பதில்கள்!
பல இருந்தும் !
மொழிகளின்றி!
ஊனமாகிவிட்ட!
கேள்விகள் !
மீட்ட துடித்த!
விரல்களையே!
காயமாக்கிவிட்டு!
கண்ணீர்விடும்!
வீணை நரம்புகள் !
இதயத்தில் தங்கி!
வெளிவரா!
ஆசைகளின் !
அன்றாட அவலங்கள் !
தோல்வி என!
தெரியாமல்!
தொடர்ந்து!
தீக்கிரையாகும் !
விட்டில் பூச்சியின்!
விளக்கு காதலாய் !
இந்த ஜென்மமும் !
நகர்கின்ற!
பரிதாப நாட்களும் !
!
- விஷ்ணு !
!
நீ மட்டும் நிஜமானால் ,... நான் என்றும் நிழலாவேன்

விஷ்ணு