காதலைச் சொன்ன மாலையில் !
ஒரே வரிசையில் நீண்டன நட்சத்திரங்கள் !
சதுரமாய் சிரித்தது லவு !
மணலலைகள் கிளம்பிக் கடலுக்குள் சென்றன !
கரையிலிருந்து !
திமிங்கிலமொன்றினை விழுங்கியது !
சின்ன நெத்திலி !
பகலிலேயே அல்லிகள் பூக்க !
பாலையிலிருந்துப் பீறிட்டன நீருற்றுகள் !
பூமி தொடவில்லை பாதங்கள் !
சிறகு விரித்துப் பறக்கத் தொடங்கினேன் !
ஒன்பதாம் திசையில். !
பட்டமரமொன்றிலமர புஷ்பித்தது விருட்சமாய் !
இலைகளில் இருந்தும் கமழ்ந்தது சுகந்தம் !
தீத்தொட இனிக்கிறது தித்திப்பாய் !
மாலைச் சூரியன் பொழிந்தான் பனிமழை !
எல்லாப் பறவைகளும் !
காதல் பறவைகளாக மாறிவிட்டன !
காதலைச் சொன்ன மாலையில்

அன்பாதவன்