கிழியாத வானம் போல்!
பிரியாத உறவு!
இந்த ஜோடிப்புறாக்களுடையது!
ஒன்றாய் பறக்கையிலும்!
ஒன்றின் இறகு !
விசிறித்தரும் காற்றே!
மற்றொன்றின் சுவாசம்!
இவை,!
மூச்சுவிட்ட எண்ணிக்கையினும்!
முத்தமிட்ட எண்ணிக்கை அதிகம்!
இறகுகளின் அசைவைவிட!
இதயங்களின் இசைவுகள் அதிகம்!
மழைநேரத்தில் !
இரண்டுமே தாயாகும்!
ஒன்று மற்றதை அடைகாப்பதில்!
இன்று காலையில் பறந்த!
உண்டிவில் கல்லொன்று!
ஒன்றின் உயிரை பறித்துப்போகஇ!
கண்ணீருடன் தன்னுயிரை உதிர்த்தது !
தனியான மற்றொன்று!
இறக்கும் வரை இணைந்தேயிருக்கும் !
தெய்வீக காதலரின் முன்னால் !
இவையோ இறந்தபின்னும் !
இணைந்திருந்தன!
அன்பிலும் அடுப்பிலும்!
ஒன்றாய்த்தான் கொதித்தன!
பரிமாறப்பட்டதுவும் அப்படியே!!!
-கோகுலன்
கோகுலன்