1.!
பறவைகளை பிடிக்காது உனக்கு!
பூக்களை கசக்கி முகர்வாய் நீ!
மழையை திட்டித் தீர்த்திருக்கிறாய்!
வீட்டைச் சுற்றிய எல்லா மிருகமும்!
உதைப் பட்டிருக்கு உன்னிடம்!
அலறல் சங்கீதத்தை!
அப்படி ரசிப்பாய்!
எப்படி அழைக்கிறாய்!
'டேய்! செல்லம்! என.!
4.!
நான் தனிமையில்!
இருக்க வேண்டும்!
முதலாளியின் கட்டளைகள்!
பீயைப் போல்!
துடைத்து விடு!
நண்பர்களின் நினைவுகள்!
இறகு போல்!
பிடுங்கி விடு!
குடும்பத்தாரின் பரிவுகள்!
மலர்களைப் போல்!
கிள்ளிவிடு!
உடல் துவாரங்கள்!
வழியாய் என்னுள்!
ஊற்றி நிறை!
நான் தனிமையில்!
இருக்க வேண்டும்!
உன்னில் மிதந்தபடி.!
5.!
இதுவரை!
நான் பெற்ற!
முத்தச்சுகங்களை!
மொத்தமாய்!
ஓர் நாள் உன்னிடம்!
ஒப்புவிக்கையில்!
வெளியில் அரித்து!
உள்ளுக்குள்!
அழுதிருப்பாய்.!
6.!
நான்கடி விலகி நின்று!
பேசிய போது!
தோளில் கைப் போட்டபடி!
நடந்த போது!
கெஞ்சிக் கேட்டு!
முத்தம்!
கொடுத்த போது!
பெற்ற போது!
சந்திப்புகளில் பரிசுகளை!
திணித்த போது!
மணிக் கணக்கில்!
காத்திருந்த போது!
பல நிலைகளில்!
மௌனமாய் இருந்து விட்டு!
உடல் பிசைந்து!
உச்சம் கண்ட!
ஒரு பொழுதில் கேட்டாய்!
'இதுதான் காதலா? என .!
!
மதியழகன் சுப்பையா