மனிதம் தின்ற.. சிறை.. மனிதம் தின்ற
இராமசாமி ரமேஷ்
மனிதம் தின்ற மானிடப் பேய்களுக்காய்...சிறை பிடிக்கப்பட்ட கனவுகள்... ஊமையான என் உயிர் வலிகள்!
!
01.!
மனிதம் தின்ற மானிடப் பேய்களுக்காய்....!
-----------------------------------------------------------!
தொகை தொகையாக!
வதை செய்யப்பட்ட எமதான!
வாழ்தலின் இருப்புக்கள்!
எச்சங்களைத் தாங்கிய !
யதார்த்தத்தின் மிச்சங்களாய்!
இழப்புக்களின் புதைவிலிருந்து மீள்வதற்க்காய்!
மீட்பரை எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றன...!
சாவுகள் எம்மவர்க்கு!
சாதாரணமாகி உறவாடிய போதும்....!
ஊமைகளாய் மௌனம் கௌவியிருந்த!
உலகத்தின் வாய்கள்!
இன்று உதவிக்கரம் நீட்டுகின்றனவாம்!
உரிமையோடு....!
மனிதாபிமானத்தை!
அன்று மண்ணுக்குள் புதைத்ததை மறந்து!!!
முகங்கள் அறுக்கப்பட்டு!
முகவரிகள் அழிக்கப்பட்டு!
நம்மவர்கள் முண்டங்களாக மாண்டுபோன!
முள்ளிவாய்க்கால் மண்ணில்!
விடிவை எதிர்பார்த்து!
எம்மினம் தவம்கிடந்தபோது!
மனிதம் பேசும் எந்த மாமனிதரும்!
உயிர்குடித்த பேய்களிடம் போய்!
எமக்காக மன்றாடவில்லையே....!!!
அரக்க குலத்தில் ஜனனித்த!
மிருகங்களின் தசைப்பசிக்கு!
எங்களின் இரத்த உறவுகளின்!
உடல்களையல்லவா!
உண்ணக்கொடுத்தவர்களாகிவிட்டோம்......!
ஆணிவேர்களை!
பிடுங்கப் பார்த்தவர்களால்!
சில பக்கவேர்களை மாத்திரம்தான்!
பதம்பார்க்க முடிந்திருக்கிறது...!
எமக்கான தேசத்தில்!
எமதான இருப்புக்கள் உறுதியாகும்வரை!
பல விருட்சங்களின் விழுதுகள்!
வீழ்ந்துகொண்டேயிருக்கும்!
வீறுகொண்டு மீண்டும் எழுவதர்க்காய்....!!!!
02.!
சிறை பிடிக்கப்பட்ட கனவுகள்....!
-----------------------------------------!
கனவுகள் திருடப்பட்டு!
காலத்தின் கரங்களில்!
கட்டாயப்படுத்தப்பட்டு!
கைதியாக்கப்பட்டுப் போனேன்....!
ஆற்றுவதற்கும் தேற்றுவதற்கும்!
யாருமேயின்றி அனாதையாக நகர்கிறது!
எனது பொழுதுகள்.....!
சுகங்கள்!
யாருடையதோ சுரண்டலில்!
அபகரிக்கப்பட்டதும்!
நிஜங்கள் கானல்களாகி!
எனக்காக எதுவுமேயின்றி!
காணாமல் போயின!
உரிமைகள் எனைவிட்டு வெகுதூரமாய்....!
விரக்தியின் விளிம்பில்!
விழித்துக் கொள்கிறேன்!
தூங்குகின்ற பொழுதுகளில்கூட......!!!
வண்ண வண்ணமாய் !
என் தேசத்தில் வருமென!
நான் எதிர்பார்த்த தருணங்கள்!
சுடுகாட்டில் கருக்கப்பட்ட!
பூச்சரமாய்!
இருட்டடிப்புச் செய்யப்பட்டு!
இரும்புக் கரங்களுக்குள்!
இறுக்கப்படுகின்றன...........!
வயது வந்துவிட்டதால்!
வாலிபமே என் வாழ்க்கைக்கு!
வலியாகிப் போனது.....!
தங்கக் கூண்டில்!
தடுமாறும் பறவையாக!
வசதிகள் கொட்டிக் கிடந்தும்!
வெளி வாழ்க்கைக்கு!
வழி பார்க்கின்ற!
என் விழிகளின் கனவுகளை!
யார்தான் புரிந்துகொள்வார்களோ....??!
03.!
ஊமையான என் உயிர் வலிகள்!
....................................................................................!
உன் ஒற்றைவரி வார்த்தைக்காய்!
என் மனம்!
மௌனவிரதமிருப்பதை அறிவாயோ?!
உன் நேசமான பார்வைக்காய்!
என்விழிகள்!
பாசத்தோடு பார்த்திருப்பது புரிகிறதா?!
உன் உறவுக்காய்!
என் உள்ளமும் உயிரும்!
பூத்திருப்பதை உணர்கிறாயோ?!
என் மௌனமான தவிப்புக்கள்!
உன் மனதுக்கு புரியாது தான்...!!!
பேசும் காதலே தோற்றுப் போகையில்!
ஊமையான என் உயிர் வலிகள்!
உனக்கு புரிவது சந்தேகம் தான்