தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

தமிழ்

கலாநிதி தனபாலன்
எங்கே என் உறவு !
தேடினேன் தமிழை !
மொழி தேடி எழுகிறது !
என் விழிகள் !
அவளை ஆவலோடு !
அணைக்க அவாவுற்றேன் !
அணைக்குமுன் அணைந்து விடுவாளா? !
அச்சப்பட்டேன் !
காணொளியும் கைத்தொலைபேசியும் !
கன்னித்தமிழை கசக்கிப்பிழிந்தன !
தொல்தமிழ் தொலைந்து !
தொலைபேசிக்குள் நுழைந்தாள் !
என் உதடுகளில் !
தமிழ் தழுவுகிறதா !
இல்லை நழுவுகிறதா? !
தயங்கினேன் பின்னர் !
இயங்கினேன் !
தொலைபேசி இல்லையேல் !
தொடர்பே இல்லை !
தொலைபேசியே !
தொடர்பின் தொப்பிள்க்கொடியானது !
இணையம்தான் இவளோடு !
இணையும் இடமானது !
இவையெல்லாம் இயந்திரவாழ்வின் !
இணைபிரியா இருப்புக்களாயின !
இதனால் இவளுமிருப்பாள் !
இன்னுமொரு நூற்றாண்டு !
இதுபோதும் எனக்கு இப்போது !
தனிமையில் தழுவினேன் !
தமிழை தயங்காமல். !
இணைய வலையில் விழுந்து !
இனியும் வாழ்வேன் இவளோடு !
சதுரக்கணணியில் மிதக்கும் !
விம்பங்களைச் சுவைக்கும் !
சாதாரண மனிதனாயல்ல !
சங்கத்தழிழைச் சுவைத்து !
கன்னித்தழிழை காதலித்து !
முத்தழிழை முத்தமிட்டு வாழ்வேன் !
மூச்சுள்ளவரை! !

நிரம்பி வழிதலின் துயரம்

ஹெச்.ஜி.ரசூல்
என் மெளனங்களையும்!
நழுவித் தவழும் அலைகளையும்!
கைப்பிடித்து விளையாடியதோடு!
இந்த கணம் நின்றுவிடவில்லை.!
பேரலைகளையும்!
சிற்றலைகளையும் வருடி!
இசைப்பேரொலியை!
ஊற்றாகப் பெருக்கினேன்!
காற்றின் திசைவழியைக் கண்டறிந்து!
ஒரு பறவை இருளில் மறைகிறது.!
ஒற்றைவால்நட்சத்திரத்தால் பொழுதறிந்த!
இரவு பகலற்ற நெடும்பயணத்தில்!
ஆயுள் உருகி வழிந்தோடுகிறது.!
பேரிடி இரைச்சல்களின்!
இடிபாடுகளுக்கிடையே!
தொலைந்து போன!
என் குழந்தையின் புன்னகையைத்!
தேடிக் கொண்டிருக்கிறேன்.!
விசித்திரக்கடலுக்குள்!
உயிர்பிடித்து அழைத்துச் சென்றாய்!
மீனாய் வாழ முடியவில்லை.!
அலைகள் துப்பிய சடலமாய்!
கடலோரம் ஒதுங்கிக் கிடக்கிறேன்.!
இன்றும் விடிந்த பொழுது!
எனக்கென்று இல்லாமல் போக!
அழுகிய உதடுகளிலும்!
உருத்தெரியா கன்னங்களிலும்!
ஒரு முத்தம்தர முயல!
பிணங்களால் நிரப்பப் படுகிறது கடல்

அடையாளமில்லா ஆணி வேர்கள்

தமிழ்ப் புகழேந்தி
அவனுக்கென்று!
அடையாளம் ஏதுமில்லை-ஆனால்!
அவந்தான் இந் நாட்டின் அடையாளம்!!
கால் வயிறு சோறும்!
கால் வயிறு நீரும்!
அரை வயிறு பட்டினியோடும்!
உழைத்துக் கொண்டே இருக்கின்றான்!
தேசத்தின் வயிறுகளுக்காக!!
நிவாரணம் கேட்டே!
நிர்வாணம் அடைந்தவன்!!
இன்றைய நிலையில்!
மரபணு மாற்றப்பட்ட பயிறும்!
மரபு வழி வந்த அறிவுமே!
அவனது உடைமை!!
இங்குப் புறக்கணிக்கப் படுகின்ற!
புத்தர்களில் அவனும் ஒருவன்!!
வாக்குகளுக்காவே அவனைப்!
பற்றிப் பேசும் நாக்குகளுக்குத் தெரியாது,!
அவனது,!
உழைப்பின் சிறப்பும்!
வியர்வையின் கரிப்பும்!!
நாடாளும் மாடுகள்!
அவனை நடை பிணமாக்கிய போதும்-அவன்!
நடந்து கொண்டே இருக்கின்றான்!
நம்பிக்கையோடே

கடைசி உணவு நாட்கள்

தீபச்செல்வன்
01!
நமது கோப்பைகள்!
வெறுமையாயிருக்கின்றன!
துயரங்கள் நிரம்பிய!
கோப்பைகளோடு!
நாட்கள் கடைசியாகிவிட்டன.!
கோப்பையில்!
நிரம்பியிருக்கும் துயரத்தை!
என்னால் சாப்பிடமுடியவில்லை.!
இருட்டுப்பந்தலில்!
நாற்காலிகள் இருட்டாகிகிடக்கின்றன!
நான் திரும்பி வரமுடியாத!
பிரதேசம் ஒன்றிற்கு!
போகப்போகிறேன்!
நான் வாழமுடியாத!
நகரம் ஒன்றில்!
தங்கியிருக்கப்போகிறேன்.!
கோப்பைகள் பாரமாயிருக்கின்றன.!
02!
எனக்கு மிகவும் பிடித்த!
தோழனே!
என்னால் தாங்கமுடியயதிருக்கிறது!
சாந்தம் அழிந்திருக்கும்!
உனது முகத்திலும்!
சிவந்து கசிந்துகொண்டிருக்கும்!
உனது கண்களிலும்!
சூழ்ந்திருக்கும் துயரத்தை!
கொஞ்சமும் பார்க்கமுடியாதிருக்கிறது!
நான் உன்னோடு!
பேச முடியாமல் மௌனமாயிருக்கிறேன்.!
நமது விளக்குகளை!
இரவுகள் விழுங்கிவிட்டன!
எனது பயணம்!
இருட்டு வீதியில் தத்தளிக்கிறது.!
நாம் வளர்த்த மரத்தின் கீழ்!
அடையாளம் தெரியாத!
நிழல் படருகிறது!
அந்த மரத்தின் வேர் படுகிறது!
சந்தர்ப்பங்களற்றிருக்கும்!
நமது நாற்காலிகளில்!
தெரு நாய்கள்!
மலம் கழித்திருக்கின்றன!
சிறு நீர்பெய்திருக்கின்றன.!
எனது கோப்பை நெழிய!
உணவு பழுதாகி கிடக்கிறது.!
!
03!
தோழனே எல்லாம்!
கடைசி என்றாகி விட்டது!
இவை கடைசி உணவாகிவிட்டது.!
நீயும் நானும் கூடியிருக்கவே!
விரும்புகிறோம்!
நான் விலகியிருக்கிறேன்!
எனக்கு சிலுவை காத்திருக்கிறது!
எனக்கு ஆணிகள் காத்திருக்கின்றன!
எனது குருதி!
பகிர்ந்துண்ணப்படவிருக்கிறது.!
நம்பிக்கையற்ற நகரத்திற்கு!
நம்பிக்கையின்றியே போகிறேன்!
பயங்கரம் நிரம்பிய!
வீதிகளில் நடக்கப்போகிறேன்!
ஆபத்தான வண்டிகளில்!
ஏறப்போகிறேன்!
சுடும் வெந்நீரில்!
நீந்தப்போகிறேன்!
நான் திரும்புவதைப்பறிறியே!
நீ யோசிக்கிறாய்?!
நாம் நிச்சயமற்ற இனத்திலே!
பிறந்திருக்கிறோம்!
அவர்களது கோப்பையில்!
நிரம்பியிருக்கும்!
எனது குருதியை நினைத்து!
அச்சப்படுகிறாய்!
பலிகளுக்கு ஏற்கப்பட்ட!
இனத்திலிருந்து பேசுகிறோம்.!
04!
அதிகாரங்கள் நம்மை!
தேடி வதைக்கின்றன!
வன்முறைகள் நம்மை!
மொய்கின்றன!
நமது அலைச்சல் நீளுகிறது!
நாம் அமைதிக்காக!
அதிகாரங்களோடு போராடுகிறோம்.!
எனக்கு மிகவும் பிடித்த தோழனே!
நான் போகிறேன்!
எனக்காக முகத்தினோடு.!
மிகப்பாரமான!
எனது பயணப்பையில்!
இந்தக்குரல்!
மொத்தமாய் கிடக்கிறது.!
-தீபச்செல்வன்!
24.10.2007

தாய் பொழப்பு

கோ.சிவசுப்ரமணியன்
எனக்கு முன்ன!
சாமிக்கிட்ட போன எஞ்சாமி!
ஒன்னோட நானும் போயிருந்தா!
மண்ணோட போயிருக்கும் !
இந்த பொறப்பு!
நாய்க்கும் வேணா இப்ப!
நான் பொழைக்கும் !
இந்த பொழப்பு!!
பிஞ்சிப்போனாலும் ஒதவுமேன்னு!
உள்ள வெச்சுக்கிட்டான் பாயை!
ஓஞ்சி போன சென்மமின்னு!
ஒதுக்கித்தள்ளிட்டான் தாயை!!
மவனுக்கு பால் குடுத்த!
மாரும் காஞ்சிப்போச்சி!
மருமவ மகராசியால!
வயிறும் வறண்டு போச்சி!!
பார்வை கொறைஞ்சிப் போச்சி!
கேள்வி மந்தமாச்சி!
நாக்கு ருசி செத்து போச்சி!
பாழாப்போன பசி மட்டும் போவலியே!!
நாள பின்ன நான் செத்தா!
வாக்கரிசி வெப்பீங்களே!
செத்தவளுக்கு போடறதுல கொஞ்சம் இந்த!
பெத்தவளுக்கும் போடுய்யா!
பசியால செத்தான்னு பேரு வேணா!
சாபம் குடுத்து செத்தான்னு பேச்சு வேணா!!
-- கோ.சிவசுப்பிரமணியன்

கனவுகள்

இரா.அரிகரசுதன்
ஆத்தாளுடன் நெல்லறுக்கப் போகும்போது !
நெற்தாள் அறுத்தக் கையின் தடத்தை !
இன்னும் என்னால் தாண்டிக் குதிக்கமுடியவில்லை. !
கஞ்சி குடிக்க பனம்பட்டை வெட்டும்போது !
மயில்முடி குட்டிபோட இரை எடுத்து !
கால் சட்டையின் இரகசிய அறையில் - என்று !
மாற்றிப்போட்டு ஊரலாகிப்போனது !
தேரிக்குளத்தின் தாழம்மூடுகளில் !
வாத்து முட்டை பொறுக்கப்போய் !
சாரையும் நல்ல பாம்பும் கனவில் !
வந்து பிணைந்தாடி காய்ச்சல் வந்ததும் !
தெவங்கி நிற்கும் செம்மண் மழைநீரில் !
விழுந்தெழுந்து வெள்ளைச்சட்டை நிறம்மாறி !
முழங்காலின்கீழே தெறச்சி வால் தடம் பதித்ததும் !
ஆத்தா அடித்தழுதழுது ஏசி !
கண்ணீர் கவிதை எழுதி !
கிழித்து எரிக்கப்பட்டதும் !
பின்னாளில் என்ன எளவல எழுதா ? !
எவளுக்குல எழுதா !
எனும் இரணங்களின் மீதே !
என் கவிதை இரத்தம் குடித்துக் கிடந்ததும் !
இப்படியாய் என் பழய நான் !
கணிணியின் காலடியில் காலாவதியாகிக் கிடக்கும் !
நவீன நானிடம் மறந்துவிட்டாயா? !
எனக் கண்ணடித்துச் சிரிக்கும் கதை !
இரா.அரிகரசுதன் !
நாகர்கோவில். குமரி

நிலை கொண்டுவிட்டது

இமாம்.கவுஸ் மொய்தீன்
எக் காலத்தில்!
எச் சூழ்நிலையில்!
எப் புண்ணியவானால்!
எந் நோக்கத்தில் !
வரையப்பட்டதோ?!
இவ்வளவு!
முன்னேற்றம்!
கண்ட பின்னும்!
நம்நாடு!
இது நாள்வரையிலும் !
தொலையவுமில்லை!!
அழியவுமில்லை!!
பூமத்திய ரேகை போல்!
இதுவும்!
நிலை கொண்டுவிட்டிருக்கிறது!
'வருமைக் கோடு'!!
-இமாம்.கவுஸ் மொய்தீன்

கவலையாக மாறும்.. கடவுளுக்கு மட்டும்

மு.கோபி சரபோஜி
கவலையாக மாறும் சந்தோசம்.. கடவுளுக்கு மட்டும்!
01.!
கவலையாக மாறும் சந்தோசம்!
--------------------------------------!
ஊருக்காய் ஒன்றுகூடி!
பிள்ளையாரை!
களவெடுத்து வந்து!
பிரதிருஷ்டை செய்த!
சந்தோசத்தை!
கவலையாக!
மாற்றிக் கொண்டிருக்கிறது….!
அடுத்த ஊரில்!
பிள்ளையாருக்கு!
கோயில் கட்டும் சேதி!!
!
02.!
கடவுளுக்கு மட்டும்!
--------------------------!
வரவேற்பு வளைவு!
வண்ண விளக்கு!
வாடகை கார்!
வரதட்சணை!
பரிசு பரிமாறல்!
ஏதுமின்றி!
பள்ளியறை புகுதல்!
சாத்தியமாகிறது......!
கடவுளுக்கான!
திருமணங்களில் மட்டும்

பனை

சிதம்பரம் நித்யபாரதி
அன்று ஊருணி!
இன்று!
தலையில் நீர்தாங்கிய!
தண்ணீர்த் தொட்டிகள்.!
கசிந்த நீர்ப்பரவலில்!
பெயர் தெரியாத் தாவரங்கள்!
ஆனால்!
எட்ட உள்ள பனை!
ஒற்றைக் கால் வற்றி!
வெக்கையில் தவிக்கும்!
அன்றும்.... இன்றும்....!
--சிதம்பரம் நித்யபாரதி

காதல்

தென்றல்.இரா.சம்பத்
என் உள்ளத்தை!
களவாடிய கள்வனே.......!
உன் கருவிழியிரண்டால்!
இந்த கன்னியை!
ஏரெடுத்துபார்த்து போய்விடுகிறாய்!!
ஏன் பேசாமல்போனாய்!
என என்னையே!
என் மனம்!
எத்துனைமுறைதான் கேட்டுக்கொள்ளும்!!
உனைப்பார்த்த!
நாள்முதலாய்-நான்!
என்னையுமறியாமல்!
குழம்புக்கு சீனியையும்!
பாலுக்கு உப்பையும்!
சேர்த்து கொண்டிருக்கிறேன்!
உனை பாராதபோது!
உன்னையே நினைந்து!
ஏதேதோ பேசி!
பூரித்துப்போகும் நான்!
உன் கருவிழி கண்டதும்!
நாணத்தொடு நழுவி விடுகிறேன்!
உன் பார்வையிலிருந்து!
எதுவுமே பேசாமலேயே......!
அப்படி என்ன செய்தாயடா?!
எத்தனையோ ஆடவரோடு!
பேசும்போதும் !
பார்க்கும்போதெல்லாம்!
வாராத உணர்வுகள்!
உனைப்பாராமல்!
பார்த்து போகும்போதுமட்டும்!
என் உள்ளத்தைச்!
சூழ்ந்து சந்தோசம் பேசுகிறது.!
வெட்கத்தை மறந்து!
வெட்கத்தை மறைத்து!
என் உள்ளம் சொல்ல!
உன்னிடத்தில்!
ஓடிவரும்போதெல்லாம்!
வெட்கத்தை மறப்பதை!
மறந்து தலைகுனிகிறேன்.!
என்னிடம் பேசுகிறாய்!
எப்போதாவது!!
எதைப்பற்றியாவது!!
எனைப்பற்றியில்லாமல்.!
அதில்கூட !
ஆனந்தப்படுகிறேன் நான்.!
எப்படியோ!
உன்னிடம் பேசிவிட்டதால்.!
கள்வனே.......!
கவி எழுதும்!
உன் கைவிரலிரண்டையும்!
எப்போது எனதாக்குவாய்.!
எனக்கென!
ஓர் கவிதை எழுத!
எப்போதாவது!
மனம்வந்தால்- உடனே!
சொல்லிவிடு!
என் இதயத்தில் எழுத!
இடம் தருகிறேன்.!
நான் நிலம் பார்த்து!
நடக்கையிலெல்லாம்!
நிமிர்ந்து பார்க்கவைக்கும்!
உன்குரலை!
எப்போது எனதாக்குவாய்!!
மன்னவனே........!!
என் கனவுகளில்!
கலையாமல் வந்துபோகும்!
கண்ணாளனே!!
உன் பார்வை அம்புகளால்!
என் உள்ளத்தை !
பதம்பார்த்தது போதும்!
பேசு!!
எதையாவது அல்ல!!
எனைப்பற்றி!!!
பேசச்சொல்!
உன் ஜீவனை பேசச்சொல்!!
பேச வை!
என் ஜீவனை பேச வை!!
புரியவைக்கிறேன்!
எதற்காக நான் வாழ்கிறேன்!!
யாருக்காக நான் ஏங்குகிறேன்!!
என்பதனை.!
உனக்காகத்தான் என்பதை!
இங்கே ஓசையில்லாமல் !
சொல்கிறேன் கேள்!!
உன் காதுமடல் கொண்டல்ல!
உன் கருவிழி கொண்டு!!
பேசத்தெரிந்த !
உன் கருவிழிக்கு!
கேட்கத் தெரியாமலா போகும்! !
அதனால்தான் கேள்!!
உன் கருவிழிகொண்டு கேள்.....!
என்னவனே!
நான் உனை காதலிக்கிறேன்..!
நீயும்தானே............?!
!
தென்றல்.இரா.சம்பத்!
ஈரோடு-2