
நம்பிக்கையுடன் !
தேடித் தேடித் தேனெடுக்கும் நாதிகூட…!
நம் வாழ்க்கையிலிருந்து !
மெல்ல மெல்லக் கைநழுவிப் போகிறது. !
அதற்கிருக்கும் திராணிகூட !
இல்லாமற் போய்விடுமா?!
வீதிகளும், வெளிகளும்,!
வெறுமையாகிப் போன !
நம் கதைகளையே !
மீண்டும் மீண்டும் சுமக்கின்றன.!
வரிசை கட்டிக் கொள்வதும்!
நேரம் கடத்தும் காத்திருப்பும்!
நரம்புகளும் எலும்புகளும் வெளித்தெரியும் !
காற்றுப் பைகளாக்குகின்றன.!
சொரசொரத்துப் போன கடதாசிப் பூக்களில் !
இருக்கும் ஈர்ப்புக் கூட !
இந்த நடைப்பிணங்களில் இல்லை. !
பழுப்பேறிப்போன சோம்பேறி இருட்டில்!
மூன்று நாளாக உதறிப் போடாத !
அழுக்குப் படிந்த போர்வையுடன் !
நேரத்திற்கு நேரம் கம்மிக் கொண்டு!
மண் நிரப்பிய சிரட்டையில் !
எச்சில் துப்பிக் கொண்டிருக்கும் !
இந்தத் தரித்திரத்தை !
யாரிடம்தான் கேட்டுப் பெற்றுக் கொண்டோம்?!
அழுக்கு மூட்டையாய் !
அம்மிக் கொண்டு நீண்டு கிடக்கும் !
தூசி படிந்துபோன சாய்மனைக் கதிரையாக !
நகர்ந்து கொண்டிருக்கின்றன நாட்கள்.!
காத்திருப்புக்களின் நடுவே !
பழுத்துப்போன இலைகளாக !
உதிர்ந்து கொண்டிருக்கிறது வாழ்வு.!
-- துவாரகன்

உன்னில் உறைந்து போனேன்

நாவாந்துறைடானியல் ஜீவன்
நாவாந்துறைடானியல் ஜீவா - !
!
ஊசிக் குளிர் !
வந்தென்னை !
உரசித் தாக்க !
உறை நிலைப் படலமாய் !
நீ எந்தன் !
நெஞ்சில்.. !
வாழ்வு !
வறுமையின் !
கரு முகிலாய் !
உன் திருவுருவம் !
மனத்திரையில் !
தோன்றும் வேளை !
வெண்ணிலவாய் மாறும் !
இடுப்புடைய !
இடர்வந்து !
நொகுமெந்தன் !
மெய்யில் !
என் நிழல் பார்க்க !
எனக்கேது நேரம் !
இன்னும் !
எனக்குள் !
உன் வாசைன... !
நீயும் நானும் !
வெயில் சாய !
வீதியில் நடந்தோம். !
கவிதையில் !
பகிடி பண்ண !
காற்றோடு உன் சிரிப்புதிர !
எச்சி முறிகள் !
என் முகத்திற்கு !
சொந்தமாகும. !
இன்புற இடம் தேடி !
பண்ணைப் பக்கம் !
போகாமலே !
பக்கத்து வீடே !
நமக்கு பாலூட்டும் !
நிலவாகும் !
குளிர் காற்றும் !
கொழுத்தும் வெய்யிலும் !
கவி சொல்லும் !
கனத்த மழையும் !
நம் மகிழ்விற்காய் !
வசப்படுத்தினோம் !
வெள்ளம் வர முன் !
வள்ளம் கரை சேரும் !
வீடு வந்ததும் !
உன் தெருவுக்கு !
ஓடி வருவேன் !
காற்றில் !
கடிப்புதற !
சாதாளையோடு !
சுங்கான் மீன் கிடந்து !
சுள் என்று குத்த !
உன் புன்னகையை !
ஒரு கணம் கண்டால் !
விண்ணென்ற நோவெல்லாம் !
விரல்களிருந்து !
விடுதலையாகும் !
!
அன்றொரு நாள் !
பின்னிரவும் !
பேசாமல் !
புலர்ந்துபோனது. !
உன் வரவிற்காக !
என் உயிர்த்தீ !
உருக்குலைந்து !
காத்துக்கிடந்தது. !
தொடும் து£ரம் !
நின்ற நீ !
இன்று !
நெடும் தூரம் !
சென்று விட்டாய் !
நீ நினைத்தாலே !
உன் வேலிச்சிறகு !
விரிந்து கொடுக்க !
காதல் உட்புகுந்து !
உள் சதைவரை பாயும் !
நானோ !
ஒரு அமைதியின் !
வருகைக்காகளூ !
வெண் பனித் தூறலில் !
காத்துக்கிடக்கிறேன் !
ஆயினும் !
உன் உதடு தந்த !
ஈரம் !
இன்னும் உயிர் ப்புடன்

முகங்கள்

இரா.பழனி குமார்
கருவினில் உருவாகி உயிராக!
உதித்திடும் உண்மை முகம் !!
பள்ளியில் பயின்றிட பாதம்!
பதித்திடும் பால்ய முகம் !!
கல்லூரிக் காலத்தை களிப்புடனே!
கடந்திடும் இளமை முகம் !!
கனவுகள் நிறைந்த நெஞ்சோடு!
மணக்கோலம் காணும் முகம் !!
மக்கட்பேறு பெறுவதால் பேரின்பம்!
பெற்றிடும் பெருமைமிகு முகம் !!
வளர்த்திட்ட செல்வங்கள் வளமாக!
வாழ்ந்திட வழிகாட்டும் முகம் !!
ஓய்வுறும் வயதானால் வாடியமுகமோடு!
ஓய்வுபெறும் ஓய்வறியா முகம் !!
பெற்றவைப் பெற்றதை கொஞ்சி!
மகிழ்ந்திட்டு மலர்ந்திடும் முகம் !!
கடந்தகால நினைவுடனே காலத்தைக்!
கழித்திடும் களைப்படைந்த முகம் !!
முடியும் வாழ்வினை வரவேற்கக்!
காத்திருக்கும் களையிழந்த முகம் !!
உயிரற்ற உடலாக உறவும்ஊரும்!
வழியனுப்பும் இறுதி முகம் !!
மறைவிற்குப் பின்னாலே உற்றராரும்!
மற்றோரும் மறந்திடும் முகம்

கத்துகிறது என் கவிதை

நவஜோதி ஜோகரட்னம்
துக்கம்!
தொண்டையைத் துளைத்து!
மண்டையோட்டைப் பிளக்கிறது!
குளிரும் கறுப்பும் உருண்டு என்!
கட்டிலில் குவிகிறது!
நடுக்கம் உடலில் கசிய!
பல்லிகள் இல்லாத!
என் வீட்டுச் சுவர்கள்!
பல்லிளித்துச் சிரிக்கின்றது…!
என் விரல்கள்!
கூம்பிய மொட்டுகளாகி!
மனதோடு உணர்வு புணர்ந்து!
என் இதயத்தின் வால்வுகளை!
நன்றாகச் சுருங்கிவிட்டது!
வேதனையால்!
மயக்கமும் வெப்பமும் அதிகரித்து!
என்!
எலுப்புகளும் களைத்துவிட்டது!
தீப்பொறியாய் மின்னி மடிந்த!
என் தேசத்தின் மக்கள்…!
அந்த வன்னி மக்களின்!
பெருங்குரல்வளைகள்!
என்னை இறுக்கிப் பிழிந்து!
உலர்ந்த பொருளாக்கிவிட்டது!
பொய்யுக்குள் உலவுகிறது!
ஒரு சுதந்திரம்!
அழுதழுது!
கவிதை எழுதும் இரவே!
எனக்கு இனி வராதே!!
கத்துகிறது என் கவிதை!
என் தாயே!!
எடுத்துப் படி!
கருகிய உடல்களை வெண்மையாக்கி!
கவிழ்த்து மூடிய அந்த!
வன்னி தேசத்தின் மணற்பரப்பை… !
7.6.2009

நிசப்தம்

பாண்டித்துரை
கவிஆக்கம்: பாண்டித்துரை!
ம் என்ற!
முனகலுடன்!
அப்பா என!
கொட்டாவி விட்டு!
டிக் டிக் டிக் டிக்!
கடிகார பெண்டுலகம்!
உளறல் பேச்சுக்களாய்!
உறங்கும் உருவங்கள்!
குறட்டைச் சத்தமாய்!
தலையை சொரிந்து கொண்டு!
பூனைகளின்!
நடமாட்டத்துடன்!
இரவுகளின் நிசப்தம்!
மூடிய இமைகளுக்குள்!
விழித்தபின் பேசும்!
கனவுகளாய்!!
!
கவிஆக்கம்: பாண்டித்துரை!
தொடர்புக்கு:006597345497

ஒரு காரணம் தேவைப்படுகிறதுதான்

கோகுலன்
சேட்டுக்கடையில் அடகுவைத்த!
செப்புச்சருவம்!
கட்டாத வட்டியில் மூழ்கிப்போக!
பதிலுக்கு இரண்டாய் !
பிளாஸ்டிக் குடங்கள் வாங்கி!
சொல்லிக்கொண்டாள்!
'தூக்கிச் சுமக்க !
இதுதான் நல்ல வசதி..'!
கழுத்தில் கிடந்த !
பொட்டுத்தங்கத்தை!
கஞ்சிக்காய் விற்ற பொழுதும்!
மேம்போக்காக சொல்லிக்கொண்டாள்!
'இனிமேலாவது இருட்டுல!
பதறாம போய்வரலாம்..'!
கல்யாணவயதை !
கடந்து நிற்கும் மகளை!
இரண்டாம் தாரமாய் கேட்டுவர!
சரியென்றவள் சாவகாசமாய்!
காரணமும் சொன்னாள்!
'மாப்பிளைக்கு வயசவிடவும் !
அனுபவம் முக்கியந்தான்..'!
உள்ளுக்குள் கதறியழும் !
மனதுக்கும் ஆறுதல் சொல்ல!
தனக்குத்தானே ஒரு காரணமும் !
தேவைபடுகிறதுதான்!!
!
-கோகுலன்

பதில்களற்ற மடலாடல்

அவனி அரவிந்தன்
முந்தைய குளிர் இரவின்!
தனிமை ஏற்றிவிட்ட கனத்தை!
கரைத்துவிடும் குறிக்கோளுடன்!
சாலையில் போவோர் வருவோர்!
அனைவரைப் பார்த்தும் சிரிக்கிறான்!
முறைப்புகளைப் பொருட்படுத்தாமல்!
சலாம் வைக்கிறான்!
அவ்வப்போது கொஞ்சம்!
பாலிதீன் காகிதங்களையும்!
அவன் கடித்துக் கொள்கிறான்...!
சுண்ணாம்பும் கரியும் கொண்டு!
வரையப்பட்ட திருப்பதி வெங்கடாஜலபதி!
தார் தரையில்!
அருள் பாலித்துக் கொண்டிருக்க,!
நடந்து செல்லும் பக்தரெல்லாம்!
கன்னத்தில் போட்டபடியே!
கடந்து போகிறார்கள்!
சாலையின் சரிவில் புரளும்!
கால்களைத் தொலைத்த ஓவியனின்!
வர்ணம் இழந்த கண்களை!
நேர்கொண்டு பார்க்கும் போது!
சட்டைப்பையில் சிறைப்பட்ட சில்லறைகளைத்!
தடவிப் பார்த்துக் கொண்டே!
மறைந்து போகிறார்கள்...!
மாராப்பை பூமிக்குத்!
தாரை வார்த்துவிட்டு!
வளைந்து நெளிந்து!
பிரம்மாண்டமாய் நிற்கும் அழகியின்!
பட்டுத் துணி மூடிய!
பாகங்கள் குறித்த கற்பனையில்!
பல விதமான கண்கள்!
குத்திக் கிடக்கின்றன!
விழிகளை விட்டுச் சென்றவர்கள்!
அவற்றை மீண்டும் எடுத்துக் கொள்ள!
மறந்து போகிறார்கள்...!
மரணத்துடன்!
மடலாடிக் கொண்டிருக்கும்!
மூதாட்டியின் சுருங்கிய கண்வழியே!
விரியும் இந்த!
சாளரத்து உலகம்,!
எந்தப் பார்வைகளைப் பற்றிய!
பிரக்ஞையும் இன்றி!
தன் போக்குக்கு!
சுழித்து ஓடிக் கொண்டிருக்கிறது...!
செவிலிப் பெண்ணொருத்தியின்!
பாட்டி உங்களுக்கு!
மேல் வார்டுக்கு மாத்திருக்கு!
போலாமா ?, என்ற குரலுக்கு,!
மூச்சை ஆழமாக உள்ளிழுத்தபடி!
சாளரத்துக்கு வெளியில்!
வேடிக்கை பார்த்துக் கொண்டே!
ஆகட்டும், என்று சொல்லி!
ஆயத்தம் ஆகிறாள்!
அப்போது சாளரத்தின் திரைச்சீலை!
காற்றில் மெலிதாகப்!
பிரண்டு கொண்டிருந்தது

பொக்கிஷம்

மாவை.நா.கஜேந்திரா
சுமந்தாள்!
சுகமான இடம் தந்தாள்..!
தன் உதிரத்தை உணவாக்கி!
உயிர் தந்தாள் !
சுகமான சூடும்!
இதமான குளிரும் தந்து – தன்!
இமை போல காத்தாள் !
முகம் பார்க்க!
சிரிக்க!
முதல் மொழி பேச!
முயன்று முயன்று நடக்க!
முழுவதிலும் அவள்… !
நான் அணியும் உடையில்!
உண்ணும் உணவில்!
சிரிக்கும் சிரிப்பில்!
பேசும் மொழியில்!
பார்க்கும் பார்வையில்!
அவள் என் உயிராய்! !
மற்றவர்க்கு எப்படியோ?!
என் பார்வையில்!
உலகிலேயே அவள்தான் அழகி….! !
அன்பின் உருவமாய்!
கோவிலின் உறைவிடமாய்!!
தெய்வ மலர்முகமாய்!!
என் உயிரின் உயிரானவள்…!
அவள் என் அன்னை…

இதழ்களின் ரேகைகள்

வீ.கார்த்திகேயன்
மாலை வானம் அன்று!
மாய வர்ணங்களோடு மயங்கி!
மாறுதலைப் பிரதிபலித்திருந்தது!
மூச்சுக்காற்றின் சூடு!
தட்பநிலை மாற்றங்களை!
முடுக்கி விட்டிருந்தது!
கண்கள் நான்கும் நேர்கோட்டில் நிற்க!
சந்திர கிரகணங்கள்!
சில நிகழ்ந்தேறின!
அன்றலர்ந்த மலராய் அவள்!
அங்கங்கள் சிவந்து நிற்க!
தென்றலாய் வருடி அணைத்து!
இதழ்கள் இணைத்தேன்!
சுழன்று கொண்டிருந்த பூமி!
சட்டென நின்றது!
விண்ணில் நட்சத்திர மழை!
பொழிந்து கொண்டிருந்தது!
முதல் முத்தமெனும் புத்தகத்தில்!
எங்களது இதழ்களின் !
ரேகைகளும் பதிந்துபோயின!
- வீ.கார்த்திகேயன்

துளி நீர்

ரதன்
மழை மாலை நாளென்றில் !
மங்கிய சாலை வெளிச்சத்தில் !
ஆண்கள் கழிவறை அருகினில் !
யுகங்கள் கடந்து !
பார்த்துக்கொண்டோம் !
!
கிழிந்து தொங்கியது !
எங்கள் முகமூடிகள் !
!
அவசரமாய் காற்றை !
முத்தமிட்டோம் !
!
நநைந்த நிலம் நோக்கி !
கண்களை !
மேயவிட்டோம் !
!
கைகளை !
நீட்டிக்கொண்டோம் !
தொடவில்லை !
!
நாயொன்றின் !
குரைப்பில் !
பிரிந்துகொண்டோம் !
!
ரதன்