பூக்கள் - பாரதி ஜேர்மனி

Photo by engin akyurt on Unsplash

வசந்தகாலம் வாழ்த்திசை பாடிட !
வண்ண மலர்கள் தேனிதழ் மலர்த்திட !
வண்டுகள் தேனினை உண்டு களித்திட !
வட்டமிட்டு மலர்களை மொய்த்திட !
பொழில்களும் பொய்கையும் எழில்களில் நிமிர்ந்திடும்!
பொங்கிடும் கவிகளில் பூக்களும் கலந்திடும் !
புலம்பெயர் மண்ணில் புதுமையாய்ப் பூத்தன. !
புனிதம் மனிதம் அழிந்த புகைப்பூ பல !
மலர்கின்ற பூக்களில் அன்பு இல்லை. !
அது மறுபடியும் மலர்வதற்கு பண்பு வேண்டும். !
அழைக்கின்ற பூக்களில் அணைப்பு இல்லை. !
அகந்தை மிதமாக வெறுப்பு மிஞ்சும். !
சி£¤க்கின்ற பூக்களில் சிலிர்ப்பு இல்லை. !
சிநேகம் இல்லா உலகில் சினப்பு மட்டும். !
இனிப்பு இந்த மண்ணில் இல்லை. !
நாம் ஈழம் சென்று தேடுவோமா? !
!
காகிதப்பூக்கள்!
என் மனத்தடாகத்தில் மகிழ்ச்சிப் பூக்கள் !
பூத்ததொரு காலம். !
இன்று மௌனத்தில் கழியும் மயான அமைதியில் !
வாசனை நிறைத்து வண்ணக் கனவினில் மிதந்து !
வசந்தத்தின் வாசலில் சுகந்தமாய் வீசிய நாட்கள்.... !
இன்று விழிகளை நனைக்கின்றன. !
சீதனம் என்னும் சோதனைப் பாதையில் வேதனை வந்தது. !
என் வசந்தம் வெற்றிடம் ஆனது. !
காகிதப் பூவாய் கல்லறைக்கும் உதவாமல் நான்... !
!
-பாரதி ஜேர்மனி
பாரதி ஜேர்மனி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.