தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

பால்யம் நகரும் பொழுதை மிதி

எம்.ரிஷான் ஷெரீப்
ஆலயங்களின் பெரும்பரப்பில் !
அமைதி தேடிப் பாதங்கள் பதியும்!
நாட்கள் நினைவில் இடற!
ஒரு மலை போன்ற வேதனை,!
ஒரு வனாந்தரப்பசுமை!
அத்தனையும்!
ஒருங்கே கொண்ட நெஞ்சுடன்!
கனவாய்க் காற்றாய்!
வாழ்க்கை தொலைத்தேன்;!
யாதுமாகி நின்ற உன்னையும்தான் !!
பால்யத்துப் பள்ளிக்கூடங்களில் !
ஒன்றாய்த் திரிந்தோம்;!
கூழாங்கற்கள்,ஓட்டுத் துண்டுகளைக்!
கையால்,காலால் விளையாடிச் சோர்ந்துபின்!
காட்டு இலைகளையும்,மணலையும்!
சிரட்டையில் அள்ளிச் சோறாயெண்ணி உண்டோம் !!
என் முழங்கால்ச் சிராய்ப்புக்கு!
உன் எச்சில் தடவினாய்,!
எவனோ உன் பட்டப்பெயர் சொல்லிக்கூவ!
அவன் சட்டை கிழித்துச் சண்டை பிடித்தேன் !
காதலில்லை,காமமில்லை!
அறுவெறுக்கும் எந்த அசிங்கங்களும்!
அதிலிருக்கவில்லை !!
புது வயதுகள் பிறக்க,!
பால்யம் பாதி கரைய,!
வசந்தங்கள் உன் வாழ்வில் வர!
நான் தனித்து வரண்டுபோனேன் ;!
என் இரகசியச் சினங்களைத்!
தூறலாய்ப்பொறுத்து!
முக்காட்டுக்குள் நீ புகுந்தாய்,!
நான் யாதாகித் திரிகிறேன்...?!
நாடுதாண்டிக் கண்டம் தாண்டி,!
செவியேற்க யாருமற்ற!
பாழ்வீதியொன்றில்- நானின்று!
நின்றுகொண்டேயிருக்கிறேன்!
என் துயரங்களைப் பாடியபடி;!
சாபங்கள் துரத்தித் துரத்தி விழுங்கி!
பூமிக்குள் புதையுண்டிருக்குமெனது!
பாதங்களை மீளப்பெறும் நாளில்!
நாடேகுவேன் !!
அன்று !
வீதியில் உன் மழலைகள்!
செம்மண் தூசு உடல் அப்ப!
பால்யத்தில் திளைத்து விளையாடுவதைக் !
காண நேரிடலாமெனக்கு..!!
!
-எம்.ரிஷான் ஷெரீப்,!
மாவனல்லை,!
இலங்கை

இசையாக, அய்யனார்

ப்ரியன்
இசையாக!
******!
ஒடிந்த வலியினையும்!
தீக்கோலிட்ட!
புண்ணினது ரணத்தையும்!
காற்றினூடே!
சொல்லிச் சொல்லி!
அழுகிறது!
புல்லாங்குழல்!
- ப்ரியன்.!
அய்யனார்!
*********!
சென்ற வருட வறட்சிக்கே!
ஊர் காலியானது தெரியாமல்!
இன்னும்,!
காவல் காத்துக்!
கொண்டிருக்கிறார்!
ஊர் எல்லையில் அய்யனார்!
- ப்ரியன்

அடக்குமுறை அறுத்தெறிவோம்

நிந்தவூர் ஷிப்லி
புதிய நாள் புலர்கையிலே!
புதிது புதிதாய் கற்பனைகள்!
அந்தி மாலை மலர்வதற்குள்!
அடுத்தடுத்து படுகொலைகள்!
மூபத்து அகவைகளாய்!
மூடப்பட்ட உரிமைகள்!
எல்லோர்க்கும் சொல்வதற்கு!
இல்லை இங்கே உவமைகள்!
வலிகளுக்குள் உறைந்து போனோம்!
வழிகளற்ற பயணமடா !!
அடுத்த திசை மறந்து போனோம்!
அநேகம் அத மரணமடா !!
அவலங்களும் அழுகைகளும்!
எஞ்சி நிற்கும் சொத்தாச்சு!
சத்தமிட்டு கதறியழும்!
சுதந்திரமும் ரத்தாச்சு!
நாய்களும் பேய்களும்!
நல்லவராய் நடிக்கிறது!
உப்பிலிருந்து கற்பு வரை!
அத்தனையும் கடிக்கிறது!
பத்தோடு பதினொன்றாய்!
பயந்த காலம் கொளுத்திடுவோம்!
கைகளெல்லாம் துணிந்தபின்னே!
கயவர் தலை அறுத்திடுவோம்!
பொறுமைகள் கொதித்தெழுந்தால்!
பூமியினி தாங்காது!
சிறுமைகள் களைத்தெறிவோம்!
சிலுவைகள் இனியேது ?!
தடையுடைத்து புறப்படுவோம்!
தடுமாற்றம் தேவையில்லை!
அடக்குமுறை அறுத்தெறிவோம்!
அதன்பின்னே வேலையில்லை!
வெகுண்டெழுவோம் நண்பர்காள்!
வாருங்கள் ஒன்றிணைவோம்!
இழந்துவிட்ட உரிமைகள்!
அத்தனையும் அன்றே அடைவோம்!
-நிந்தவூர் ஷிப்லி!
தென்கிழக்குப்பல்கலை!
இலங்கை

எனது தாய் நிலம்

அசரீரி
காலைகளின் அதிகாரத்தால்!
தினமும் உடைந்து சிதறுகிற!
எங்களின் சூரியனும்!
அதி இருட்டான எம்!
பயணப் பாதையில்!
பயந்தரும் பெரும் சப்தத்தோடு!
நெருப்புத்தனமாய் முடியும்!
பெருமூச்சுகளுக்குமப்பால்!
வேறொன்றுமில்லை இனி..!
மிக மிக அதிகமாய்!
கைதிகள் நிரம்பியும், நிரம்பவும் இருக்கிற!
என் தாய்நிலத்தில்!
வேறொன்றுமில்லை இனி..!
-அசரீரி

இருத்தல்

தென்றல்.இரா.சம்பத்
சகியே.......!
நீயிருந்த வீதி வழி!
சென்றுவந்தேன்!
எனைப்போலத்தான் !
வாட்டமாய் தலைசாய்த்தபடி!
எல்லாப் பூக்களும்!
எல்லாச் செடிகளும்!
எல்லா மரங்களும்!
உற்றுக் கவனித்தேன்!
அதன் இதழ்களை....!
என்னவடி ஆச்சர்யம்!
உன் இதழ்தொடாத!
என் உதடுகளைப் போலவே!
உணர்வற்று... உயிரற்று...!
எல்லாமும்.!

எத்தனை வருடங்கள்

கவிதா. நோர்வே
தேசத்திற்காய்!
குரலும் கொடுத்து!
உயிரும் கொடுத்து!
இல்லை!
எடுத்து...!
எனக்கும் விருப்ம்தான்!
தேசியவாதி என்று சொல்லிக்கொள்வதில்!
இருந்தும் நெருடுகிறது!
தேசம்விட்டு வந்தபின்னே!
தமிழுக்காய் குரல் கொடுப்போம்!
எனச் சொன்னவர்கள் எல்லாம்!
தமிழ்பற்றாளர்களாயும்!
தேசப்பற்றாளர்களாயும்!
வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்!
புலம் பெயர் தமிழர்கள்!
என்ற போர்வையில்!
உயிர் கொடுத்தவரகள்!
பலரைத்தாம்!
நாம் கண்டுகொள்வில்லை!
அதெல்லாம்!
அரசியலாம்!
விட்டுவிடுவோம்!
ஆனாலும்!
இப்படி விட்டுவிட்டுப் போனதில்தான்!
விட்டுப்போனது!
எத்தனை வருடங்கள்?!
!
இன்னும் எத்தனை!
வருடங்கள்...சொல்ல!
என் பேத்திக்கு?!
-கவிதா. நோர்வே

இறைமகிழ்ச்சி... கடன்

ந.அன்புமொழி
1. இறைமகிழ்ச்சி!
!
விண்ணைத் தொடும்,!
ஏழை எளியோரின்!
உரிமைப் !
பொருள்களால் ஆன!
புனிதநேயப் பேராலயம்.!
எதிரில் துரும்பாய்,!
கண்களில் !
தேவை ஒளியோடு,!
விண்ணரசின்!
உரிமையாளர் எனப்பட்டும்,!
வறுமைவிரி கோலமாய்,!
செல்லன்புச் சிறுமி.!
தடையில்லை என்பதால்!
தைரியமாய் நுழைந்தாள்.!
மரியன்னை குழந்தை இயேசு,!
புனிதர்கள், மனிதர்கள்.!
மின்னொளிப் பெருவெள்ளத்தில்!
அனைவரையும் கடந்துவிட்டாள்!
இலக்கை நோக்கி.!
நொருங்கியதும்!
நின்றுகொண்டாள்.,!
மெழுகுவர்த்திகள் பீடம்.!
சுற்றும் முற்றும் பார்த்தாள்!
யாருமில்லை. !
மேலே சுவரில்.. !
அன்பே சவமாய் !
இயேசு கிறிஸ்து. !
அணைத்தெடுத்து !
அன்போடு வணங்கி!
நன்றியோடு முத்தமிட்டாள்.!
கையில்!
இரண்டு மெழுகுவர்த்திகள்.!
அன்று இரவு !
அவள் வீட்டில் தேவஒளி...!
வேக வேகமாக !
படித்தாள் !
பள்ளிப் பாடங்களை,!
இறைஒளி !
மறைவதற்குள்.!
இறைவனின் !
வலது பக்கத்தில் !
தன் !
வழி நடப்பவர்களின்!
செயல்களால் !
தலை குனிவோடிருந்து.,!
நீண்ட!
காலத்திற்குப் பிறகு !
மெதுவாகப் !
பிதாவைப் பார்த்து,!
மெலிதாகப் !
புன்னகைத்தார்!
இறைமகன் இயேசு.!
2.கடன்!
!
உண்ண விரும்பாத !
உணவுப்பொருளை !
உதவநினைத்து !
உடன் வைத்துக்கொண்டேன்.!
மனம்சரியற்ற !
மங்கலக்கோலத்தில் !
மாசுடைதரித்த !
மண்ணுரிமை மாது. !
நடைவழிவேகம் !
அனைத்தையும் திருத்தி !
அவளை கடந்தேன் !
அவள்வழிநிற்க. !
காகிதம் மூடிய !
திண்பண்டத்தோடு !
வெறுத்ததை !
கொடுப்பதால் !
நான்கு பணம்!
நட்டஈடு.!
பொருளையும் !
பணத்தையும் !
ஒன்றாய் பார்த்ததில் !
கலங்கிநீட்டி !
விரலால்கேட்டாள், !
என்ன அது!
என்னவென்று. !
பெறபயந்தவளுக்கு !
பிரித்துக்காட்டி !
பெற்றுக்கொள்ளென்றேன் !
பய மனத்தோடு. !
பவ்யமாய் பெற்றவள் !
பற்களை காட்டினாள் !
கறைபடிவம் பின்னால் !
தெய்வீகச் சிரிப்பு. !
நாகரீகமாய் சிரித்தேன் !
பதிலுக்கு நானும்!
வாரிவழங்கும்!
வள்ளளைப்போல. !
திடீரென!
எனக்காய் அவள்தரும் !
சிரிப்பின் விலையுருத்த !
சிக்கனமாய் !
சிரிப்பை நிறுத்தி !
வழிவிலகி !
வேகநடை போட்டேன். !
கடன்காரனாய் !
தலைகுனிவோடு.!
அன்புடன்!
ந.அன்புமொழி!
சென்னை

எங்கே தொடங்கும் ? ... எங்கே முடியும் ?

சத்தி சக்திதாசன்
உள்ளத்தின் தவிப்புகள் !
உணர்ச்சித் துடிப்புகள் !
உண்மையின் விழிப்புகள் !
எங்கே தொடங்கும்? எங்கே முடியும்? !
கண்களில் நீர்த்துளி !
பாசத்தின் தேன்துளி !
பருவத்தின் காதல்துளி !
எங்கே தொடங்கும்? எங்கே முடியும்? !
மூடாத விழிகளின் இரவுகள் !
தேடாத சொந்தத்தின் உறவுகள் !
பாடாத ராகத்தின் கீதங்கள் !
எங்கே தொடங்கும்? எங்கே முடியும்? !
வேண்டாத வேலைக்குக் கூலி !
தாண்டாத எல்லைக்கு வேலி !
தீண்டாத நீருள்ள ஏரி !
எங்கே தொடங்கும்? எங்கே முடியும்? !
எங்கோ தொடங்கி !
எங்கோ முடியும் !
ஏதோ நிகழ்வுகளுக்காக !
ஏனிந்த ஏக்கம் !
எனக்கின்று பகர்வீரோ?

எதுவும் புரியவில்லை?

த.சு.மணியம்
தைப்பொங்கல் திருநாளாம்!
தமிழர்களின் பெருநாளாம்!
புத்தரிசி கொண்டு பொங்கும்!
புதுப் பானைப் பொங்கலதாம்!
ஆதவனை நினைப்பதற்காய்!
அன்று பொங்கும் பொங்கலதாம்!
எல்லோரும் சொல்லுகிறார்!
எனக்கெதுவும் புரியவில்லை.!
நன்றி பல செய்திட்ட!
நற்கடவுள் சூரியனை!
தையில் விழாவெடுத்து!
தமிழ் முற்றம் பொங்கலிட்டு!
நன்றிக் கடன் தீர்க்கும்!
நன்நாளாம் தைப்பொங்கல்!
எல்லோரும் சொல்லுகிறார்!
எனக்கெதுவும் புரியவில்லை.!
முக்கனிகள் கரும்பினுடன்!
முத்தான சக்கரையும்!
புத்தம் புது நெல்லின்!
புது சுகந்த அரியுடன்!
சொத்தாக மணி அளித்த!
சூரியனுக்கொரு பொங்கலென!
எல்லோரும் சொல்லுகிறார்!
எனக்கெதுவும் புரியவில்லை.!
புத்தாடை போட்டு அன்று!
புதுப் பானை முற்றமதில்!
பொங்கலுடன் பலகனியும்!
பொங்குகின்ற நேரமதில்!
பட்டாசும் பல விட்டு!
பகிர்ந்துண்டு உண்பதென!
எல்லோரும் சொல்லுகிறார்!
எனக்கெதுவும் புரியவில்லை.!
வீடு விட்டு அகதிகளாய்!
வீதியிலே நாள் படுத்து!
காடு தந்த இலை கொண்டு!
கஞ்சி காய்ச்சி பசி போக்கி!
தேடுகின்றோம் அரிசியை நாம்!
கிடைக்காத இந் நிலையில்!
எல்லோரும் பொங்கலென்றார் !
எனக்கெதுவும் புரியவில்லை.!
!
த.சு.மணியம்

வெறிச்சோடிய முற்றம்

அமைதிச்சாரல்
முற்றத்துத்தூணில் சாய்ந்துகொண்டுதான்!
கீரை ஆய்வாள்,!
பொன்னம்மாச்சி..!
வெயில் காயும் நெல்லில் சிறிதில்!
பசியாறும் புறாவுக்கு,!
முற்றத்து தொட்டியில்!
தண்ணீரும் கிடைக்கும்.. அவள் புண்ணியத்தில்.!
அவளமைத்த!
கலயவீடுகளில்!
நிம்மதியாய் குடும்பம் நடத்துகிறது குருவி!
நன்றி சொல்லியபடி..!
பேச்சும் சிரிப்புமென!
தோழிகளில் ஒருவராகிப்போன!
அந்த முற்றத்தில்தான்!
பொரணியும் ஆவலாதியும்!
சேர்ந்தரைபடும் அரிசியுடன்..!
கானகமும் இல்லமுமாய்!
அனைவரும் போய்ச்சேர்ந்தபின்..!
வெயிலாடிக்கொண்டிருக்கிறது!
துவைத்த கல்லும், வளர்த்த முருங்கையும்;!
காலியான முற்றத்தில்