எது நிஜம்?!
எது நிழல்?!
வெளிச்சம் நிஜமா?!
நிழல்கள் பொய்யா?!
நிழல்களை ஏன் நாம்!
நிஜமற்றவைக்கு ஒப்பிடுகிறோம்.!
வெளிச்சம் யார் கொடுத்தது?!
ஞாயிறு அனுப்பி வைக்கும்!
அற்புத கதிர்களோ?!
நிழல் எங்கிருந்து வந்தது?!
கடன் வாங்கிய கதிர்கள்!
தடைபடும் போது!
தோன்றுவதானே.!
பகல் மாயை.!
இரவு உண்மை.!
வெளிச்சம் பொய்.!
நிழல் மெய்.!
இரவென்பது நிழல்.!
இருட்டென்பதும் நிழல்.!
நிழல் என்பதே நிஜம்.!
-கவிதா நோர்வே
கவிதா. நோர்வே