தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

அரசன் கொண்டு வந்த பழங்களுக்காக

தீபச்செல்வன்
நாம் வழங்கிய பூக்கள்!
----------------------------------------------------------------------!
அரசன் பழங்களுடன் வந்திருக்கிறான்.!
யுத்தத்தில் பிடுங்கப்பட்ட பழங்களை நேற்று மைதானம் எங்கும் எறிந்துகொண்டிருந்தான்.!
நான் இப்பொழுதும் கேட்கிறேன்!
அடிப்படையாக எங்கள் வேலிகளில் இருக்க வேண்டிய மரங்களையும்!
குழந்தைகளின் பொம்மைகளையும் தந்துவிடு என்று.!
என் அன்பு மிகுந்த சனங்களே!!
எங்கள் பிடரிகளால் குருதி கசிந்துகொண்டிருக்க!
இந்த மைதானம் இழந்தவற்றைக் கோரிக்கொண்டிருக்கிறதை!
நீங்கள்தான் அமைத்து வைத்திருக்கிறீர்கள்.!
எங்கள் கோரிக்கைகளும்!
அரசனின் தந்திரம் நிரம்பிய வாக்குறுதிகளும்!
நஞ்சுக் கனிகளில் மறைந்திருக்கின்றன.!
துக்கம் உறைந்த நாட்களை எண்ணி கவலைப்படும்!
எங்கள் தந்தையே!!
ஒரு நாள் குழந்தைகள் புதருக்கிடையில் பதுங்கியிருந்த வேளை!
நடு சமங்களில் எழுந்து நின்று!
சிலுவைத் தூக்கியபடி மன்றாடிக்கொண்டிருந்திர்களே!!
எங்களுக்கு முன்னால்!
இறந்து சிதைந்த குழந்தைகள்தானே வந்து விழுந்துகொண்டிருந்தன.!
அரசன் எல்லாக் குழந்தைகளையும்!
வெட்டும்படி கட்டளை பிறப்பித்தபொழுது!
எல்லாச் சனங்களையும் சிறையிலடைத்துக்கொண்டபொழுது!
குழந்தைகளுக்காகவும் சனங்களுக்காகவும்!
நீர் உபவாசம் செய்து கடவுளிடம் மன்றாடிக்கொண்டிருந்தீர்.!
பெற்றோர்களை பிரிந்து துயர் மிகுந்த அறைகளில்!
துடித்துக்கொண்டிருந்த பிள்ளைகளுக்கு!
உணவும் வார்த்தைகளும் கொடுத்த தந்தையே!
அரசனின் பழங்கள் குறித்து உங்கள் ஒரே குழந்தைக்கு!
என்ன சொல்லப் போகிறீர்கள்?!
ஆடைகளை களைந்து சோதனையிடவும்!
ஆடைகளை கிழித்து!
நிருவாணமாக நாம்மை ஓட வைக்கும்படியும்!
அரசனே கட்டளை பிறப்பித்திருந்தான்.!
அவனுக்கு நாங்கள் பொன்னாடை போர்த்தியிருக்கிறோம்.!
எங்கள் நிர்பந்தங்களும் சபிக்கப்பட்ட வாழ்வும்!
ஒவ்வொருவரையும் கொலை செய்துகொண்டிருக்கிறது.!
எங்கள் கனவை சிதைத்துப்போட்டவன்!
நிலத்தை அள்ளிச் சென்றவன்!
தெருக்களை சூறையாடியவன்!
குழந்தைகள்மீது பிரமாண்டமான சிறையினைப் பின்னியவன்!
சனங்களின் குருதியில் முகம் கழுவிக்கொண்டிருந்தவன்!
தந்திரமான கதிரையால் வனையப்பட்ட!
கூடையில் யுத்ததில் பிடுங்கிய பழங்களை கொண்டு வந்திருக்கிறான்.!
அவற்றை நாமும் புசித்து குழந்தைகளினது!
கைகளிலும் சொருகி!
சனங்களின் குருதியில் நனைந்த பூக்களை பரிசளித்திருக்கிறோம்.!
அரசன் அழகான பூக்களுடன் செல்லுகிறான்.!
10.01.2010

கடவுள் முகமூடி

ப.மதியழகன்
அழைப்பு மணி ஒலித்தது!
கதவைத் திறக்க மனமில்லாமல்!
படுக்கையில் கிடந்தேன்!
பிறரிடம் மன்னிப்பு!
கேட்குமளவுக்கு!
எந்தத் தவறும் இதுவரை!
செய்ததில்லை!
எதிர் நீச்சல் போடுபவர்கள்!
கரை சேர முடியாது என!
நான் இப்போது தான்!
புரிந்து கொண்டேன்!
சாக்கடையில் விழுந்த!
மழைத்துளி சந்தன மணம்!
கமழுமா!
பசி மயக்கத்தில் விழுந்தவனுக்கு!
ஆகாரம் தான் கடவுளல்லவா!
பாவம் செய்யய பயப்படுபவர்களை!
ஆண்டவன் சோதிப்பது ஏன்!
இம்சை செய்து மகிழ்பவர்கள்!
இறைவனின் குமாரரர்களாக!
பூஜிக்கப்படுவது விநோதமல்லவா!
அருளுக்கு பிரதிபலனாக!
ஏதாவது எதிர்பார்த்தால்!
அவன் கடவுளா!
வாழ்விக்க உன்னிடம் வேண்டவில்லை!
குப்பையாக வந்த உடம்பை!
ஆராதனை செய்பவன்!
பிரபஞ்சத் தலைவனா!
மோகத்தை வெல்ல!
முடியாதவனுக்கு பெயர்!
தாயுமானவனா?!

தீரா.. ஆவது

சேரல்
01.!
தீரா!
-------!
இரை தேடவும்!
இரை தின்பதற்கென்றுமே!
விடிந்து தொலைக்கிறது!
ஒவ்வொரு நாளும்!
முடிந்தும் போகிறது!
தின்று தீர்த்ததும்!
உச்சி வெயில் பார்த்து!
மல்லாந்து கிடந்து!
மரித்துப்போன எலியின்!
வளையிலும்,!
கொத்திக்கொத்தி!
இறைச்சி சேகரித்த காக்கையின்!
கூட்டிலும்,!
காத்திருக்கும்!
சில பசித்த குஞ்சுகள்!
02.!
ஆவது!
----------!
எப்படியெல்லாமோ!
ஆக வேண்டுமென்று!
ஆசையிருந்து!
எப்படியெல்லாமோ ஆகியும்!
விட்டாச்சு!
இப்போது யாருமே கேட்பதில்லை!
என்னவாகப்போகிறாய்?!
என்னுள் ரகசியமாய்!
முளைவிடத் தொடங்கியிருக்கிறது ஆசை!
ஒரு பெரிய்ய்ய்யய்யய்ய்ய்ய மலையோ,!
ஒரு பெரிய்ய்ய்யய்யய்ய்ய்ய கடலோ,!
ஒரு பெரிய்ய்ய்யய்யய்ய்ய்ய வானமோ,!
ஒரு பெரிய்ய்ய்யய்யய்ய்ய்ய பூதமாகவேனும்!
ஆகிவிடுவதென்று!
ஆனபின் ஏதுவாயிருக்கும்!!
எப்போதும் விரிந்தேயிருக்கும்!
கதைசொல்லும் குழந்தைகளின் கைகளுக்குள்!
என்னைச் சரியாகப் பொருத்திக்கொள்ளலாம்

அலைவியல்

ராம்ப்ரசாத், சென்னை
உன் கவிதைமொழிகளைப்!
பிரசவிக்காத‌!
மலடாய் இருக்கிறது!
என் அலைபேசி!
இப்போதெல்லாம்...!
சினுங்கிச்சினுங்கி,!
உன் சினுங்கலை!
எனக்குள் கடத்த,!
மறந்து கிடக்கிறது!
அது மெளனமாய்...!
என்னை என் விர‌ல்க‌ள்!
நினைவுகூறுவ‌த‌ற்காய்!
இன்றும் காத்திருக்கிறேன்!
நானும் அதை!
வெறுமையாய் பார்த்த‌ப‌டியே...!
க‌ட‌ல் அலைக‌ளில்!
ந‌னையும் உன் பாத‌ங்க‌ளில்!
தொலைத்த‌ என்னை இந்த‌!
மின்ன‌லைக‌ளில்!
தேடிக்கொண்டிருக்கிறேன்...!
என்னுயிரின் விசும்பலை!
உன்னழகால் பிடுங்கி!
அதனிடம் தந்துபோனவளே...!
அள்ளித் த‌ருகிறேன்!
என்னுயிரை...!
வைத்துக்கொள்வாயா ப‌த்திர‌மாக‌!
உன் இத‌ய‌த்தில்

வெற்றுப் பேப்பரோடு சிலநேரம்

வைகறை நிலா
பிறர் கவிதையை !
வாசிப்பது சுகம்.!
ரசிப்பது சுகம்.!
பிடித்திருந்தால்!
தனியே எடுத்து!
வைத்துக் கொள்வது!
தனி சுகம்.!
எல்லாவற்றிலும் சுகம்!
காதலில் விழுந்து!
கவிதை எழுத வேண்டுமென்ற !
எண்ணத்தோடு!
வெற்றுப் பேப்பரோடு!
வெகுநேரம் அமர்ந்திருப்பது…!
- வைகறை நிலா

தூசிகளாய்

விஷ்ணு
நீ காதலை!
உணர்ச்சிகரமாக சொல்லிய!
அந்த இரவில்...!
உனக்காக!
நான் வடித்த கவிதை ..!
உனது இதய அறையில்!
எங்கோ ஒரு மூலையில்!
தூசிபோல...!
இனியும்!
சில வருடங்கள்!
அது தங்கி இருக்கலாம்!
யாருமே அறியாமல் ..!
பனிக்காலம்!
மழைக்காலம் என்பது போல்!
மறதிக்காலம்!
உன் மனதை!
மூடும் வரை ..!
அதன் பின் ..!
வேறொரு இரவு ..!
வேறொரு கவிதை என!
தூசி மீது தூசி படர்வது போல் ,..!
இப்படித்தான்!
இவ்வுலகில்!
மீண்டும் மீண்டும்!
காதல்களும்!
கவிதைகளும்!
தூசிகளாய் ....!
- விஷ்ணு

நேசத்தாவரம்

அன்பாதவன்
ஒரு வண்ணத்துப்பூச்சியாய் அமர்ந்து !
மலைப்பாம்பாய் இறுக்கும் நீ யார்? !
உரையாடல்களில் சிந்துகிற சொற்களை !
விதைநெல்லாய் சேகரித்து !
மனக்குதிரில் பத்திரப்படுத்தும் நீ யார்? !
வார்த்தை வலைகளுக்குள் சிக்குமாறு !
வசப்படுத்தி வைத்திருக்கும் !
மாயச்சொல்லுக்கு உரிமையான நீ யார்? !
ஆறு காலங்களிலும் !
நினைவுகளை ஆக்ரமிப்பு செய்து !
ஆனந்த ஆதிக்கம் செய்கிற நீ யார்? !
பழைய மரபுகளை புறந்தள்ளி !
புதிய இலக்கணத்தில் !
வழிநடத்தும் சுழற்காற்றே நீ யார்? !
பூவாய் மலர்ந்து கொடியாய் படர்ந்த !
நேசத்தாவரத்தின் நிற மறிய !
உன்னைக்குவித்துக் கண்கள் மூட !
உன்னுள் வருவேன் !
நான்

காதல் ... காதல்...காதல்

சத்தி சக்திதாசன்
காதலென்னும் சோலையிலே கீதமொன்று பாடி வந்தேன்!
கன்னியுந்தன் கனவுலகில் நீச்சலடித்து மகிழ்ந்திருந்தேன்!
வண்ணமயில் தோகை போல விரிந்திருந்த கூந்தல் கண்டேன்!
வழிமறந்து விழிமூலம் உள்ளத்தினுள் குடி புகுந்தேன் !
புன்னகை அரும்பியதும் எந்நிலை இழந்து விட்டேன்!
பொன்னகை பூட்டி உந்த எழில்காணத் துடிக்கின்றேன்!
அன்னம் போல நடைபயின்று அள்ளிக்கொண்டாய் மனதினையே!
மின்னல் போன்ற இடையசைவில் எனை நானே தொலைத்து விட்டேன்!
வாட்டுகின்றாய் உள்ளத்தைக் கோதையுந்தன் நினைவுகளால்!
வாசமில்லை மலர்களுக்கு உந்தன் கூந்தல் ஏறாவிட்டால்!
மீட்டுகின்றாய் இன்பராகம் குயிலிசையாய் மொழிந்திடுகையில்!
மீதி என்னில் ஏதுமில்லை மிகுதி சொல்ல வார்த்தையில்லை!
தேவியுந்தன் கரம் பிடிக்க ஏகுதெந்தன் காளை மனம்!
தோல்வியில்லை என் காதலுக்கு காவியத்தில் வாழுமென்றும்!
நாளையெங்கள் வாழ்வினிலே நடப்பதெல்லாம் இன்பநிகழ்வுகளே!
நாயகியாய் நீ இருக்க நிற்பதெங்கே உணர்வலைகள் !
-சக்தி சக்திதாசன்

மழையும் நானும்

குரு
அடை மழை !!
நனைந்து விடுவோமோ !
என்ற பயத்தில் !
நீயும் !!
நீ !
நடந்தால் !
உன்னோடு சேர்ந்து !
மழையில் !
நனைந்தபடி !
நடக்கலாம் !
என்ற ஆசையில் !
நானும் !!!
ஆளுக்கு ஒரு ஓரமாய் !
நிற்கிறோம் !
மழையை பார்த்தபடி !
நம்மை பிரித்த !
சந்தோஷத்தில்!
மண்ணில் விழுந்து !
நக்கல் செய்கிறது !
மழை

கல்லறை நினைவுகள்

ஆர். நிர்ஷன்
அதிகாலை மல்லிகையை!
பறித்துவந்து!
அதில் வழிந்த!
சொட்டுப் பனித்துளியை!
நுனிவிரலில் ஏந்தி!
இனிக்கிறது தேன் !
என்று சொன்ன!
அந்த நாள்…!
ரயில் பாதையில்!
நான்!
ஓடி விழுந்தபோது!
உன் கைக்குட்டையில்!
எச்சில் தடவி!
ஒத்தடம் கொடுத்த!
நாள்…!
கரப்பானுக்கு பயந்து!
கூரையில் ஏறி!
தவறி விழுந்ததாய்!
நீ கண்ட கனவை!
நள்ளிரவில் !
தொலைபேசியில் கூறி!
என் கனவை!
கலைத்த நாள்…..!
யாரோ ஒருவன்!
வீதியில் இறந்துகிடக்க!
அருகில் அவன் மனைவி!
அழுவதைப்பார்த்து!
என்னைக்கட்டிப்பிடித்து!
எப்போதும் என்னுடன் இருப்பாயா!
என ஏக்கத்துடன் !
கேட்ட நாள்…!
மாமாவுடன் பேசியபொழுது!
இடையில் என்பெயரைக் கூறி!
நீ தடுமாறித் தவித்ததை!
அதே பயத்துடன்!
மழலை மொழியில்!
கூறிய நாள்…!
நகம்கடிக்கும் பழக்கத்தை!
விடச்சொல்லி !
நீ விரல்கடித்துக்கொண்டு!
அழுதுத் துடித்த!
அந்த நாள்…!
எப்போதோ நாம்!
ஒன்றாய் பயணித்த!
பயணச்சீட்டை!
பத்திரப்படுத்தி!
அடுத்தவருடம்!
அதே தினத்தில் !
முத்தம்கொடுத்தாயே!
அந்த நாள்…!
இவை அத்தனையும்..!
ஏன் !
இன்னும் எத்தனையோ!
நினைவுகளை !
நான்!
அசைபோட்டுக்கொண்டிருக்கிறேன்….!
யாரோ வைத்த !
கண்ணிவெடியில் - நீ !
கண்ணிமைக்கும் நேரத்தில்!
சிதறிப்போனதைத் தவிர….!
இன்னும் !
என்றும் உன்!
கல்லறையில்….!
-ஆர். நிர்ஷன்