இலவச சேலையும் இல்லாது போய்விடுமோ - சாந்தி

Photo by engin akyurt on Unsplash

என்றெண்ணி மிருகமாய் மாறிய என்மக்கள் !
கவனக்குறைவால் தடுமாறிய உன்னை !
முகம் முதுகு மார்பு வயிற்றில் மிதித்து !
உயிர் உடைத்தனர்... !
சேலை வாங்க போன ஆத்தா !
செத்துப்போனாள் எனச்சொல்ல !
வெட்க்கமாகத்தான் இருக்கிறது... !
நெருப்பில் உன்னுடல் எரிந்திருக்கையில் -உன்னை !
மிதித்து வதைத்த கால்களுக்குச் சொந்தக்கார கண்கள்சில !
நீரில் நனைந்திருக்கும்... !
இதோ !
எவரோ எறிந்துசென்ற சேலை !
இதயமாய் கனக்கிறது என் கைகளில் !
...ச்ச்ச்ச்சீய்ய்ய்ய்ய்ய்............ உன் மரணத்திற்கு பாதைவிரித்த !
சேலையொன்றும் எனக்கு தேவையில்லை-எனவே !
எறிகிறேன் சேலையை...எரியும் உன் பிணத்தின் மேலே... !
ஒரு வேளை.. !
சேலையில் பற்றிக்கொண்ட !
நெருப்பின் ஜுவாலையில் !
இந்தியா ஒளிரக்கூடும்... !
இன்னும் பிரகாசமாய்...!!! !
----சாந்தி மனோகரன்
சாந்தி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.