சிநேகிதியே,!
ஞாபகமா அந்த நாள்...?!
நீயும் நானும்...!
மாலை வகுப்புக்காய் !
நடை பயில்வதைப்போல்...!
என் பின்னால் நீயும் உன் பின்னால் நானுமாக!
மறைந்து மறைந்து சென்றோமே...!
நினைக்கும்போது பற்கள் விரிகிறது.!
ஆமாம்,!
கேட்கிறேன் இப்போ நானும் உன்னை-!
ஏன் தானோ நாமும் ஒளிந்தோம்?!
அதிகம் சிரிக்காதே!!
நம் சிரிப்பொலி எட்டும் விண்ணை.எஜமானின் கையிலிருந்து!
சக்கரை கொட்டும் வரை!
காத்திருக்கும் எறும்புகளைப்போல்,!
நம் விடுதி வாயில் திறக்கும் வரை காத்திருந்த!
அந்த ஜீவன்களை ஞாபகமா?!
பார்க்கப்பரிதாபம்...!!
'பொத்தினால் கண்ணை பிடுங்கிடுவோம்' என்று யார் தான் சொன்னார்கள்?நேரத்தை கழிக்க ஒன்றும் இல்லை என்று!
எட்டிப்பார்த்தன அக்கண்கள்.!
பாவம்!!
இச்சூழ்ச்சிகளை அறியாது ஒளிந்தார்கள் இப்பாவைகள்.ஞாபகமா அந்த குட்டிச்சுவரை?!
'மடல் மடிக்காத பார்வைகளின் ஊற்று'-அது!
பெண்களின் ஏச்சுக்களால் சற்று புதையுண்டு கிடக்கிறது.நம் விடுதி பொலித்தீன் மதிலை சற்று உன் கண் முன்னே நிறுத்து...!!
அவர்களின் வில்லாம் - அக்கண்களிலிருந்து வந்த பார்வை அம்புகளால் - அது கிழிந்து!
கிடக்கிறது.!
புதுப்பித்தும் திரும்பத் திரும்ப கிழிந்ததும் ஏன் தானோ?நினைவலையிலிருந்து...!
கவிதை சொன்ன அந்த நாட்கள்,!
நீ ஒளிந்து கிழிந்த என் சட்டை'!
என்றும் நட்பை புதுப்பித்துக்கொண்டே இருக்கும்...!
அதுவும் ஒரு காலம்!!!!!!
!
-துர்ரத் புஷ்ரா அனஸ்

துர்ரத் புஷ்ரா