சக்தி தாராயோ.. காதலை மறந்துவிடு!..மண மகளே ! போய்வா !!
01.!
சக்தி தாராயோ!
---------------------------!
வெண்பனி தூறலின் விதமென !
நெஞ்சும் விழலின்றி!
வீறுநினைவெழு விதமென !
நடையும் விளையாயோ!
புண்ணொடுசீழும் புரையுடை!
நீரும் புறங்கூறும்!
புன்மை பயம்கொள் பிணியுறு !
வாழ்வும் வேண்டாமே!
கண்ணில் விழிப்புடன் கனலுறு !
விடியற் கதிரொளியின்!
காணும் வெளிச்சமென் றன்புடை !
வளமும் தாராயோ!
உண்மை கனிந்தொரு இயல்பொடு!
உள்ளம் உயர்மேவ!
ஓர்மை கொடுத்துயிர் உலகிடை !
வாழச் செய்யாயோ!
துள்ளும் துதித்திடத் துன்பமனம் !
விடத் தொலைவாகும்!
தொல்லை யகன்றிடத் தொகையென !
மகிழ்வும் தருவாயோ!
கிள்ளி முறுக்கியே கேளழு இன்பக் !
காண் சுகமும்!
கொள்ளும் மனக்கிடை கொடிதெனும் !
நோயைப்போக்காயோ!
உள்ளி மனத்தெடு உயர்வுடை !
வாழ்வும் ஒளிபொங்கும்!
உத்தம மானதென் றெக்கணம் !
போற்றிடும் இயல்பாக்கி!
தெள்ளெனும் ஓடைதிகழ் புன!
லென்னத் தன்மையுறும்!
தென்பொடு நல்லுள முடையொரு !
விளைவைத் தாராயோ!
தகவுறு நெஞ்சும் தணிவுறு !
சினமும் தாழ்மையுடன்!
அக மொருஇன்பம் அணிகொள !
வரமும் அருள்வாயே!
புக மனதிடையே புரிவுட !
னெதையும் பொறுத்தாள!
முகமதை மூடும் மெதுவெனும் !
இருளும் மாற்றிவிடு!
மிகமன உறுதி மிதமுடன்!
திறமை மகிழ்ந்தாடும்!
சுகமெனும் உணர்வும் சுடுவெயி !
லெனவே தீமைதனை!
அகலென விலகும் அதிசிறந்!
துணரும் ஆற்றலதும்!
தகமையும் தந்து தரையினில் !
வாழத் தா வரமே!!
02.!
காதலை மறந்துவிடு !!
---------------------------!
கள்ளுண்டதாய் மதிகெட்டே - அவள் !
காதலை ஏற்றுக் களித்தேன் !
கொள்ளென்று கூடிக் கிடந்தாள் - அவள் !
கொஞ்ச மயங்கிக் கிடந்தேன் !
தள்ளென்று தள்ளி விழுத்தி - தரை !
தன்னில் படுத்திக் களித்தாள் !
அள்ளென்றுஅள்ளி சுவைத்தாள் - எந்தன் !
ஆளுமை தன்னை அழித்தாள் !
என்னென்று சொல்வேன் அவளை - எனை !
என்றுமே கூடிப் பிரியாள் !
தன்னையே என்னிடந் தந்தாள் - அல்ல !
தன்னிலே என்னைக் கலந்தாள் !
பொன்னென்றே ஏதும் விரும்பாள் - நான் !
போகும் இடமெங்கும் வந்தாள் !
புன்னகை செய்திட்டு நின்றார் - பலர் !
போனபின்போ புறஞ் சொன்னார் !
நன் மனையாட்டியின் முன்னே - எனை !
நாணமின்றித் தொட்டு நின்றாள் !
என்னஇது என்றுகூறி - சதி !
என்னை வெறுத்திடச் செய்தாள் !
அன்னை யெனும் பாசம் விட்டு -எனை !
ஆகத் தனிமை யென்றாக்க !
முன்னைபின்னை யெந்தன்மேனி - முற்றும் !
மோகக் குறி பதித்திட்டாள் !
காதலில் மாபெரும் கள்ளி - எவர் !
காணாமல் என்னுள் கலப்பாள் !
மோதலென் றேதுமே யில்லை - என்னை !
மெல்லென மோகத்தில் கொன்றாள் !
போதுமடி என்று சொன்னால் - இல்லை !
போதாதென் றேசுகம் கொள்வாள் !
சாதல்;வரை வரு வாளோ - உனைச் !
சற்றும் விட்டுப்போகே னென்றாள் !
காதிலே சொன்னேன் பார் குற்றம் - அந்தக் !
காக்கும் கடவுளும் வையும் !
ஏதினிப் போதும் விட்டேகு -- என்ன !
இல்லை யென்றேஅழு திட்டாள் !
பாதியுடல் கொன்று விட்டாள் - இன்னும் !
பார்த்துக் கிடக்கின்றாள் என்று !
மீதியும் கொல்வா ளறியேன் - என்றன் !
மேனி கலந்த நோய் என்பாள் !
!
03.!
மண மகளே ! போய்வா !!
---------------------------------!
வாழவென்று சேலைகட்டி வண்ணப்பூக்கள் கூந்தலிட்டு!
வாசல் விட்டுப் போகும் அன்பு பெண்ணே!!
ஆளவென்று கைபிடித்து ஆசைநெஞ்சில் பாசம் வைத்து!
யார் மனத்தில் நீபுகுந்தாய் சொல்லேன்!
நாளை எட்டுமாதம் பத்து நாட்களோடித் திங்கள் போக!
நாவினிக்கப் பாலருந்தும் வாயர்!
தோளிலிட்டுக் கொள்ளவொன்று தொட்டிலிட்டு ஆட்டவென்று!
தூள் கிளப்ப வேண்டுமடி பெண்ணே!
மேளங் கொட்டித் தாலிகட்டி மேன்மைமிக்க மாந்தர்முன்பு!
மெல்லச் சுற்றி வந்து நிற்கும் மாதே!
நாளுமொட்டி நீங்கள் அன்பு நல்கும் வாழ்வுகாண இங்கு!
நானும் அன்பு வாழ்த்துச் சொன்னேன் ஈதே!
கோளம் சுற்றும்பூமி மீதில் கோடிகொட்டி யார் கொடுத்தும்!
கொண்ட அன்பு குறையவே விடாது!
தாளமிட்டு நீரும்கொட்டி வானிறைக்க பச்சைப் புற்கள்!
தானிருக்கும் வண்ணம் கொண்டு வாழு!!
நாவுரக்கப் பேசலின்றி நாவினிக்கப் பேசும் பேச்சில்!
நாடி எண்ணம் கொள்ளவேண்டும் தாயே!
பூவிருக்கும் மென்மையென்று பேச்சிருக்கும் வாழ்வுதன்னில்!
புன்னகைக்குப் பஞ்சமில்லை பாரு!
கூவிநிற்கும் கோகிலத்தின், கொத்தி ஏய்க்கும் காகம்தானும்!
கொண்ட வண்ணம் காரிருட்டுத் தானே!
பாவிமக்கள் தீயமாந்தர் பாரில் தோற்றம் கொள்வர் ஒன்று!
பார்த்துவாழ வேண்டும் என்றும் தாயே!
வாழ்க்கை என்றும் வானசக்தி ரூபமற்ற தீயெழுச்சி!
வந்து நின்னில் சக்தி கொள்ள வேண்டி!
ஆழ்மனத்தில் எண்ணி தினம் ஆரம்பிக்கும் வாழ்விலென்றும்!
ஆவதில்லை வீண்இழுக்கு காணே!!
தேள் இருக்கும் தீயரவம் தீண்டவென்று காத்திருக்கும்!
தேடிவாழ்வில் தீமை வந்தபோதில்!
ஆள்வதிந்த பூமிதனை அண்டமும் சராசரங்கள்!
ஆக்கும் அந்தசக்தி வேண்டின் காப்பாள்
கிரிகாசன்