நிலவு களவு போனது - ஷீ-நிசி

Photo by Didssph on Unsplash

நேற்றிரவு!
நிலவை யாரோ!
களவாடிவிட்டார்களாம்;!
இனி அங்கே ஒளி வீசிட!
நிலவிற்கு பதிலாய்!
நீ செல்லவெண்டுமாம்!!
நட்சத்திரங்களெல்லாம்!
இன்று காலைமுதல்!
என்னை நச்சரிக்கின்றன;!
நிலவை களவாடியது!
நான்தானென்று தெரியாமல்!
என்னிடமே!!
முடியாது என்று!
புறமுதுகு காட்டினேன்;!
நட்சத்திரங்களெல்லாம்!
கண்ணீர் விட்டன;!
முதன்முதலாக அன்று!
பூமியிலிருந்து மழை பெய்திட!
ஆரம்பித்தது!!!
அழுகையில் மனமிளகி!
அரைமனதாக ஒப்புக்கொண்டு;!
அவைகளிடமே கேட்டேன்!!
நீங்கள் பறிகொடுத்த!
நிலவில் கறை இருந்திடுமே!
நான் அனுப்பும் நிலவில்!
துளி கறையும் காணப்படாதே!!
உங்கள் சூரியத்தலைவன்!
கண்டுபிடித்தால் -உங்களை!
சுட்டெரித்திடுவானே என்று!?!
விடை தெரியாமல்!
விழிகளெல்லாம் நனைந்தன!
கண்ணீரால் நட்சத்திரங்களுக்கு;!
வினாவெழுப்பிய நானே!
விடையளித்தேன்!!
நட்சத்திரங்களெல்லாம்!
முகம் பிரகாசிக்க!
புன்னகைத்தன!!
என்ன தெரியுமா?!
நான் அனுப்பும் நிலவிற்கு!
கறையாய் -நானே!
அவளுடன் ஒட்டிக்கொள்கிறேன் என்று!!!!
------------------------------------------------------!
ஷீ-நிச
ஷீ-நிசி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.