அதிகம் சாப்பிட்டால்!
ஆரோக்கியத்துக்குக் கேடுயென!
எனக்கு ஒற்றைச் சாக்லேட்டோடு!
நிறுத்திக் கொண்ட அப்பா!
தனக்கு மட்டும்!
பாக்கெட் சிகரெட்!
வாங்கிக் கொண்டார்!!
யார் சொன்னது!
தன் வினை!
தன்னைச் சுடும் என்று?!
பொறுப்பில்லாதவன்!
புகைத்த பின்!
அணைக்காமல் போட்ட சிகரெட்!
செருப்பில்லாதவன்!
காலையல்லவா சுட்டது
நாவிஷ் செந்தில்குமார்