கவிஞர் கடவுள் அவர்களுக்கு - அருண்மொழி தேவன்

Photo by Jake Hills on Unsplash

அன்மையில் நான் தாங்கள் எழுதிய‌!
இயற்கை என்ற‌!
கவிதை தொகுப்பை வாசித்தேன்.!
அருமை..மிகவும் அருமை..!
ஒவ்வொரு க‌விதையை !
வாசிக்கும் போதும்!
நான் கொஞ்ச‌ம் மாறித்தான் போனேன்.!
♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫!
ம‌ழை ப‌ற்றிய‌ த‌ங்க‌ள் க‌விதையை!
வாசித்த‌போது!
என் ம‌ன‌ம் கூட‌ கொஞ்ச‌ம்!
ஈர‌மாகி போன‌து.!
ந‌தி ப‌ற்றிய‌ உம் க‌விதையை!
ப‌டித்த‌போது!
உட‌னே செத்துவிட‌ தோன்றிய‌து.!
என் சாம்ப‌லாவது!
நதியோடு சேர்ந்து !
ந‌டை ப‌ழ‌க‌ட்டும் என்று..!
வான‌ வில் ப‌ற்றிய‌ க‌விதை!
என் வாலிப‌த்தை!
கொஞ்ச‌ம் வ‌லிக்க‌ச் செய்த‌து.!
இத்த‌னை நாள் வான‌வில்!
ர‌சிக்காத‌!
என் இள‌மையை நினைத்து..!
தென்ற‌ல் ப‌ற்றிய‌ !
உம் க‌விதையை வாசித்த‌போது!
இந்த‌ உல‌க‌த்தையே!
நான் கொஞ்ச‌ம் ம‌ற‌ந்திருந்தேன்!
என்ப‌துதான் உண்மை.!
♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫!
சுருக்க‌மாக‌ சொல்வ‌தென்றால்!
ஒரு வேளை!
இந்த‌ புத்த‌க‌த்தை!
நான் எழுதியிருந்தால் !
இத‌ற்கு வைத்திருக்கும் த‌லைப்பு!
க‌விஞ‌னாவ‌து எப்ப‌டி?!
என‌க்கு பிற‌கு!
வ‌ர‌ இருக்கும்!
வ‌ர‌க‌விக‌ளுக்கு!
நான் முன்மொழிந்து,வ‌ழிமொழியும்!
நூல் இது.!
♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫!
க‌விஞ‌ரே!இந்த புத்தகத்தை !
த‌ய‌வு செய்து!
இன்னொரு ப‌திப்பு வெளியிடுங்க‌ள்.!
இல்லையேல்..!
ப‌ல‌‌ த‌மிழ் இல‌க்கிய‌ங்க‌ளை போல‌!
இதுவும்!
இளைய‌ த‌லைமுறையை!
த‌ரிசிக்காம‌ல் இற‌ந்துவிடும்.. !
-இ.அருண்மொழிதேவன்
அருண்மொழி தேவன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.