உருகி... உருகி - தொட்டராய சுவாமி.அ

Photo by Julian Wirth on Unsplash

1.இசையானவள் !
சுரங்களுக்கே!
சுகமளிக்கும்!
சூச்சமக்காரிக்கு!
சுபமங்களம்!
மட்டும்!
வாசிக்கத்தெரியவில்லை!
காதலுக்கு.. !
!
2.கொன்றுவிடு என்னை !
இப்போதே!
என்னைகொன்றுவிடு..!
தினம் தினம்!
உன் விழி போர்படைகள்!
புடைத்தெடுத்துவிடுகின்றன.!
உயிரை!
ஒழித்துவைத்துக்கொண்டு!
பார்க்க வேண்டியதாய் உள்ளது!
உன்னை. !
3.பலன் !
நான்!
நேசத்தில்!
அடைப்பட்டது முதல் !
தினபலன்களில்!
நன்பிக்கை குறைந்துவிட்டது !
4.ஆச்சரியமனவள் !
அழகாய் இருப்பதில்!
ஆச்சரியம் இல்லை!
எனக்கு!
நீ!
ஆச்சரியங்களை!
ஆச்சரியப்பட வைக்கும்!
போதுதான்!
அழகாய் தெரிந்து!
ஆச்சரியப்பட வைகிறாய்!
என்னை!
5.திமிரு !
என்னை தவிர!
யாரும் அதிகமாய்!
நெசித்துவிட முடியாது!
அதனாலேயே!
உனக்கு வேதனைகளை!
தரும் அதிகாரம்!
எனக்குள்ளது!
அந்த வேதனைகளில்!
நீ வேள்விநடத்தும்போது!
அதன் வேதனையை!
என்னை தவிர யாராலும்!
உணர்ந்துகொள்ளமுடியாததும்!
அதனாலேயே... !
6.அரைமுளம் பூ !
உனை காண!
காத்துக்கொண்டிருந்தபோது..!
அரை முளம் பூவை!
வாங்கி வைத்தேன்!
சாலையோர கிழவியிடம்!
உன்னிடம் தந்து!
காதல் சொல்லிவிடவேண்டும்!
என்றல்ல!
வெய்யிலில்!
அரைமுளப்பூவை!
மூன்று மணிநேரம்!
வைத்து காத்திருந்ததால்..!
பூ உன்னிடம்!
சேராதென்றாலும்!
மதிய உணவை பசியில்!
சுவைத்துக்கொண்டிருந்த!
கிழவியின் பொக்கவாயில்!
என் நிம்மதி!
சுவைக்கப்படுவதை!
கண்டேன் !!
நீ!
எனைகடந்து!
போனதையும் மறந்து.. !
7.எனக்கான காதல் !
கண்மூடி!
நீ தூங்கினாலும்!
உன்!
இமைப் பரப்பில்!
விழித்துக் கொண்டிருந்தது!
எனக்கான காதல்!
கண்சிமிட்டி! !
!
8.உன்னை நேசிக்கவை !
என்னை எப்படியாவது!
உன்னை நேசிக்கவைத்துவிடு..!
நீ என்னை நேசிக்காவிட்டாலும்!
பரவாயில்லை..!
நேசிக்கவாவது!
பழகிக்கொள்கிறேன்! !
9.காத்திருந்தக் காதல் !
இப்பொழுது!
வருவதாய் சொன்ன!
அப்பொழுதிருந்தே!
இப்பொழுதுக்காக!
காத்திருக்கின்றேன்..!
ஆமாம்!!
நான்!
காதலிக்கின்றேனா?!
காத்திருக்கின்றேனா? !
10.எனை வெட்கப்படுத்தி !
எவ்வளவு!
விதமான!
வெட்கங்களை!
வெட்கப்படாமல்!
வீசியெறிகின்றாய்!
என்மேல்..!
இவ்வளவும்!
எனை வெட்கப்படுத்தி!
வேடிக்கை பார்க்கவா?!
வெட்கமேயானவளே! !
11.நான் மட்டும் !
கோயிலில் நீ!!
கோபுரங்கள்!
குனிந்து பார்க்கும்!
அதிசியத்தை அறிவித்துவிடும்!
ஆசையை அடக்கி!
நான் மட்டும்!
அதனோடு உனை ரசித்தேன். !
12.தலைப்பூ !
சூடி!
நீ எறிந்ததில்!
உன் கூந்தல் வாசம்.!
நான் உன்னை!
நேசிக்க ஆரம்பித்தபிறகு!
பூவினில். !
13.நேசிக்க கற்றுத்தந்தவள் !
நேசிக்க கற்றுத்தந்தவள்!
நீ என்பதால் உனை மட்டுமே!
சுவாசித்துகொண்டிருப்பேன்!
என்று நினைத்துவிடாதே!
எனக்கு சுவாசிக்க!
கற்றுத்தந்தவளே!
தாய்தான். !
14.எட்டாம் நிறம் !
வானவில்களின்!
வட்டமேசை!
மாநாட்டில்!
முடிவெடுக்கப்பட்டது!
உன் நிறத்தையும்!
சேர்த்துக்கொள்ள!
எட்டாம் நிறமாக. !
15.நீ என்றெண்்ணி நான் !
உன் சாயலில்!
சராசரியானவற்றை!
கண்டால் கூட!
சாமான்யனாக!
பரபரப்பை அடைந்துவிடுகிறேன்!
நீயாகிவிடுவாயோ!
என்றெண்னி!
நான் !
!
16.சினுங்கள்கள் !
உன் சினுங்கள்கள்!
என்ன சிம்பொனியா!!
என்னை இப்படி!
சுகமாய்!
இசைத்தெடுகின்றது. !
!
17.மரமாகிய நான் !
காத்திருந்து!
காத்திருந்து!
மரமாகிப் போனேன்!
என்றாவது நிழலில்!
அமர்வாய்!
நீ என்று!
அப்போது மறவாமல்!
பூமழை பொழிவேன்!
உன்மேல்!
மரமாகிய நான். !
!
18.என் தேசமானவளே !
பூக்களில்லா!
தேசத்தில்!
பட்டாம்பூச்சிகளுக்கென்ன!
பாதபூசை!
நீயில்லாதேசத்தில்!
என் நுரையிரலுக்கென்ன!
தினம் வேலை. !
19.காலம் !
எனைத்!
தொலைத்துவிட்டு!
தேடிய தருணங்களிலெல்லாம்!
உனை!
கண்டுகொண்டிருக்கின்றேன். !
!
20.பொய்துவிடாதே !
இதயத்துடிப்பின்!
இயல்புகள் மாறி!
வெகுநாட்களாகிவிட்டன!
என் மீது!
மழைத்துளியாகவாவது!
பெய்துவிடு!
பொய்துவிடாதே!
என் இதயம்!
உன்னைபோலவே!
மென்மையானது. !
21.சராசரி மனிதன் !
வெயிலோடு!
மழை பெய்யும்!
சில தருணங்களுக்காக!
காத்திறுக்கும்!
காதலன் அல்ல!
நான்!
உனக்கா(ன)க!
தருணங்களை!
தருவிற்க ஏங்கும்!
சராசரி மனிதன் !
!
22.முத்தம் !
நீ என்ன!
மகாத்மாவின்!
வம்சாவழியா!
உன்னை காரணங்காட்டி!
நான் செய்யும் தவறுகளுக்கெல்லாம்!
அகிம்சையாக முத்தங்களையே!
தண்டனையாக தறுகின்றாய். !
23.காதலெனும் !
நான்!
தினம் தினம்!
அலங்கரித்து!
அலுத்துபோன போது!
அலங்கரித்துக்கொள்வது!
அர்த்தமற்றது!
என்றெண்ணியிறுந்தேன்!
நீ!
அவற்றை கலைத்து!
நான் உன்னை!
கோபித்துக்கொள்ளும்வரை!
சினேகிதா! !
24.காதலர்கள் எனும் காதலர்கள் !
காதலர்கள்!
காதலை உணர்வதில்லை!
காதலை உணர்ந்தவர்கள்!
காதலிப்பதில்லை!
காதலுக்கு!
காதலர்கள் - ஒரு!
பொருட்டல்ல! !
25.சொல்லிவிடாதே !
நான் நேசிக்கும் போதே!
இவவளவு அழகாய் இறுக்கின்றேனே!
உன்னால் நேசிக்கப்படும்போது!
எவ்வளவு அழகாய் இறுப்பேன்!
என்ற ஆதங்கத்திலேயே!
இன்னமும் உன்னை!
நேசித்துக்கொண்டிறுக்கின்றேன்!
நீ என்னை நேசிக்காவிட்டாலும்!
பரவாயில்லை!
அதை யாரிடமாவது சொல்லிவிடாதே. !
26.மையிட்டு !
நேசமானவளே!!
வாக்களிக்கச்!
சென்றுவிடாதே!
உன்!
நகங்களின் இடுக்கில்!
மலர்ந்துகிடக்கும்!
மனசை மையிட்டு!
மறைத்துவிடுவார்கள்!
ஜனநாயக!
கடமையாளர்கள். !
27.விழிவீச்சு !
இப்போதெல்லாம்!
தோல்விகளை மட்டுமே!
ரசித்து அனுபவிக்கின்றேன்!
உன் விழிவீச்சில்!
தோற்றுப்போனதிலிறுந்து. !
!
28.குறி !
என் மனகுளத்து!
மீன்களைதூண்டிலிடும்!
அனைத்து கேள்விகுறிகளுக்கும்!
உன்னால் மட்டும் எப்படி!
ஆச்சரிய குறிகளை!
பதிலாக தரமுடிகின்றது. !
29.யாதுமானவள் !
அழகானவைகள் யாவும்!
உன் சாயலில் உள்ளதா..!
உன் சாயலில் உள்ளதெல்லாம்!
அழகானதாய் உள்ளதா..!
மிகப்பெரிய!
போராட்டத்திற்கு நடுவே!
தீர்மானித்துவிட்டேன். !
30.முரண் !
இபோதெல்லாம்!
உன்னிடம் பேசுவதைவிட!
உன்னைபற்றி யார் பேசினாலும்!
கேட்க ஆர்வமடைகிறேன்!
காதலுக்கும்!
முரண்பிடிக்கும் என்று!
கண்டுகொள்ளவோ!
நி யாதுமானவள் என்று. !
31.பின்விளைவு !
எதார்தமாக!
கடந்துசென்றுவிடுகிறாய்!
என்னை..!
கிடந்து தவிக்கின்றேன்!
மற்றுமொருமுறை!
ஏங்கி.. !
32.சின்னம் !
என்னை!
அறியாமல் கீறிய!
உன் நகங்களை!
கொபித்துக்கொள்கிறாய்!
நானோ!
காதலின் சின்னம்!
கிடைத்ததில்!
கூத்தாடுகிறேன். !
33.கவிதை !
உன் கண்கள்!
இட்டுசென்ற!
கோடுகளில்!
தமிழ்கொண்டு!
நிரப்பி வருகிறேன்!
கவிதையாக. !
34.இடம்பெயர்ந்து !
என்மேல்!
அளவுக்கதிகமாய்!
அன்பை பொழிந்து!
அதிர்ச்சிகளை!
அவிழ்த்துவிடும்!
தருனங்களை!
மொழிப்பெயர்க்க!
ஆசைப்பட்ட!
நேரங்களிலெல்லாம்!
ஆச்சரியங்களாய்!
இடம்பெயர்ந்து விடுகிறாய். !
35.ஆசை !
நொடிகளை!
பரிசளிக்க!
யுகமாக!
காத்திருக்கிறேன்!
நிமிடத்தில்!
வந்துவிடு!
மைல் கணக்கில்!
நீள்கிறது!
உனை காணும் ஆசை. !
36.உயிர்திருடா! !
இதழ் பரப்பில்!
எச்சில் செய்து!
தினமும் உறுஞ்சி!
உயிரை எடுத்து!
முடிந்தால்!
உயிரை திருப்பிக்கொள்!
என்கிறாய்!
உயிர்திருடா! !
37.சாபம் !
என்னுள்!
நகர அடம்பிடித்த!
வினாடியை நகர சொல்லி!
அடம்பிடிக்கிறது!
என் வீட்டு நாட்காட்டி!
நான் என்செய்ய!
உனை சந்தித்த!
நொடிப்பொழுதிலேயே!
வாழ்திருக்க பிடித்திருக்கின்றது. !
38.நீ !
யுத்தமிடவில்லை!
காயப்படவில்லை!
ரத்தம் சிந்தவில்லை!
நோம்பிருந்ததில்லை!
ஆனாலும்!
நீ கிடைத்தாய். !
39.கவிதை !
கம்பன் வீட்டு!
கடைகுட்டியா நீ!
நகம்வெட்டும் பொது!
கவிதைகளும்!
சேர்ந்தல்லவா தெரிக்கின்றது. !
40.காதலின் பரிசு !
நான் உனக்கு!
என்ன தரமுடியும்?!
உலகத்தில்!
விலை மதிப்பிடமுடியாத!
மொழித்தந்த!
கவிதையை!
பரிசளிப்பதைவிட. !
41.கவித்துவம் !
உன்னைப் பற்றி!
கவிதை எழுத!
ஆசைப்பட்டு!
இப்போதும்!
உன் பெயரையே!
எழுதிக்கொண்டிருக்கிறேன்!
இதைவிட கவித்துவம்!
வாய்ந்தது வேறென்ன!
இறுக்கின்றது உலகில். !
42.இசைக்குறிப்பு !
என்!
இசைக்குறிப்புகளில்!
உன்-!
அச்சச்சோ!,!
ஊஹூம்,!
ம்க்கும்!
மக்கு!
சும்மாஇரு!
...களே நிரம்பிக்கிடக்கின்றன. !
43.காதல் விவசாயி !
உனக்காக வாங்கிய தீவில்!
நான் மட்டும்!
வாழ்ந்துகொண்டிருக்கின்றேன்!
நீ வருவாய் என்பதற்காக அல்ல!
உன் நினைவு செடிகளை!
விருச்சமாக்க. !
44.கண் !
உன் கண்களுக்கு!
கருப்புக்கண்ணாடியிட்டு!
அழகு பார்க்கும்போதெல்லாம்!
என் உலகம்!
இருண்டுபோகிறது. !
45.தரவிறக்கம் !
நீ!
எப்படியிருப்பாய்!
என்பதை பகிர்ந்துக்கொள்ள!
எழுதப்பட்டதில்!
இடம்சுட்டி!
பொருள் விளக்கமாக!
தரவிறக்கம் செய்யப்பட்டது!
என்னுள்!
உன் பெயர்மட்டும். !
!
46.உதிரமானவள் !
நீயிட்ட!
முதல் முத்தத்தை!
அழிக்க மனமில்லாமல் !
இதயத்துடிப்புகளுக்கு!
நடுவே புதைத்து!
வைத்துள்ளேன் !
உதிரத்தில் கலந்துக்!
கொண்டிருக்க.. !
47.மறந்தும் மறவாமல் !
உனை எங்குப்பார்த்தேன்!
என்று மறந்துவிட்டாலும் !
உனை பார்த்தது மட்டும்!
மறந்துவிடாமல். !
48. தண்டனை !
நம் ஒவ்வொறு!
சந்திப்பின் போதும் !
உயிரில் ஒருப்பகுதியை!
பிரித்தெடுத்து!
போகிறாய் !
சில சமயங்களில்!
எனை பிரசுவித்து!
விடுகிறாய். !
49.சிற்றெரும்புகள்!
உன் பெயரிட்டு!
மடித்துவைத்த!
எந்த ஒரு!
காகிதத்தையும் !
மொய்காமல்!
விட்டதில்லை!
சிற்றெரும்புகள்!
என் அறையில். !
50.ஏலம் !
கடற்கரையோரம்!
கால்தடங்களை!
பதித்துவிட்டு!
வீடுவருகின்றாய்!
நீ.. !
போட்டிப்போட்டுக் கொண்டு!
ஏலம் கேட்கின்றன!
அலைகள். !
51.மூச்சு !
சுவாசிக்கின்றாயா?!
சுரங்களை!
வாசிக்கின்றாயா.! !
52.தாகம் தீ!
என்னை விட்டு!
வெகுதூரம் சென்று!
ஒழிந்துகொண்டாலும் !
எனைக் கடந்து செல்லும்!
(உன்) மூச்சுக் காற்றைக்கொண்டாவது!
ஒரு கவிதையை!
எழுதிமுடிப்பேன். !
53.நிஜம் !
என் சுவாசக்கூட்டில்!
உனக்கான சுவாசங்களும்!
சேர்த்தே சுவாசிக்கப்படுகின்றன !
மழைப்பெய்யும் போது!
மண்வாசனை!
தவிர்க்கப்படாதது போல. !
54.நோய் !
நோயை குணப்படுத்த!
ஆயிரம் வழிமுறைகள்!
இருந்தாலும் !
உன் ஒற்றை முத்தத்தில்!
கானாமல் போனது!
என் காய்சல்! !
55.ஆசை !
நான்!
நகங்கடித்து!
எழுதியனுப்பிய!
கடிதங்கள் அனைத்தையும்!
பத்திரப்படுத்தி வைத்துக்கொள் !
என்றாவது ஒருநாள்!
உனக்கு கவிதைகள்!
வாசிக்க ஆசை வரலாம். !
56.இப்படியும் !
தென்றல் தீண்டிவிட்டது !
என்று !
இப்படியா தொற்கடிப்பது!
தொட்டால் சிணுங்கியை! !
57.கைக்குட்டை !
கேட்கும் போதெல்லாம்!
தந்துவிடுகிறேன் !
நீ!
துடைத்துத் தருவாய்!
என் கைக்குட்டையை !
உனைக் கரைக்க!
மனமில்லாமல்!
பத்திரப்படுத்திவிடுவேன் !
இது 193வது.! !
58.நீயுமா? !
நான்!
நேசிப்பதை உன்னிடம்!
செல்லிவிட வந்தபோது !
எவ்வளவுக் கூட்டம்!
உன்னைச் சுற்றி !
கடவுளை!
தேடினேன்!
கருணைக் கேட்க !
அக்கூட்டத்தில்! !
59.சாபம் !
எந்த சாபம்!
வேண்டுமானாலும்!
வாங்கிட!
தயாராக உள்ளேன் !
நான்!
உனக்கு குழந்தையாக!
பிறக்க வேண்டும்!
அவ்வளவுதான்.!
60.போர் !
குழாய்யடிச் சண்டையில்!
உன் பெயர் சூடிய!
யார் தோற்றுப்போனாலும் !
பெரும்படை திரட்டி!
வென்றவரை!
வென்றுவிடுமளவுக்கு!
கோபம் வருகிறது
தொட்டராய சுவாமி.அ

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.