நல்லதோர் வீணை செய்தே
பாரதி ஜேர்மனி
அமைதி பார்த்த உன் முகத்தில் !
அள்ளித் தெளித்த சோகங்கள் !
அகத்தை மறைத்தாலும்..... !
அழகுக் கண்ணில் துயரங்கள். !
மயிலே உன் சிறகை ஒடித்தவர் யார்...? !
குயிலே உன் குரலை உடைத்தவர் யார்..? !
மௌனத்தின் மடியில் உன் முகம் புதைத்ததேன்..? !
மலரினும் மென்மை என்றுன் பலத்தை எரித்ததாலா..? !
தேன் நீ ! என்று சொல்லிச் சொல்லியே ... !
உனைத் தேளாய்க் கொட்டினாலும்... !
மான் நீயென வர்ணனை செய்ததால் மருண்டு நின்றாயோ..? !
விளக்கினை எடுத்து வை. வெளிச்சம் உன் வாழ்வில் என்பார். !
விட்டில் பூச்சியாய் நினைத்துனை விழுத்திடும்.... !
வேதனை பார்த்தாயா? !
மலராய் இருந்து கசங்கியே...நீயும்... !
மண்ணுக்குள் வீழ்வாயோ? !
மானாய்இருந்து நரிகளின் வாயிலே ... !
இரையாகி மாள்வாயோ? !
புயலாய் எழுந்து புரட்சிப் பூக்கள் தூவிடப்பறப்பாயா? !
புலியாய் எழுந்து புதுயுகம் படைத்திடும்... !
புதுமைகள் மறந்தாயா? !
விட்டில் பூச்சியாய் தினம் வீணாய்ப் போகும்உன் !
வாழ்வும் ஒரு வாழ்வா? !
கட்டிலும்தொட்டிலும் வாழ்க்கையல்ல... இனி !
கண்களைத் திறப்பாயா?. !
!
பாரதி ஜேர்மனி