01!
நிலத்துண்டு!
------------------!
எது ஆயினும்!
எனக்கொரு வாரிசு பிறக்காமல் போகலாம்!
எனக்கொரு நிலவின் ஒளி !
எனக்கொரு மலரின் வாசனை!
எனக்கொரு நல்ல நாள் என்று !
ஒன்றுமே தெரியாமல் போகலாம்.!
ஆயினும்!
நமக்கென்று ஒரு நிலத்துண்டு!
இல்லாமல் போய்விடுமோ என்று !
தினமும் வரட்சியாகிறேன்.!
!
02!
ஒவ்வொரு நாளும் அவளாகவே!
----------------------------------!
நான் ஓடிக்கொண்டிருக்கிறேன்.!
என் காதல் கரைபுரண்டோடும்!
ஒரு நதிக்கரை ஓரமாக.!
என்னைத் துரத்தும் காற்று!
என்னைத் துரத்தும் வண்டு!
என்னைத் துரத்தும் எறும்பு!
என்னைக் கொல்லும் கனவுகளுக்குள்!
நான் ஓடிக்கொண்டிருக்கின்றேன்.!
இத்தனைக்கும் ஒட்டு மொத்தமாக!
ஏனக்குள் நசுக்கப்பட்டுக்கொண்டிருக்கும்!
ஓர் உணர்வு!
என் காதலைப் பற்றி நன்றாக !
மனைவிக்கு கற்றுக்கொடுத்திருக்கிறது!
அதனால் நான் ஓடிக்கொண்டிருக்கிறேன்!
ஒவ்வொரு நாளும் என் மனைவியே !
எனது காதலியாகக் காண.!
ஒரு நதிக்கரை ஓரமாக.!
03!
காற்று!
---------!
காற்று கடற்கரையில் நின்றது.!
பின் எழுந்து உதறிக் கொண்டு!
கடைத்தெருவுக்கு வந்தது!
டீக் கடையில் குந்திக் கொண்டு!
வாய்காட்டிவிட்டு!
என் வீட்டு ஜன்னல் பக்கம்!
நழுவிவந்து உடைக்கப்; பார்த்தது.!
ஜன்னல் மூன்று கொழுவிகளோடு!
இறுகிக்கிடந்தது.!
சகிக்காத காற்று ஆவேசம் கொண்டு!
வாசலில் நின்ற !
முருங்கையையும்!
வாழையையும்!
சரித்துவிட்டு மறைந்து போனது.!
விடியக் கூடிய மக்கள் பலவாறும் பேசினர்.!
கருத்துக்கள் சொல்லினர்.!
04!
புதிய பூ மரம்!
----------------!
புதவி வந்தது.!
புpன்னல் கதிரையில் அமர்ந்துகொள்கிறார்.!
புழகிய மனசு பாழ்பட்டுப் போகிறது!
சகபாடிகளையெல்லாம் காட்டு மனிதராகவே காண்கிறார்.!
நாளுக்கு நாள் முகம் கறுத்து வருகிறது!
கண்கள் சிவந்து போகின்றன.!
பேச்சு நாக்கினில் சிக்கித் தடக்குகிறது!
முன்னர் சகாவாக இருந்ததை மறந்தேவிட்டார். !
பதவிக்கு வருமுன்னே!
வெள்ளைப் புடவையாய் இருந்திருந்தால்!
ஒருவரையும் வெளுக்கத் தேவையில்லை.!
கதிரை காணுகின்ற ஆட்டத்திற்கு!
சகாக்கள் அடையாகமாட்டார்கள்.!
புதிய பூமரம் பூத்துக் குலுங்கும் வரை!
டீன்கபூர்!
இலங்கை
டீன்கபூர்