ஏழைகளின் இல்லங்கள்!
எரியும் நெருப்பில் - அதில்!
ஏனோ குளிர்காய்கிறது!
எமது இத்தேசம்.!
குழந்தைகளின் கூக்குரலும்!
குமர்களின் கூப்பாடும்!
முதியோரின் முனகல்களும்!
மூப்படைந்த நோவினையும்!
கண்டும் கலங்காதது!
எமது இத்தேசம்.!
இரட்டைக் குழலின்!
இடி ஓசையையும்!
இரவைப் பகலாக்கும்!
இடைவிடா ஷசெல்வீச்சையும்!
பார்த்தும் கேட்டும்!
பயப்படவில்லையே இத்தேசம்.!
அகப்பட்ட அங்கங்களின்!
அவதிப் படுகையும்!
பிசிரிக்கிடக்கும் உடலின்!
பிண வாடையும்!
பழகிப்போன தொன்றாயிற்று!
பாழாய்ப்போன இத்தேசத்திற்கு.!
இனத்தையினம் சுத்திகரிக்கும்!
இழிநிலையும் இங்குதான்!
இருப்பிடம் இழந்து!
இடம்பெயர்வதும் இங்குதான்.!
தவறிப் படுகுழிக்குள்!
தாழப் போவதற்குள்!
எச்சரிக்கை செய்வது!
ஏகனின் கடமையல்லவா?!
சுனாமியின் எச்சரிக்கையாவது!
சுரணையை ஏற்படுத்தவில்லையே!!
இன்றோ நாளையோ!
ஆழிக்குள் அடங்கிவிடும்!
இத்தேசம் - தேசம்மட்டுமல்ல!
இங்கிருக்கும் நாமும்தான்.!
-மருதமுனை எஸ். ஏ. ஹப்பார்
மருதமுனை எஸ். ஏ. ஹப்பார்