மரணங்கள்.. அம்மாயெனும் - வித்யாசாகர்

Photo by Tengyart on Unsplash

மரணங்கள் வெறும் மரணமென்ற சொல்லாக.. அம்மாயெனும் தூரிகையே!
!
01.!
மரணங்கள் வெறும் மரணமென்ற சொல்லாக!
----------------------------------------------------------!
குருதி வடிக்கும் கண்களின்!
வருத்தம் புரியா உலகமிது;!
நின்று யோசித்து நிமிர்கையில் – காலம்!
அதோ எங்கோ போகிறதே….!!!
சுதந்திரம் விடுதலை என்று கேட்ட வாய்க்கு!
ரத்த காட்டாறும் சொட்டு ஆறுதல் கண்ணீருமே மிச்சமா?!
சோர்ந்து போகாத ஒரு இனத்தின் கூட்டம் உலகமெலாம்!
பரவி இருந்தும், மௌனத்தில் மூழ்கியதேனோ?!
சொல்லி அடித்த பரம்பரைதான்!
புது ரத்தம் தேடி – அலைகிறதோ;!
உயிர் செத்து மடிந்த சேதி கேட்டும்!
சுடும் கோபம் விடுத்து மரமானதுவோ?!!!
ஐயோ; மரம் கூட ஆயுதமானது!
இந்த மனிதர் ஏனோ மனிதமிழந்தார்,!
கோபம் துறந்தார், குழந்தை கண்கீறி ‘கிழவி உடல் அறுத்தும்!
எல்லாம் சகித்தாரே????????!!!!!!!!!!!!!!!!
இறையே!!!!!! இதில் ஏனோ நீயும் குருடானாய்!
நீ இல்லையென்று முழங்கவும் இச்செயலால் ஆளானாய்!
உனை வாரி இறைத்து மண்ணென சொல்லுது மனமும்!
உன் கால் பிடித்தே அழுகிறது தினமும்;!
கருப்பு ஜூலை, கீழ் வெண்மணி அவலம்!
செஞ்சோலை கொடூரம், முள்ளிவாய்க்கால் படுகொலை!
மாவீரர்களின் நினைவு நாட்கள் என இன்னும்!
எத்தனை எத்தனை கருப்பு நினைவுகளில்; வாழத் தகுமோ அம்மக்கள்??!!!
உலகெல்லாம் செய்தியாகி, கொஞ்சம் உணர்வு பொங்கி கவிதையாகி!
இத்தனை பேர் மாண்டார்கள், இப்படி ஓர் துயிலம் அழிக்கப் பட்டது!
இப்படி ஒரு கொடூரன் இருந்தான் என்று வரலாறு சொல்ல மட்டுமே!
இத்தனை உயிர்களின் பலியும், காலம் சுமந்த போராட்டமுமா????!
இல்லை இல்லை; காலத்தின் கண் மூடப் படவில்லை!
அநீதிக்கான இயற்கையின் தண்டனை கிடைத்தே தீரும்,!
கடவுள்; அம்மக்களின் விடுதலை தேசத்து நிம்மதியில்!
கண் திறப்பார்’ எனில் – நானும் நம்புகிறேன், ஈழம் மலரும்!!!
02.!
அம்மாயெனும் தூரிகையே!
--------------------------------------!
என் வாழ்வின் ஓவியத்தை!
வரையும் தூரிகையே -!
உந்தன் வளர்ப்பின் வண்ணத்தில்!
அழகுடன் மின்னுபவன் நான்;!
பாட்டின் ஜதிபோல!
எனக்குள் என்றும் ஒலிக்கும் உயிர்ப்பே - உன்!
அசைவில் மட்டுமே அசைந்து -!
நீ அணைந்தால் அணையும் விளக்கு நான்;!
நடைபாதையின் முட்களை மிதித்து - என்!
கால்வலிக்கா பூமிமலர்களாய் பூத்துப் போன - அர்ப்பணமே!
உன் அன்பிற்கு - அன்றும் இன்றும்!
நீ மட்டுமே; நீ மட்டுமே; உனக்கு ஈடானாய்!!
உண்மையில், காற்றின் சப்தத்தை!
இசையாக்கிக் கொடுத்த ஒரு!
யாழின் பெருமை -!
உன்னையே சாரும் அம்மா!!
இனியும், வாழ்க்கை என்று ஒன்று உண்டெனில்!
இன்னொரு பிறப்பென்று ஒன்று உண்டெனில்!
நீ யாருக்கு வேண்டுமாயினும் அம்மாவாக இரு!
நான் - உனக்கு மட்டுமே பிள்ளையாக - பிறப்பேனம்மா
வித்யாசாகர்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.