தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

சுனாமி கவிதைகள்

s.உமா
ஜெயித்த பூதகி!
கடலே !!
நீ பாதகி! !
ஜெயித்த பூதகி!!
ஆயிரமாயிரம் மீனவர்க்கு!
அமுதூட்டுவதாய் அணைத்து !
அழித்தப் பாதகி...!
ஜெயித்த பூதகி...!
!
நிலவே!
நீ பொய்!
உன் ஒளி பொய்!
கடலோடு கலந்த!
உன் மோகனம் பொய்!
உன்னில் லயித்த எங்கள்!
இன்பம் பொய்!
உண்மை....!
நேற்றய கனவு!
இன்றில்லா!
வெறுமை...!
நேற்றய இன்பம்!
இன்றில்லா!
துன்பம்...!
நன்மை...!
புதைந்து போன!
சேற்றிலே !
புதிதாய் முளைத்த!
மனிதநேயச் செடி...!
நம்பிக்கை மலர்கள்!
பூக்க!
நேற்றையச்சோகம்!
நாளைய!
வரலாறாகும்

எனை சுட்டுப் போட்ட சமூகம்!

வித்யாசாகர்
ஏதோ ஒரு கவிதையின்!
கிறுக்கலில் -!
கொட்டிவிட இயலாத!
உணர்வின் மிகுதியில்!
நனைகிறது மனசு.!
காதல் கடந்து!
வாழ்க்கை கடந்து!
இறந்த பாட்டி தாத்தாவிலிருந்து!
இறக்கப் போகும் அப்பாம்மா வரை!
எண்ணி அழுகிற பலரில்!
என்னையும் ஒருவராய்!
வைத்துக் கொள்ளுங்கள். .!
யார் யாரையோ தேடி!
எங்கெங்கோ அலைந்து!
என்னெனவோ செய்து -!
எதிலுமே நிலைக்காத புத்தி!
என் தவறா தெரியவில்லை.!
மனதின் போக்கு நீளும்!
அத்தம் வரை -!
கண்ணீரே.. கண்ணீரே.. வென !
கடக்கிறேன் பொழுதுகளை!
எதற்கென்றே தெரியாமல்.!
இன்னும் -!
என்னென்னவோ வலிகள்!
எப்படி சொல்வதென்றே தெரியாமல்!
கனக்கிறது உள்ளே.!
அத்தனையையும் !
வெளியில் சொன்னால் -!
உலகம் வெகு இயல்பாய்!
அவனொரு 'சைக்கோ' என்று!
சொல்லிவிட்டு -!
தன்னை சரியென்று மெச்சிய கம்பீரத்தில் !
மேலேறி சென்றுவிடும்.!
மனிதர் மெத்தனமாய் இருப்பது!
மொத்தமும் புரிந்தும் -!
போகட்டும், எதற்கோ வீண்!
சிந்தனை என்று அலட்டிக்!
கொள்ளாமல் விடாதலில் -!
தனிமை கொன்று வீழ்த்தியும்!
யாருடமே பேசுவதில்லை நான்.!
உண்மையில் -!
எனக்கான கவலையென்ன?!
உணவோ!
உடையோ!
சுகமோ துக்கமோ என்றால் -!
பளீரென இல்லை என்று தலையாட்டலாம்.!
பிறகென்ன; ஏனிந்த !
பிதற்றல் என்கிறாயா............?!
என் கவலைகள் மொத்தமும்!
நீ - எனில்!
ஏற்ப்பியா என் சமூகமே??? !

நதியும் நானும்..

ரொஷான் தேல பண்டார
பார்வையின் எல்லைக்குள் எங்கும் மழையேயில்லை!
எரியும் மனதை ஆன்மீகத்தால் குளிர்விக்க!
ப்ரிய நேசத்தால் நிறைந்த இன்னுமொரு மழை!
அவசியமெனக் கருதுகிறேன் நான்!
சற்று நீண்டது பகல் இன்னும்!
மேற்கு வாயிலால் உள்ளே எட்டிப் பார்க்கும் பாவங்களை!
அதற்கேற்ப கரைத்து அனுப்பிவிடத் தோன்றுகிறது!
வாழ்நாள் முழுவதற்குமாக சுமந்து வந்த அழுக்குகள் அநேகம்!
வந்த தூரமும் அதிகம்!
எல்லையற்றது மிதந்து அசையும் திசை!
இன்னும் நிச்சலனத்திலிருக்கிறது நதி!
எனினும்!
கணத்துக்குக் கணம் மாறியபடியும்!
ஆழத்தில் அதிர்ந்தபடியும் கிடக்கிறோம்!
நதியும் நானும்!

அவளின் விசனம்

துர்கா
அவமானங்கள் அறுத்தெறியப்பட்டு!
அங்கங்கள் பிரசுரிக்கப்பட்டுவிட்டன!
வெட்டவெளியில் நீதிதேவதை!
மடிந்து கிடக்கிறாள்!
அப்பட்டமாக்கப்பட்ட பின்பு!
ஏனோ?!
மௌனமான மனம்....!
வடிந்தொழுகும் குருதியின்!
வாடை பகிர்ந்து கொண்ட!
பின்பு மறைவிடத்தை எங்கு போய்!
தேடுவது......?

விழி

முத்துக்குமார்
அந்தப் பார்வை..!
எந்தப் பார்வை!
என ஊருக்குத் தெரியாது!
ஆனால்!
உனக்குத் தெரியும்!
இதயத்தை!
தீப்பற்ற வைத்துவிட்டு!
காதலை அதில்!
குளிர்காய வைத்த!
என் முதல் பார்வையைத்தான்!
நான் அப்படிச் சொன்னேன்!
மௌன மொழிகளின!
ஊடகமான!
அந்ந கருப்பு வெள்ளைத் தடாகத்தின் மூலம்!
எத்தனை உணர்வுகளை!
என்னோடு பரிமாறி இருப்பாய்!
கண்ணடிப்புகள் முதல்!
கண்டிப்புகள் வரை!
உன் விழிகளில்தான்!
தேய்ந்திருக்கக் கூடும்!
சில வேதனைகளையும்!
பல போதனைகளையும்!
சாதனைகளாக்க.!
உன்னை விலைக்கு வாங்கிய!
என் விழிகளையும்!
என்னை விலைக்கு வாங்கிய!
உன் விழிகளையும்!
தத்துக் கொடுப்போம்!
தான வங்கியிடம்!
பார்வையுதிர் காலத்தில்!
இருக்கும்!
சில விழிகளுக்கு!
அது வசந்த கால!
வாழ்த்து சொல்லட்டுமே!
விழிகளில் மலர்ந்த!
நம் காதல்!
மலர்ந்தே இருக்கட்டும்..!
வாழையடி வாழையாய்!
இம்மண்ணில்!
நாம்!
வாழ்வதற்கு அடையாளமாய்!