தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

தீர்மானம்

தீபம் கோபி , சிங்கப்பூர்
பருவ வயதில் !
பற்றவைத்த நெருப்பு !
தினம் புகைத்து.. !
புகைந்து.. புறையோடி.. !
புற்றுநோய் குமுன்பே.., !
மகிழ்ச்சி, துயரமென !
ஏதேதோ காரணம் சொல்லி !
திகட்டாமல் அருந்திய !
ஆல்கஹால் கரைசலில் !
குடலரித்து வெந்து -வெறுங் !
கூடாய் போகுமுன்பே..., !
நானெடுத்த !
புத்தாண்டு தீர்மானம்! !
நீண்டநாள் நண்பனை !
நேற்று கண்ட பூரிப்பில், !
வெண்புகையில் வீழ்ந்து.. !
மதுவுக்குள் மூழ்கியது ! -அந்த !
நிலையில்லா தீர்மானம்! !
!
- தீபம் கோபி, சிங்கப்பூர்

ஆர்பரிக்கும் அமுதூற்று

இரா.சதீஷ்மோகன்
பிறப்பிடம் அறியா அதிசயமே!
உனது வீழ்ச்சி உலக உயிர்களின் உயிர்ச்சி!
தாழ்வு நோக்கிய உனது பயனம்!
உழவர்களையும் உயர்த்தும் நோக்கோ!
உனது சேவை உலக உயிர்களுக்குத் தேவை!
நீ செல்லுமிடமெல்லாம் சிறப்பு!
உன் வாடை சென்றயிடமெல்லாம் சிலிர்ப்பு!
உன் பார்வை பட்டயிடமெல்லாம் பசப்பு!
புனிதமாய் பிறந்த போதும் பாய்ந்தோடும் வழியில்!
மனிதர்களால் மாசுபட்ட போதும் கலங்காது!
உன் புனித்தை மீண்டும் பெற!
கடலில் சென்று நீராடுகின்றயோ!
!
-இரா.சதீஷ்மோகன் !
தமிழ்த்துறை முனைவர்!
பட்ட ஆய்வாளர்தமிழ்த்துறை!
பாரதியார் பல்கலைக்கழம்!
கோயம்புத்தூர்-46

மலருமா வாழ்வில் எழுச்சி?

இரா சனத், கம்பளை
உயிரை இழந்து!
உறவுகளை இழந்து!
உடமைகளை இழந்து!
உறங்கிக்கொண்டிருப்பவர்களா நாம்?!
அகதி முகாமிலும்!
அண்டை வீட்டிலும்!
ஆதரவற்றோராய் வாழ்பவரா நாம்?!
உ ரிமைகளை முடக்கிக்கொண்டு!
உதிரத்தை சிந்திக்கொண்டு!
உயிரற்ற சடலமாய்!
வாழ்பவர்களா நாம்?!
பிறக்கும்போது வீட்டில் துன்பம்!
வளரும்போது நாட்டில் துன்பம்!
வாழும்போது சூழலில் துன்பம்!
நம் வாழ்க்கையில் மட்டும்!
ஏனடா துன்பம்....?!
இரத்தக் கறைகளையும்!
இனவாத பிரச்சினைகளையும்!
இனிமேலும் காணாமல்!
மலருமா நம் வாழ்வில் எழுச்சி...?

தமிழ் இனி மெல்லச் சாகும்

சத்தி சக்திதாசன்
தமிழ் இனி மெல்லச் சாகும்!
தமிழ்ப் புலவனின் கூற்றினை!
தவறென புரிந்திடாதீர் தமிழர்காள்!
தமிழ்ப் பாட்டனை உணர்ந்திடுவீர்!
புலம் பெயரட்டும் நம் தமிழ் உறவுகள்!
புதுக்கலைகள் பெருகட்டும் தமிழில்!
புலரட்டும் புதுமையான தமிழ்ச் சமுதாயம்!
புதுமைப் பெண்கள் தோன்றட்டும்!
ஓடாத நதி, நீந்தாத மீன், பாயாத புலி!
ஒருநாளும் காணாது வளர்ச்சியை!
ஓதியதந்த உண்மையைத்தான் பாரதி!
ஒருபோதும் தவறாகப் புரியாதீர்!
தமிழைத் தன் உயிராகக் கொண்டவன்!
தமிழுக்காய் தன்னையே தேய்த்தவன்!
தமிழையே உணவாக புசித்தவன் - அவன்!
தமிழை என்றாவது இகழ்வனோ ?!
தமிழ்ப் பாவலன் பாரதி பா தனைப் படித்து!
தமிழை மற்றொருவன் பழித்ததை!
தாங்காமல் தமிழன்னை அழுவதாய் அவன்!
தமிழாலே நம்மிடம் கலங்கினான்!
தமிழ் இனி மெல்லச்சாகும் என்றந்தப் பேதை!
தமிழை பழித்தான் ஆதலினால் என்!
தமிழ்ச் செல்வங்கள் திக்கெட்டும் சென்று!
தமிழ் வளர்க்கக் கலை கொண்டு வாருங்கள்!
கற்பனை உலகில் தமிழன்னையின் கவலையை!
கவிஞர்களின் தலைவன் பாரதி சொன்னான்!
கருத்துக்களை கட்டிப்பிடித்து தமிழ் வளருங்கள்!
கதைபேசி வீணாக காலத்தைக் கழியாமல்!
!
- சக்தி சக்திதாசன்

என்று வரும் புத்தாண்டு?

ரா. சொர்ண குமார்
ரா.சொர்ண குமார்.!
பூமிக்கே கொள்ளி வைக்கும்!
போர்கள் மடியவில்லை!
இவ்வாண்டும்!!
மதம் பிடித்த மதங்கள் செய்யும்!
கலவரங்கள் ஓயவில்லை இவ்வாண்டும்!!
பெண் பூவை கசக்கி எறியும்!
கொடூரம் குறையவில்லை!
இவ்வாண்டும்!!
எளியோனை வலியோன் வாட்டும்!
இழி நிலை ஒழியவில்லை!
இவ்வாண்டும்!!
இன்றைய ஆண்டுதானடா!
நேற்றைய புத்தாண்டு!!
வருடங்கள் மாறுகின்றன...!
வாழ்க்கை ?!
முடிந்த ஆண்டின் இழிவுகள்!
தொடரும் ஆண்டிலும் தொடருகின்றன.!
பன்னிரு மாதத்திற்கொரு!
ஆண்டு வரும் !!
நான் தேடும் புத்தாண்டு!
என்று வரும் ?!
இரத்தத்தின் நிறத்தையே!
மனிதன் மறக்கும் ஆண்டு..!!
மதம் பிடித்த மதங்கள் அழிந்து!
மனம் பிடித்த மனிதம் மலரும் ஆண்டு..!!
கடலின் அடியில் ஆயுதஙள்!
கண்ணயர்ந்து தூங்கும் ஆண்டு...!!
நான் தேடும் புத்தாண்டு!
என்று வரும்?!
வருடங்கள் மாறி பயனென்ன ?!
வாழ்க்கை மாறாமல்...?!
மாதங்களின் மாற்றத்தில் இல்லை!
நான் தேடும் புத்தாண்டு...!
மனித மனங்களின் மாற்றத்தில்

விருதுகள் வாங்கும் எருதுகள்…

அஸ்மின், ஈழநிலா, இலங்கை
ஈழநிலா -!
எருதுகளுக்கு !
விருதுகள் வழங்க!
மாடுகள் கூட்டிய!
மாநாடு அது…!
நடப்பன ஊர்வன!
நடிப்பன பறப்பன!
விலங்குகள் சிலவும்!
விழாவுக்கு வந்தன…!
காணிகளை!
களவாக மேய்வதில்!
‘கலாநிதி’ முடித்த !
கிழட்டுக் கிடாக்கள்தான்!
கிரீடத்தை சூட்டுகின்றன…!
இலவம் பழத்துக்காய்!
இலவுகாத்த!
மூளையே இல்லாத!
முட்டாள் கிளிகள்;!
கீச்சுக் குரலில்!
மூச்சு விடாமல்!
சிறுநீரை பற்றி!
சிலாகித்து பேசின…!
ஒலிவாங்கியை!
எலி வாங்கி!
எருமைகள் பற்றியே!
எடுத்துவிட்டன…!
பாவம் பசுக்கள்…!!
பாலைப் பலருக்கும்!
பருகக் கொடுத்துவிட்டு!
குட்டிகளோடு!
குமுறிக் கொண்டிருந்தன!
குளக்கரையில்.!
பசுக்களை!
கொசுக்கள் கூட!
கணக்கில் எடுக்கவில்லை….!
பாம்புகள்!
பாலுக்காய்!
படப்பிடிப்பிலிருந்தன…!
வெட்கமில்லாத!
வெண்பசுக்கள்!
முலைகளை!
மூடிமறைக்காததால்!
முள்ளம் பன்றிகள் பார்த்து!
மூச்சிரைத்தன…!
பார்க்கு மிடமெங்கும்!
பாலே ஓடியது…!
பூனைகள் எலிகளோடு!
புன்னகைத்தவாறு!
முயல்களை!
முழங்குவது போல் பார்ப்பதில்!
மும்முரமாய் இருந்தன…!
எருதுகளுக்கு !
விருதுகள் வழங்க!
மாடுகள் கூட்டிய!
மாநாடு அது…!
வாழ்த்துப் பாடின!
வால் பிடித்தே!
வயிறு வளர்க்கும்!
வாலான் தவளைகள்….!
கால் பிடித்தே!
காரியம் முடிக்கும்!
காகங்களும்!
கழிசரைக் கழுதைகளும்!
காளைகளுக்கு மாறி மாறி!
கவரிவீசின…!
மாக்கள் கூடிய!
மாநாடு அல்லவா…? !
பூக்களுக் கங்கே!
புகழாரமில்லை!
அழுக்குத்தான் அன்று!
அரியணையில் இருந்ததால்!
சாணமே அங்கு!
சந்தனமாயிருந்தது…!
தயிர்ச் சட்டிளாலும்!
நெய் முட்டிகளாலும்!
இவ்வருடத்திற்கான விருதுகள்!
இழைக்கப்பட்டிருப்பதாகவும்!
பருந்துகளுக்கு !
விருந்து வழங்கினால்தான்!
அடுத்த வருடத்திற்கான!
‘ஆளுநர்’ தெரிவாவரென்றும்!
அதிலும்@!
முதுகு சொரிவதில்!
‘முதுமாணி’ முடித்தவர்களுக்கே!
முன்னுரிமை இருப்பதாகவும்!
முதலைகள்!
முணுமுணுத்தன…!
எருதுகளுக்கு !
விருதுகள் வழங்க!
மாடுகள் கூட்டிய!
மாநாடு அது…!
நாக்கிலுப்புழு ஒன்றே !
நடுவராக இருந்ததால்!
மான்களுக்கும்!
மயில்களுக்கும்!
மரியாதை அங்கில்லை.!
வான் கோழிகளுக்குத்தான்!
வரபேற்பிருந்தது.!
பரிகளும் வரவில்லை!
நரிகளும்!
நாய்களுமே!
நாற்காலியை நிறைத்திருந்தது.!
மாநாட்டின் ஈற்றில்!
எருமைகள் பற்றி!
பெருமையாய்!
சாக்கடை ஈக்கள்!
சங்கீத மிசைத்தன….!
மரம்விட்டு!
மரம்தாவும்!
மந்தி!
மந்திரிகள்!
கையடித்தன!
கைலாகு கொடுத்தன… !
எதுவுமே தெரியாத!
எருமைகளுக்கு!
பன்னாடைகளால!
பொன்னாடை போர்த்தி!
பொற்கிழி வழங்கின… !
மாடுகளின் மாநாட்டில்!
விருதுகள் பெற்ற!
எருதுகளின்!
வீர பிரதாபங்களும்!
பல்லிளிப்புடன் கூடிய!
படங்களும்!
விளம்பரமாய்!
நாளை வரலாம்!
நாய்களின் பத்திரிகையில்

யாரும் அறியாத நாம்

அறிவுநிதி
உன்னை வரையும் பாக்கியம்!
என்விரல்களில் காத்திருக்கின்றன.!
என் உடலெங்கும்!
நீயான ஓவியம்!
ஓட்டப்பட்டள்ளது!!
மௌனம்!
உன் மொழியான போதும்!
விழிகள் உரையாடிக்கொண்டே இருக்கிறது.!
எனதான சொற்களை!
உன்னில் நிரப்புகிறேன்.!
நீ வெளிப்படுத்தாத புன்னகை – சில!
ஸ்தம்பிப்புகளை திறந்துகொண்டு!
என் இதழ்ஆரம் நிகழ்கிறது.!
நீ வினோதங்கள் ஆகிறாய்,!
நான் புன்னகையாகிறேன்!
கண்முன் - ஒரு!
பயணத்தை ஒப்படைக்கிறாய்.!
அதைமேற்கொள்ள!
பூக்களையும் பரிசளிக்கிறாய்!
உன்னை தாங்கிக்கொள்ள!
கரம் ஏந்துகிறேன்!
நீ நழுவி!
எனக்குள் விழுந்து கொண்டே இருக்கிறாய்!
யாரும் அறியாத ரகசியமாய்!!
கவி ஆக்கம்: அறிவுநிதி

ஏய் உன்னைத்தானே!

சத்தி சக்திதாசன்
காலடிச் சுவடுகள்!
கண்டாயா ? தம்பி!
கருத்தினை நெஞ்சினில்!
கொண்டாயா ?!
நேற்றைய உலகினில்!
தோன்றிய மனிதர்கள்!
தோற்றிய சரித்திரம்!
புகட்டிய பாடங்கள்!
தீட்டிய செவியினில்!
பாய்ச்சிய செய்திகள்!
பூத்திடும் விழிகளில்!
காட்டிய காட்சிகள்!
நெஞ்சினில் நீயும்!
கொண்டாயா ?!
நாளத்தில் பாய்ந்திடும்!
உதிரத்தின் வேகம்!
உசுப்புகின்ற ஆசைகளை!
உணருகின்ற தருணத்தில்!
உதிர்ந்துவிடும் இலை போல!
முதிர்ந்து விடும் மனம்!
அறிந்து விடு தம்பி!
புரிந்துகொள் உண்மையை!
முன்னே!
நடந்தோர் பாதையை நீ!
தொடர்ந்திடும் போதிலும்!
மனதினில் கேள்வியை!
அடுக்கடுக்காய் தொடுத்திடு!
கிடைத்திடும் விடைகளை!
தராசிலே நிறுத்திடு!
நீதியின் எடைதனை நீயும்!
ஏற்றியே காத்திடு!
உண்மையின் பாதையில்!
உழைத்திடும் செல்வமே!
உன்னிடம் உறைந்திடும்!
உள்ளத்தின் சத்தியம்!
இருப்பது அனைத்தையும்!
இழப்பதல்ல உன் தர்மம்!
கிடைப்பதில் ஒரு துளி!
கிடைக்காத உயிர்களுக்கு!
கொடுப்பதில் உள்ள சுகம்!
கொஞ்சமல்ல அறிந்து கொள்!
உலகம் என்னும் புத்தகத்தில்!
உனக்கென சில பக்கங்கள்!
புரட்டிப் பார்க்கையில்!
புல்லரிக்கும் வகை செய்திடு!
நாளகள் உன் கையில்!
நல்லவையும் கெட்டவையும்!
நாளைய தலைவர்கள் ஆகிடும்!
தம்பி, தங்கையர் உங்கள் செயல்களில்!
உள்ளத்தில் தெறித்த உணமைத்!
துளிகளை உங்கள் மீதும்!
தெளித்து நான் வாழ்த்தி நின்றேன்!

என்னவாய் இருக்கக் கோருகிறது?

ரவி (சுவிஸ்)
புத்தாண்டு பிறக்க இன்னமும்!
சில மணித்தியாலங்கள் இருக்க,!
வாங்க மறந்த சம்பானியாப் போத்தலுக்காக!
விரைகிறேன் நான்.!
காசா மீதான இஸ்ரேலின் சண்டித்தனத்தால்!
டுபாய் புத்தாண்டு நிகழ்ச்சிகள் இல்லாமல் போன துயரில், தலையில் கைவைத்தபடி!
குந்தியிருக்கிறான் ஒருவன்,!
நகரின் மையத்தில்.!
குறுக்கும் நெடுக்குமாக வெட்டப்பட்டிருக்கும்!
பதுங்கு குழிகளில் துப்பாக்கிகளோடு காத்திருக்கிறார்கள்!
அல்லது பிணமாய்க் கிடக்கிறார்கள்,!
இராணுவமும் போராளிகளும்.!
போர்ப்பட்ட பெருநிலமெங்கும்!
மூடுண்ட வெளியுள் துயருறுகின்றனர் மக்கள்,!
சாவில் தொங்கவிடப்பட்ட தம் உயிர்களுடன்.!
விடுபட்ட நிலங்களில்!
காணாமல் போகிறார்கள் இளசுகளும் முதிசுகளும்.!
வெள்ளைவான் இன்னமும் துருப்பிடித்தபாடில்லை.!
விமானங்களின் இரைச்சலில்!
பயணிகளின் நினைவுக்கு அப்பால் செல்லமுடியாத!
என் குழந்தைக்கு!
விமானங்கள் குண்டுகள் வீசுவதுபற்றிய!
பயங்கரத்தை நான் கதையாய்ச்!
சொல்லிக்கொண்டிருந்தேன்.!
ஆண்குறிக்கு இராணுவ உடை போர்த்த!
ஈரதிகாரத்தின் விறைப்பில்!
பெண்ணுடலை குதறுகிறான் ஒரு இராணுவத்தான்.!
போதைப்பொருளின் இழுப்பில்!
பிசாசறைந்த முகத்துடன் விசர்க்கிறான்!
இன்னொரு இராணுவத்தான்.!
காவலரணில் விடப்பட்டிருக்கிறான் மற்றவன்!
தன்முன்னால் வெடித்துச் சிதறிய தன்!
நண்பன் பற்றிய கதையையோ!
அல்லது!
குற்றுயிராய்க் கிடந்த தன் நண்பனை தானே!
உயிரோடு புதைக்கப் பணிக்கப்பட்டதை நினைத்தோ!
அவன் சபித்திருத்தலும்கூடும்.!
மண்ணுக்காய் என!
பறிபோன அல்லது பறித்தெடுக்கப்பட்ட தம் புதல்வர்க்காய்!
கடவுளிடம் கையேந்தி நிற்கிறாள் தாய்.!
இராட்சதக் குண்டுகளின் குழிகளில்!
பிஞ்சொன்றை பிணமாய் வீசுவதில்!
துயருறா நெஞ்சங்களுடன் மனிதர்கள் இலர் என!
நான் இப்போதும் நம்புகிறேன்.!
போர்கள் வேண்டாம், வேண்டவே வேண்டாம்!
என்பதெல்லாம்!
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதுபோல!
பேச்சொழுக்காய்ப் போனது.!
அதிகாரம் கழுத்தில் ஓர் சால்வையையோ!
அல்லது இடுப்பில் ஓர் துப்பாக்கியையோ!
சொருகியபடி திரிய,!
களத்தில் உயிர்கள் ஒடிந்துகொண்டிருந்தன.!
போரின் வெற்றியை தீர்மானிக்க!
பிணங்களின் எண்ணிக்கையை!
பிரித்துப் பார்த்தபடி இருக்கிறான் என் நண்பன்.!
என்னவாய் இருக்கக் கோருகிறது இந்தப் போர்!
என்னை.!
சம்பானியாப் போத்தலுடன்!
வீடு திரும்பிக்கொண்டிருந்தேன் நான்!!
-ரவி (31122008)

தோல்வி இல்லை.. உலகுக்கு உணவு

இரா.இரவி
தரும் உழவர்கள் !
01.!
தோல்வி இல்லை !
----------------------!
விரக்தி வேண்டாம் விரட்டி விடு!
கவலை வேண்டாம் களைந்து விடு!
துக்கம் வேண்டாம் துரத்தி விடு!
துயரம் வேண்டாம் துறந்து விடு!
மகிழ்ச்சி வேண்டும் மகிழ்வாய் இரு!
இன்பம் வேண்டும் இன்முகமாய் இரு!
புன்னகை வேண்டும் சிரித்தே இரு!
தன்னம்பிக்கை வேண்டும் விழித்தே இரு!
முயற்சி வேண்டும் வெற்றி பெறு!
பயிற்சி வேண்டும் திறமைகள் பெறு!
இலட்சியம் வேண்டும் பயணம் தொடரு!
உழைப்பு வேண்டும் உறக்கம் குறைத்திரு!
நெருப்பு வேண்டும் நெஞ்சில் வைத்திரு!
துடிப்பு வேண்டும் நரம்பில் அணிந்திரு!
முயன்றால் முடியாதது எதுவுமில்லை உலகில்!
முனைப்போடு முயன்றால் தோல்வி இல்லை உலகில்!
02.!
உலகுக்கு உணவு தரும் உழவர்கள் !
-------------------------------------- !
உலகுக்கு உணவு தரும் உன்னத உழவர்கள்!
உலகம் உணரவில்லை அவர் தம் பணிகள்!
வெயில் என்றும் மழை எனறும் பாராது!
வாடி வதங்கி நிலத்தில் விளைவிக்கின்றனர்!
மனிதர்களின் உயிர் வளர்க்கும் அட்சயப்பாத்திரங்கள்!
மண்ணில் உயிர் வெறுத்து மாய்த்து மடிகின்றனர்!
விவசாய நிலங்களை வெளிநாட்டவருக்கு விற்கின்றனர்!
வாழ வழியின்றி விவசாயிகள் சாகின்றனர்!
மண்ணின் மைந்தர்களுக்கு மண் சொந்தமில்லை!
மேல் நாட்டவரின் பணத்தால் வந்தது தொல்லை!
நிலத்தடி நீரை உறிஞ்சி கோடிகளை குவிக்கின்றனர்!
நிலத்திற்கு நீர் பாய்ச்சிட இன்றி விவசாயிகள் துடிக்கின்றனர்!
கடலில் வீணாக கலக்கும் நீரை தர மறுக்கின்றனர்!
கண் கலங்கி பயிர்வாட விவசாயிகள் வாடிகின்றனர்!
மரபணு விதைகள் என்று மலட்டு விதைகள் தருகின்றனர்!
மறு விவசாயத்திற்கு பயன்படாத குப்பையை!
விற்கின்றனர்!
பூச்சி மருந்து பூச்சியை விட விவசாயிகளையே கொல்கின்றது!
உரத்தின் விலையோ விவசாயிகளின் சக்தியை குறைக்கின்றது!
விவசாயம் நாட்டின் முதுகெலும்பு என்றனர் அன்று!
விவசாயிகளின் முதுகெலும்பை முறிக்கின்றனர் இன்று!
விளை நிலங்களில் எல்லாம் வீடுகள் கட்டுகின்றர்!
விரைவில் உணவுத்தட்டுப்பாடு உலகிற்கு வரும்!
விவசாயி தழைத்தால் விவசாயம் தழைக்கும்!
விவசாயம் தழைத்தால் உலகம் தழைக்கும்