தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

விருதுகள் வாங்கும் எருதுகள்…

அஸ்மின், ஈழநிலா, இலங்கை
ஈழநிலா -!
எருதுகளுக்கு !
விருதுகள் வழங்க!
மாடுகள் கூட்டிய!
மாநாடு அது…!
நடப்பன ஊர்வன!
நடிப்பன பறப்பன!
விலங்குகள் சிலவும்!
விழாவுக்கு வந்தன…!
காணிகளை!
களவாக மேய்வதில்!
‘கலாநிதி’ முடித்த !
கிழட்டுக் கிடாக்கள்தான்!
கிரீடத்தை சூட்டுகின்றன…!
இலவம் பழத்துக்காய்!
இலவுகாத்த!
மூளையே இல்லாத!
முட்டாள் கிளிகள்;!
கீச்சுக் குரலில்!
மூச்சு விடாமல்!
சிறுநீரை பற்றி!
சிலாகித்து பேசின…!
ஒலிவாங்கியை!
எலி வாங்கி!
எருமைகள் பற்றியே!
எடுத்துவிட்டன…!
பாவம் பசுக்கள்…!!
பாலைப் பலருக்கும்!
பருகக் கொடுத்துவிட்டு!
குட்டிகளோடு!
குமுறிக் கொண்டிருந்தன!
குளக்கரையில்.!
பசுக்களை!
கொசுக்கள் கூட!
கணக்கில் எடுக்கவில்லை….!
பாம்புகள்!
பாலுக்காய்!
படப்பிடிப்பிலிருந்தன…!
வெட்கமில்லாத!
வெண்பசுக்கள்!
முலைகளை!
மூடிமறைக்காததால்!
முள்ளம் பன்றிகள் பார்த்து!
மூச்சிரைத்தன…!
பார்க்கு மிடமெங்கும்!
பாலே ஓடியது…!
பூனைகள் எலிகளோடு!
புன்னகைத்தவாறு!
முயல்களை!
முழங்குவது போல் பார்ப்பதில்!
மும்முரமாய் இருந்தன…!
எருதுகளுக்கு !
விருதுகள் வழங்க!
மாடுகள் கூட்டிய!
மாநாடு அது…!
வாழ்த்துப் பாடின!
வால் பிடித்தே!
வயிறு வளர்க்கும்!
வாலான் தவளைகள்….!
கால் பிடித்தே!
காரியம் முடிக்கும்!
காகங்களும்!
கழிசரைக் கழுதைகளும்!
காளைகளுக்கு மாறி மாறி!
கவரிவீசின…!
மாக்கள் கூடிய!
மாநாடு அல்லவா…? !
பூக்களுக் கங்கே!
புகழாரமில்லை!
அழுக்குத்தான் அன்று!
அரியணையில் இருந்ததால்!
சாணமே அங்கு!
சந்தனமாயிருந்தது…!
தயிர்ச் சட்டிளாலும்!
நெய் முட்டிகளாலும்!
இவ்வருடத்திற்கான விருதுகள்!
இழைக்கப்பட்டிருப்பதாகவும்!
பருந்துகளுக்கு !
விருந்து வழங்கினால்தான்!
அடுத்த வருடத்திற்கான!
‘ஆளுநர்’ தெரிவாவரென்றும்!
அதிலும்@!
முதுகு சொரிவதில்!
‘முதுமாணி’ முடித்தவர்களுக்கே!
முன்னுரிமை இருப்பதாகவும்!
முதலைகள்!
முணுமுணுத்தன…!
எருதுகளுக்கு !
விருதுகள் வழங்க!
மாடுகள் கூட்டிய!
மாநாடு அது…!
நாக்கிலுப்புழு ஒன்றே !
நடுவராக இருந்ததால்!
மான்களுக்கும்!
மயில்களுக்கும்!
மரியாதை அங்கில்லை.!
வான் கோழிகளுக்குத்தான்!
வரபேற்பிருந்தது.!
பரிகளும் வரவில்லை!
நரிகளும்!
நாய்களுமே!
நாற்காலியை நிறைத்திருந்தது.!
மாநாட்டின் ஈற்றில்!
எருமைகள் பற்றி!
பெருமையாய்!
சாக்கடை ஈக்கள்!
சங்கீத மிசைத்தன….!
மரம்விட்டு!
மரம்தாவும்!
மந்தி!
மந்திரிகள்!
கையடித்தன!
கைலாகு கொடுத்தன… !
எதுவுமே தெரியாத!
எருமைகளுக்கு!
பன்னாடைகளால!
பொன்னாடை போர்த்தி!
பொற்கிழி வழங்கின… !
மாடுகளின் மாநாட்டில்!
விருதுகள் பெற்ற!
எருதுகளின்!
வீர பிரதாபங்களும்!
பல்லிளிப்புடன் கூடிய!
படங்களும்!
விளம்பரமாய்!
நாளை வரலாம்!
நாய்களின் பத்திரிகையில்

யாரும் அறியாத நாம்

அறிவுநிதி
உன்னை வரையும் பாக்கியம்!
என்விரல்களில் காத்திருக்கின்றன.!
என் உடலெங்கும்!
நீயான ஓவியம்!
ஓட்டப்பட்டள்ளது!!
மௌனம்!
உன் மொழியான போதும்!
விழிகள் உரையாடிக்கொண்டே இருக்கிறது.!
எனதான சொற்களை!
உன்னில் நிரப்புகிறேன்.!
நீ வெளிப்படுத்தாத புன்னகை – சில!
ஸ்தம்பிப்புகளை திறந்துகொண்டு!
என் இதழ்ஆரம் நிகழ்கிறது.!
நீ வினோதங்கள் ஆகிறாய்,!
நான் புன்னகையாகிறேன்!
கண்முன் - ஒரு!
பயணத்தை ஒப்படைக்கிறாய்.!
அதைமேற்கொள்ள!
பூக்களையும் பரிசளிக்கிறாய்!
உன்னை தாங்கிக்கொள்ள!
கரம் ஏந்துகிறேன்!
நீ நழுவி!
எனக்குள் விழுந்து கொண்டே இருக்கிறாய்!
யாரும் அறியாத ரகசியமாய்!!
கவி ஆக்கம்: அறிவுநிதி

ஏய் உன்னைத்தானே!

சத்தி சக்திதாசன்
காலடிச் சுவடுகள்!
கண்டாயா ? தம்பி!
கருத்தினை நெஞ்சினில்!
கொண்டாயா ?!
நேற்றைய உலகினில்!
தோன்றிய மனிதர்கள்!
தோற்றிய சரித்திரம்!
புகட்டிய பாடங்கள்!
தீட்டிய செவியினில்!
பாய்ச்சிய செய்திகள்!
பூத்திடும் விழிகளில்!
காட்டிய காட்சிகள்!
நெஞ்சினில் நீயும்!
கொண்டாயா ?!
நாளத்தில் பாய்ந்திடும்!
உதிரத்தின் வேகம்!
உசுப்புகின்ற ஆசைகளை!
உணருகின்ற தருணத்தில்!
உதிர்ந்துவிடும் இலை போல!
முதிர்ந்து விடும் மனம்!
அறிந்து விடு தம்பி!
புரிந்துகொள் உண்மையை!
முன்னே!
நடந்தோர் பாதையை நீ!
தொடர்ந்திடும் போதிலும்!
மனதினில் கேள்வியை!
அடுக்கடுக்காய் தொடுத்திடு!
கிடைத்திடும் விடைகளை!
தராசிலே நிறுத்திடு!
நீதியின் எடைதனை நீயும்!
ஏற்றியே காத்திடு!
உண்மையின் பாதையில்!
உழைத்திடும் செல்வமே!
உன்னிடம் உறைந்திடும்!
உள்ளத்தின் சத்தியம்!
இருப்பது அனைத்தையும்!
இழப்பதல்ல உன் தர்மம்!
கிடைப்பதில் ஒரு துளி!
கிடைக்காத உயிர்களுக்கு!
கொடுப்பதில் உள்ள சுகம்!
கொஞ்சமல்ல அறிந்து கொள்!
உலகம் என்னும் புத்தகத்தில்!
உனக்கென சில பக்கங்கள்!
புரட்டிப் பார்க்கையில்!
புல்லரிக்கும் வகை செய்திடு!
நாளகள் உன் கையில்!
நல்லவையும் கெட்டவையும்!
நாளைய தலைவர்கள் ஆகிடும்!
தம்பி, தங்கையர் உங்கள் செயல்களில்!
உள்ளத்தில் தெறித்த உணமைத்!
துளிகளை உங்கள் மீதும்!
தெளித்து நான் வாழ்த்தி நின்றேன்!

என்னவாய் இருக்கக் கோருகிறது?

ரவி (சுவிஸ்)
புத்தாண்டு பிறக்க இன்னமும்!
சில மணித்தியாலங்கள் இருக்க,!
வாங்க மறந்த சம்பானியாப் போத்தலுக்காக!
விரைகிறேன் நான்.!
காசா மீதான இஸ்ரேலின் சண்டித்தனத்தால்!
டுபாய் புத்தாண்டு நிகழ்ச்சிகள் இல்லாமல் போன துயரில், தலையில் கைவைத்தபடி!
குந்தியிருக்கிறான் ஒருவன்,!
நகரின் மையத்தில்.!
குறுக்கும் நெடுக்குமாக வெட்டப்பட்டிருக்கும்!
பதுங்கு குழிகளில் துப்பாக்கிகளோடு காத்திருக்கிறார்கள்!
அல்லது பிணமாய்க் கிடக்கிறார்கள்,!
இராணுவமும் போராளிகளும்.!
போர்ப்பட்ட பெருநிலமெங்கும்!
மூடுண்ட வெளியுள் துயருறுகின்றனர் மக்கள்,!
சாவில் தொங்கவிடப்பட்ட தம் உயிர்களுடன்.!
விடுபட்ட நிலங்களில்!
காணாமல் போகிறார்கள் இளசுகளும் முதிசுகளும்.!
வெள்ளைவான் இன்னமும் துருப்பிடித்தபாடில்லை.!
விமானங்களின் இரைச்சலில்!
பயணிகளின் நினைவுக்கு அப்பால் செல்லமுடியாத!
என் குழந்தைக்கு!
விமானங்கள் குண்டுகள் வீசுவதுபற்றிய!
பயங்கரத்தை நான் கதையாய்ச்!
சொல்லிக்கொண்டிருந்தேன்.!
ஆண்குறிக்கு இராணுவ உடை போர்த்த!
ஈரதிகாரத்தின் விறைப்பில்!
பெண்ணுடலை குதறுகிறான் ஒரு இராணுவத்தான்.!
போதைப்பொருளின் இழுப்பில்!
பிசாசறைந்த முகத்துடன் விசர்க்கிறான்!
இன்னொரு இராணுவத்தான்.!
காவலரணில் விடப்பட்டிருக்கிறான் மற்றவன்!
தன்முன்னால் வெடித்துச் சிதறிய தன்!
நண்பன் பற்றிய கதையையோ!
அல்லது!
குற்றுயிராய்க் கிடந்த தன் நண்பனை தானே!
உயிரோடு புதைக்கப் பணிக்கப்பட்டதை நினைத்தோ!
அவன் சபித்திருத்தலும்கூடும்.!
மண்ணுக்காய் என!
பறிபோன அல்லது பறித்தெடுக்கப்பட்ட தம் புதல்வர்க்காய்!
கடவுளிடம் கையேந்தி நிற்கிறாள் தாய்.!
இராட்சதக் குண்டுகளின் குழிகளில்!
பிஞ்சொன்றை பிணமாய் வீசுவதில்!
துயருறா நெஞ்சங்களுடன் மனிதர்கள் இலர் என!
நான் இப்போதும் நம்புகிறேன்.!
போர்கள் வேண்டாம், வேண்டவே வேண்டாம்!
என்பதெல்லாம்!
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதுபோல!
பேச்சொழுக்காய்ப் போனது.!
அதிகாரம் கழுத்தில் ஓர் சால்வையையோ!
அல்லது இடுப்பில் ஓர் துப்பாக்கியையோ!
சொருகியபடி திரிய,!
களத்தில் உயிர்கள் ஒடிந்துகொண்டிருந்தன.!
போரின் வெற்றியை தீர்மானிக்க!
பிணங்களின் எண்ணிக்கையை!
பிரித்துப் பார்த்தபடி இருக்கிறான் என் நண்பன்.!
என்னவாய் இருக்கக் கோருகிறது இந்தப் போர்!
என்னை.!
சம்பானியாப் போத்தலுடன்!
வீடு திரும்பிக்கொண்டிருந்தேன் நான்!!
-ரவி (31122008)

தோல்வி இல்லை.. உலகுக்கு உணவு

இரா.இரவி
தரும் உழவர்கள் !
01.!
தோல்வி இல்லை !
----------------------!
விரக்தி வேண்டாம் விரட்டி விடு!
கவலை வேண்டாம் களைந்து விடு!
துக்கம் வேண்டாம் துரத்தி விடு!
துயரம் வேண்டாம் துறந்து விடு!
மகிழ்ச்சி வேண்டும் மகிழ்வாய் இரு!
இன்பம் வேண்டும் இன்முகமாய் இரு!
புன்னகை வேண்டும் சிரித்தே இரு!
தன்னம்பிக்கை வேண்டும் விழித்தே இரு!
முயற்சி வேண்டும் வெற்றி பெறு!
பயிற்சி வேண்டும் திறமைகள் பெறு!
இலட்சியம் வேண்டும் பயணம் தொடரு!
உழைப்பு வேண்டும் உறக்கம் குறைத்திரு!
நெருப்பு வேண்டும் நெஞ்சில் வைத்திரு!
துடிப்பு வேண்டும் நரம்பில் அணிந்திரு!
முயன்றால் முடியாதது எதுவுமில்லை உலகில்!
முனைப்போடு முயன்றால் தோல்வி இல்லை உலகில்!
02.!
உலகுக்கு உணவு தரும் உழவர்கள் !
-------------------------------------- !
உலகுக்கு உணவு தரும் உன்னத உழவர்கள்!
உலகம் உணரவில்லை அவர் தம் பணிகள்!
வெயில் என்றும் மழை எனறும் பாராது!
வாடி வதங்கி நிலத்தில் விளைவிக்கின்றனர்!
மனிதர்களின் உயிர் வளர்க்கும் அட்சயப்பாத்திரங்கள்!
மண்ணில் உயிர் வெறுத்து மாய்த்து மடிகின்றனர்!
விவசாய நிலங்களை வெளிநாட்டவருக்கு விற்கின்றனர்!
வாழ வழியின்றி விவசாயிகள் சாகின்றனர்!
மண்ணின் மைந்தர்களுக்கு மண் சொந்தமில்லை!
மேல் நாட்டவரின் பணத்தால் வந்தது தொல்லை!
நிலத்தடி நீரை உறிஞ்சி கோடிகளை குவிக்கின்றனர்!
நிலத்திற்கு நீர் பாய்ச்சிட இன்றி விவசாயிகள் துடிக்கின்றனர்!
கடலில் வீணாக கலக்கும் நீரை தர மறுக்கின்றனர்!
கண் கலங்கி பயிர்வாட விவசாயிகள் வாடிகின்றனர்!
மரபணு விதைகள் என்று மலட்டு விதைகள் தருகின்றனர்!
மறு விவசாயத்திற்கு பயன்படாத குப்பையை!
விற்கின்றனர்!
பூச்சி மருந்து பூச்சியை விட விவசாயிகளையே கொல்கின்றது!
உரத்தின் விலையோ விவசாயிகளின் சக்தியை குறைக்கின்றது!
விவசாயம் நாட்டின் முதுகெலும்பு என்றனர் அன்று!
விவசாயிகளின் முதுகெலும்பை முறிக்கின்றனர் இன்று!
விளை நிலங்களில் எல்லாம் வீடுகள் கட்டுகின்றர்!
விரைவில் உணவுத்தட்டுப்பாடு உலகிற்கு வரும்!
விவசாயி தழைத்தால் விவசாயம் தழைக்கும்!
விவசாயம் தழைத்தால் உலகம் தழைக்கும்

என்னைத் தொலைத்த நான்

ஆர். நிர்ஷன்
மெழுகுவர்த்தியில் அவள்!
முகம்பார்த்துப் பின்!
பேனை பிடித்து – அந்த!
மனோகரத்தை வரையும்!
வேலையில்லாதவன் நான் ..!!
கண்திரை மூடும்போதும்!
நித்திரை வேண்டாமென!
நித்தம் உன்!
நினைவில் வாடிய!
ஜீவனில்லா ஜடம் நான் ..!!
அல்லிப்பூவின் இதழ்கொண்டு!
வெள்ளைமணலில் பெயர்செதுக்கி!
கடலைத்தூற்றி!
கரையை அணைத்த!
பைத்தியக்காரன் நான் ..!!
மனோகரத் தோற்றத்துக்கு!
மணிமணியாய் வார்த்தை தேடி!
தமிழில் வார்த்தை கொஞ்சம் என!
ஒருவரியில் பொய்சொன்ன!
பொல்லாதவன் நான் ..!!
துணையாய் இருப்பாயென நம்பி!
தோள்கொடுத்த!
தோழனை தூக்கியெறிந்து!
தனிமையில் தவித்த!
துரதிர்ஷ்டசாலி நான் ..!!
நெஞ்சம் செய்யும்!
கபளீகரத்தில்!
தாயின் நெருடலை!
தொல்லையென்றொதுக்கிய!
துர்மனக்காரன் நான் ..!!
மொத்தத்தில்!
காதலுக்காக!
வாழ்வை இழந்து!
காதலிக்காக!
என்னை இழந்த!
உதாரணவாதி நான் ..!!
ஆர்.நிர்ஷன்

வாழ்க்கை

நளாயினி
பயணம் !
அது எத்தனை !
நீண்ட தொடராய் !
ஏறுவோரும் !
இறங்கு வோரும் !
நேரத்தை தவறவிட்டு !
காத்து நிப்போரும் !
அருகிருந்து !
சிரித்துவிட்டு !
முகம் சுழித்தே போவோரும் !
பிடிக்காத போது !
விலத்தி இருக்க !
வைப்போரும் !
கைபிடி தவறி !
படிகளில் விழும் போது !
ஓடி வந்து !
கைபிடித்து !
தூக்குவோரும் !
பாரங்களை !
சுமக்கிற போது !
பக்குவமாய் !
இறக்கி வைக்க !
உதவுவோரும் !
மலையில் இருந்து !
விழும் நீர் வீழ்ச்சியாய் !
மனசெல்லாம் !
அதன் உணர்வெல்லாம் !
மகிழ்வைத்தருவோரும் !
இது புகையிரதப்பயணம் !
போல் தா¤ப்பிடங்கள் !
ஏதும் இல்லை. !
பலர் ஏறுவர்இறங்குவர் !
காணாமலும் போவர். !
ஆனாலும் யாரோ !
ஓரிருவர் மட்டுமே !
காக்க வைத்து !
தவிக்க விட்டு !
பயண முடிவு வரை !
வரவேண்டும் என !
!
ஒத்த உணர்வலைகள் !
நிச்சயம் !
தொடர்ந்து வரும். !
சுவாரசியமம்துன்பமும் !
ஏக்கமும்ஆசைகளுமாய் !
பயணம்நீண்டு தான் !
போகிறது

அரசியல்

சாந்தி
நடைபாதையில் தடங்களாய் கிடக்கும் !
சிறுபாறையை ஒதுக்கிப்போட !
யோசித்து ஒதுங்கினேன்... !
ஆளின்றி வழிந்தோடும் தெருக்குழாயை !
மூடத்தோன்றாமல் கண்மூடி !
கடந்து சென்றேன்... !
பாதையை கடக்க குருடனொருவன் !
உதவி கேட்கையில் !
அவசரமாய் உதறித்தவிர்த்தேன் !
சுமைதாங்காது உதவிக்காய் எதிர்பார்த்து !
ஏங்கி நின்ற பெரியவர்கண்டு !
எள்ளி நகையாடினேன்... !
எனைப்பார்த்து !
சரியாகத்தான் சொன்னான் !
ஜோசியக்காரன்..!! !
பின்னாளில் !
பொதுசேவையில் ஈடுபட்டு !
மக்களுக்கு சேவை செய்ய தேவைப்படும் !
லட்சணங்கள் அனைத்தும் !
கச்சிதமாய் பொருந்துவதாய்..!!! !
-சாந்தி

வெளிநாட்டுச் செய்திகள்

றஹீமா-கல்முனை
வறுமையும்!
இந்த கிடுகு குடிசையும் தான்!
மத்திய கிழக்கு மண்ணை!
நோக்கி!
என்னை!
தூர நகர்த்திட்று.... !
தோளில் பயணப்பொதிகளின்!
சுமைகளோடும்....!
மனசு பூராவும்!
எம்மாத்திரம்!
ரணங்களோடும்!
போய்வருவதாய் சொல்லி!
விடைபெறுகிறேன்..... !
அப்போதைக்கு!
யாரும் என்னை!
தடுத்து நிறுத்தவேயில்லை!!! !
குழந்தைகள்!
குதூகலிப்பிழந்து....!
கண்களைகசக்க!
வீட்டு மூலையில் இருந்து!
உம்மாவின்!
முணகல் சத்தம்!!!!
அவர் !
தலைகவிழ்ந்தபடி!
பேசாமல் நிற்க!
நான் விடைபெற்றேன்!!! !
மத்திய கிழக்கு மண்ணை நோக்கி!
என் விலாசம் நகர்த்தி....!
பணிப்பெண்ணாய்!
இப்போதைக்கு நான் !
சொல்லமுடியாத!
துயரங்களுக்கு நடுவிலும்!
புழுவாய் நெளிந்து..... !
ஊறிப்பொழிந்த!
வியர்வைகளை!
பத்திரப்படுத்தி பணமாக்கி!
என் விலாசம் நோக்கி!
நகர்த்தி !
சில வருடங்களின்!
தொலைவில்!
அவருக்குப்பிடிக்கும்!
குழந்தைகளுக்குப்பிடிக்கும்!
என!
வாங்கிக்குவித்ததை எல்லாம்!
தோள்களில் சுமந்தபடி..!
மறுபடியும்!
என்!
பிறந்த மண்ணில்!
வந்து வீழ்கிறேன்!!!! !
எம்மாத்திரம் சந்தோசம்!
எம்மாத்திரம் கனவு.... !
ஊரே மாறிப்போயிருந்தது;!
கிடுகு வேலிகள் தொலைந்து!
மதில்களில் ஒரு!
கம்பீரம் தெரிந்தது..... !
அரைகுறையாய் கிடந்த!
வீடுகள் எல்லாம்!
நாகரீகத்துக்குள்!
பக்குவப்பட்டிருந்தன.....!!! !
விரைவைக்கூட்டி நடக்கிறேன்!
வீடு வந்தது....!
முற்றத்திலேயே!
முறிந்து விழுந்தது!
என் - முகம் !!!!!!!!!!!!!!
போகும் போதிருந்ததை விடவும்!
பொத்தல் விழுந்து!
இத்து இறந்து போய்!
என் - குடில் !!! !
வயசுக்கு வந்த மகளோடு....!
வயதான!
என் - உம்மா !
விஷயம் அறியாமல்!
தேடிப்போனபோது!
அவர் !
நின்றிருந்தார் !!!!
போகும்போது நின்றிருந்தாரே!
தலைகவிழ்ந்தபடி ......!
அப்படியேதான்!
இப்போதும் நின்றிருந்தார் !
அடுத்த தெருவில் இருக்கும்!
இன்னொருத்தியின்!
முற்றத்தில்

ஏழை நீயிது மறவாதே

எசேக்கியல் காளியப்பன்
பார்த்து இரசி!
படுத்துத் தூங்கு!
பாடி எழுப்ப நினையாதே!!
கூர்த்த மதியினர்!
கோடியில் உள்ளனர்!
கூவி யழைக்க முனையாதே!!
சேர்ந்து நின்றிடு!
செய்கை யற்றிறு!!
சேதம் கண்டு கொள்ளாதே!!
ஊர்ந்து செல்பவர்!
ஊரில் பலபேர்!
உதைத்துக் கொண்டு செல்லாதே!!
எங்கே இலவசம்!
அங்கே சென்றிடு!!
எதையோ நினைத்து மறுக்காதே!!
இங்கே விதிவசம்!
இதுவே பரவசம்!
ஏழை நீ அது மறவாதே!!