இந்த வெயில்!
என்னமாய் படுத்துகிறது!
எங்கயாவது!
போக முடிகிறதா!
இந்தச் சமயத்தில்!
மனம் மண்வாசனையை!
நாடுகிறது!
நாட்கள் ஓடிக்கொண்டே!
இருக்கின்றன!
பருவத்தில்!
விடியலில் கூவி அழைக்குமே!
அந்தக் குயில்!
முதுமையில் எங்கே சென்றது!
கண்ணாடியில் நரைத்த முடியை!
பார்க்கிறேன்!
இன்னும் அதிகமில்லை!
உனது நாட்கள் என!
அது நையாண்டி செய்கிறது!
இரத்தத் திமிர் அடங்கியதும்!
சித்தம் தெளிவது !
உடல் தளர்ந்ததும் !
உலகம் புரிவது!
பாரம் மிகுந்ததும்!
பரம்பொருள் நாடுவது!
குறையொன்றுமில்லையென!
என்று கூறுவது!
நரைத்த கேசத்தை!
மறைக்க வேண்டுமென!
குறுகுறுப்பு இல்லாமலிருப்பது!
நதி கடலைச் சேரப் போகிறது!
இதில் கவலைப்பட என்ன இருக்கிறது!
இன்னும் சற்று தொலைவு தான்!
அதோ தெரிகிறதே!
காலன் வாவென்றழைப்பது.!
ப.மதியழகன்