தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

என்னைத் தொலைத்த

சத்தி சக்திதாசன்
என்னைத் தொலைத்த(தொலைக்கும்) கணங்கள் !
!
அந்த ஒரு கணத்தில் !
அரசமரத்துக் கிளைதனில் !
அன்றில் ஒன்று தாவிய !
அழகு கண்டு நான் !
அந்தக்கணம் எனைத் !
தொலைப்பேன் !
!
அழகுவிழி மலர் கொண்டு !
அம்பொன்று என்மீது !
அவளெய்த போதன்று !
அரைவினாடிப் பொழுதினிலே !
அவசரமாய் நான் எனைத் !
தொலைத்தேன் !
!
பூவிரியும் சோலையிலே !
பூந்தென்றல் வீசுகையில் !
பூவிலந்த வண்டமர்ந்து !
பொழியுமந்தத் தேனருந்தும் !
பொன்மாலையில் நான் என்னைத் !
தொலைப்பேன் !
!
கைநீட்டி காத்திருக்கும் சிறுவன் !
கண்களிலே ஏக்கத்துடன் !
கருணை எதிர்பார்க்கையில் !
கண்மூடித்திறக்குமுன்னே அவன் கையில் !
கச்சிதமாய் ஒரு நோட்டை !
கைகளினால் கொடுக்கையிலே !
கண்களை நம்பமுடியாமல் திகைத்து !
காற்றாய் அவன் பறக்கும் வேளையில் !
கண்நேரம் வாஞ்சையிலே நான் என்னைத் !
தொலைத்தேன் !
!
காற்றோடு காற்றாய் என் அன்னை !
கலந்து விட்ட பின்னாலும் !
கனவுலகில் சிலநேரம் காட்சியாகிக் !
கதைபேசி என்னோடு சேர்ந்து !
கவிதைகளை ரசித்திருக்கையில் !
கனவு எனும் கானகத்தில் நான் என்னைத் !
தொலைப்பேன் !
!
காதலினால் என்னைக் கட்டிப்போட்டு !
கலியாணம் என்னும் பந்தத்துள் அணைத்து !
கருணைமிகு மனதோடு கட்டுண்டு !
கடினமெனும் பாதையூடு கைபிடித்து !
கவலைதீர்ந்த ஊருக்கு அழைத்துச் சென்ற !
கண்மணி என் மனைவி தனை நினைக்கையில் !
காலமெல்லாம் நான் எனைத் !
தொலைப்பேன் !
!
தமிழ் என்னும் கன்னியொருத்தி !
தனைக்காட்டி எனை மயக்கி !
தரணியிலே வாழுமட்டும் மறக்காமல் !
தன்னோடு கலக்க வைத்து !
தாகம் தீருமட்டும் கவிதையென்னும் நீரூற்றி !
தகமதைத் தீர்க்கையிலெ நான் என்னைத் !
தொலைப்பேன் !
!
கண்ணதாசன் என்றொரு கவிஞனின் !
கவிதையெனும் கானகத்தினுள் !
கண்மூடி நான் நடந்து வேண்டுமென்றே !
காணமல் வழிதொலைந்து !
களைத்துக் கண்மூடும்வரை !
கட்டாயமாக நான் என்னைத் !
தொலைப்பேன் !
!
அன்புதனை பயிரிட்டு !
அன்பையே அறுவடை செய்து !
அன்புடன் தமிழ் வளர்க்கும் !
அன்புடன் குழுமத்துக்குள் !
அன்புடனே நான் என்னைத் !
தொலைப்பேன் !
!
கருவினிலே உருவாகி என் !
கைகளில் குழந்தையாய் !
கண்களில் ஒளியாகி !
கட்டிளம் காளையாக !
கடமையுடன் கல்விகற்கும் !
கண்ணான என் மகனின் !
கவரும் அந்தப் புன்னகையில் !
காற்றாகக் கலந்து நான் என்னைத் !
தொலைப்பேன் !
!
என்னைத் தொலைத்த கணங்கள் பல !
என்னைத் தொலைக்கும் கணங்கள் பல் !
எப்போதும் தொலைவதில் இன்பம் !
என்றும் கொடுப்பது தமிழும் கவிதையும் !
சக்தி சக்திதாசன்

ஜெல்லிக் கணங்கள்

தேவமைந்தன்
தேவமைந்தன் !
காலையி லிருந்து !
கணினி இயக்கி !
சொடுக்கி பிடித்து !
அழுத்தி அழுத்தி !
விரல்நுனி, இடுக்கு !
முழங்கை வரையில் !
அரிப்பும் பிய்ப்பும்-- !
டாக்டர் சொன்னார்- !
இதுதெரி யாதா? !
கணினி அலுவல் !
பார்க்கும் பலர்க்கு !
வரும்பதி மூன்று !
நோய்க்குறி தம்முள் !
ஒன்றுதான் இது!என. !
அவர்க்குத் தெரியுமா !
என்றன் ஜெல்லிக் !
கணங்கள் நழுவி !
நழுவிப் போவது? !
அருகில் குறட்டை... !
ஆழ்ந்து தூங்கும்-என் !
அருமை மனைவியை !
எழுப்பி விடாமல் !
மீண்டும் கணினி. !
எனது தோழி !
என்றும் கைவிடா !
உரிமைத் தோழன் !
எல்லாம் அதுவே! !
முகத்தைச் சுழித்து !
மோவாய் இடித்துப் !
பார்த்ததே இல்லை, !
நான் அதை. !
திடீரென மூளையை !
ஜெல்லிக் கணங்கள் !
வழுக்கின. காலம் !
பின்புறம் நகர, !
இதுவரை யில்நான் !
வாழ்ந்த கணங்கள்-- !
என்-கண் ணிமைகளின் !
மேலே அமர்ந்துதம் !
கால்களைக் கீழே !
தொங்கப் போட்டுக் !
கொண்டே என்னை !
ஆட்டி வைத்தன. !
எல்லாம் கொஞ்சம் !
நேரம்தான்! !
ஜெல்லிக் கணங்கள் !
தோற்றுப் போக !
மூளை- வேகம் எடுத்தது... !
மூளையின் வேகம்-முன் !
எந்த ஒன்றின் வேகமும் !
எடுபடக் கூடுமோ? !
சொல்லி விட்டுப் !
போயே விட்டார் !
அருண கிரியார்--- !
சும்மா இரு, சொல் அற! வாம். !
சொல்லற்றுப் போனதன் !
சுமையால் தானோ !
அருணைக் கோபுரம் !
மேலே இருந்து !
வீழ்ந்து பெற்றார்-- !
முருகன் அருளை? !
சும்மா இருப்பதுவே !
சுகம். ஆம்! !
சும்மா இருந்து !
பாருங்கள். தெரியும்! !
சும்மா இருப்பது !
என்பது வேறு !
தம்பீ! புரியுதா? !
என்று உங்களில் !
தத்துவம் யோகம் !
தெரிந்தவர் கேட்பீர். !
புரியும். ஆனால் !
இயலுமா அதற்கு? !
வெறுமனே இருக்கும் !
மூளையுள் ஆயிரம் !
ஆயிரம் எண்ணக் !
குதிரைகள் தாவும்! !
நாமோ எங்கோ !
இழுத்துச் செல்லப் !
படுவோம் மறதியுள். !
ஜெல்லிக் கணங்கள் !
வந்து நம்மைக் !
காத்தால் பிழைப்போம்

கதவு

அஷ்ரஃப் சிஹாப்தீன்
உங்கள் வருகைக்காய்த்!
திறந்து வைக்கப்பட்ட கதவு!
நீங்கள் வந்தவேளை!
சாத்தப்பட்டிருந்தது கண்டு!
திரும்பியதறிந்தேன் !
திறக்கவும் மூடவும்!
மற்றும்!
பாதுகாப்புக்குமானவை!
கதவுகள் என்பதை!
நீங்கள் உணர மறுத்தது!
உறுத்துகிறதெனக்கு !
குரல் வழங்கப்பட்டிருப்பது!
கூப்பிடுவதற்கும்!
கைகள் தரப்பட்டிருப்பது!
தட்டிப் பார்ப்பதற்கும்தான் !
உள்ளே தாழிடப்பட்ட!
தட்டினால் திறக்கப்படாத!
கதவுகளேதும்!
உலகத்தில் கிடையாது

இன்று என் உடலுக்கு

நிர்வாணி
எடை கூடிவிட்டது!
நீ என் இதயத்தில் குடியேறிவிட்டதால்!
!
சிந்தனைகளின் எல்லைகள்!
தகர்த்தெறியப்பட்டுவிட்டன!
எண்ணங்கள் எல்லாம் நீயே என்பதால்!
!
எனது பகலின் அளவு கூடிவிட்டது!
ஏனெனில் இப்பொழுதெல்லாம்!
இரவில் நான் நித்திரைகொள்வதில்லை!
!
நாடித்துடிப்பு சராசா¤யைக் கடந்துவிட்டது!
உனைக்காணும்போது இதயம்!
தாறுமாறாய்த் துடிப்பதால்!
!
ஒவ்வொரு நாளும் வந்து வந்து போ!
உன் புன்னகைக்கொரு கவிதை!
எழுதிவிட்டு அடுத்த உன் வருகைக்காக!
காத்திருப்பேன்!
!
நீ சிந்திவிட்டுப்போன புன்னகைகளின்!
நினைவுகளோடு

எதையோ தேடிக்கொண்டே

மகி
அலையும் கண்கள் …!
---------------------------------------------------!
சவரம் செய்துபலமாதங்கள்!
தாண்டிய முகம் …..!
சீருடை அணிந்திருக்கும் !
சற்றுவாகான உடல்…..!
காலணிகளையே கண்டிராத!
புழுதிபடிந்த கால்கள் …..!
சாலையில் அவன் வரும்போதெல்லாம்!
ஊரே முணுமுணுக்கும்!
அவனைப்பற்றி தவறாய் …. !
தன்னைத்தான் ஏசுகிறார்கள்!
எனத் தெரிந்தும் புன்னகை!
உதிர்த்துவிட்டு போவான் …..!
சில சமயம் தடித்தபுத்தகங்களை!
கையில் வைத்துக் கொண்டு!
தனியே அமர்ந்திருப்பான் …!
தேநீர்கடை மேசையில்!
அமர்ந்தபடி புகைத்துக்கொண்டே!
தேநீரை ருசிபார்ப்பான்…….. !
தனக்கு தவறெனப்பட்டவைகளை!
தட்டிக்கேட்க்கும் நோக்கில்!
தர்க்கம் செய்வான் ……!
புரியாத விசயங்களைக்கூட!
புரியும்படி விளங்கச் !
சொல்வான் …..!
என் பேராசிரியருக்கு கூட!
தெரியாத பதில்கள்!
அவனிடமிருந்து அடிக்கடி வரும் ….!
எல்லாக் கருத்துக்களையும் கூறிவிட்டு!
பகுத்துபார்த்து ஏற்றுக்கொள்!
தம்பி என்பான் ……!
அகத்திலும் புறத்திலும்!
நண்பர்கள் வந்து!
போவர் ….!
அவன் என்னுடன்!
பேசுவதை யாரவது!
பார்த்தல் அவ்வளவுதான் ….!
வாழ்வியல் மேதைகள்!
வரிசையாய் வந்து!
என்னை வசைபாடுவார் ….!
கூடா குற்றம்!
செய்ததை போல!
என்னையும் பார்பர் ….!
அவன் புலம்பி நான்!
பார்த்ததில்லை -மகிழ்ச்சியாய்!
திரிவான் …..!
போராளிக்கு மகிழ்ச்சியா?!
என்றால் மகிழ்ச்சி!
என்பது போராட்டம்!
என்பான் ……!
எது எப்படியோ …..!
ஊரின் பார்வையில்!
அவன் “பிழைக்கத்தெரியாதவன் “!
என் பார்வையிலோ!
அவன்” புரட்சிக்காரன் “!
உங்களுக்கு “முகம் தெரியாத புரட்சிக்காரன்”……..!
மனிதனாய் பிறந்து!
மனிதருக்குள் புதைந்த!
அவனை தொலைத்து!
விட்டு தேடிக்கொண்டு!
இருக்கிறேன் …!
புரியாத கேள்விகளுக்கு!
பதில் தருவான் என்ற!
நம்பிக்கையில் ……

கண்ணே நானும் நீயும்

மாலியன்
கவிதை பாட நேரமில்லை!
எங்கோ தொலைந்துவிட்ட!
என்னை தேடிக்கொண்டிருக்கிறேன்!
நான் என்னை சந்தித்தால்!
உன்னைத் தேடும் நான்

தீபாவளி

ரா.கணேஷ்
ஊரெங்கும்!
புஸ்வாணங்களும்!
சங்கு சக்கரங்களும்!
தீபாவளியாய்!
சிரித்தன!
முடிந்து போன!
கம்பி மத்தாப்புக்களையும்!
புஸ்ஸான வெடிகளையும்!
கைகளில் ஏந்தி!
முனுசாமியின் மகன்!
தன்!
கனவுகளைக்!
கொளுத்தினான் !!
- ரா.கணேஷ்

இரவு மரம்

தீபச்செல்வன்
இரவு முழுவதும் நிலவு!
புதைந்து கிடந்தது!
நெடுஞ்சாலையின் அருகிலிருக்கும்!
எங்கள் கிராமமே!
மண்ணுக்குள்!
பதுங்கிக் கிடந்தது!
வானம்!
எல்லோரும் வெளியேறிய!
வீட்டின்!
சுவரில் ஒட்டியிருந்தது.!
நேற்று இறந்தவர்களின்!
குருதியில்!
விழுந்து வெடித்தன!
குண்டுகள்!
நாயும் நடுங்கியபடி!
பதுங்குகுழியின்!
இரண்டாவது படியிலிருக்கிறது.!
ஒவ்வொரு குண்டுகளும்!
விழும் பொழுதும்!
நாங்கள் சிதறிப்போயிருந்தோம்!
தொங்கு விளக்குகளை!
எங்கும்!
எறிந்து எரியவிட்டு!
விமானங்கள்!
குண்டுகளை கொட்டின.!
எங்கள் விளக்குகள்!
பதுங்குகுழியில்!
அணைந்து போனது!
இரவு துண்டுதுண்டாய் கிடந்தது!
பதுங்குகுழியும் சிதறிப்போகிறது!
எங்கள் சின்ன நகரமும்!
சூழ இருந்த கிராமங்களும்!
தீப்பிடித்து எரிந்துகொண்டிருந்தன.!
மெதுவாய் வெளியில்!
அழுதபடி வந்த!
நிலவை!
கொடூரப்பறவை!
வேகமாய் விழுங்கியது.!
இரவு முழுக்க விமானம்!
நிறைந்து கிடந்தது!
அகோர ஒலியை எங்கும்!
நிரப்பிவிட!
காற்று அறைந்துவிடுகிறது.!
தாக்குதலை முடித்த!
விமானங்கள்!
தளத்திற்கு திரும்புகின்றன!
இரவும் தீப்பிடித்து!
எரிந்துகொண்டிருந்தது!
மரங்களும் எரிந்து கொண்டிருந்தன!
சிதறிய பதுங்குகுழியின்!
ஒரு துண்டு!
இருளை பருகியபடி!
எனது தீபமாய் எரிந்து!
மரமாய் வளருகிறது.!
!
-தீபச்செல்வன்!
தீபம்

இலையுதிராக் காலம்

ஹேமா
விட்டாச்சு லீவு,!
பாட்டி வீட்டுக்கு பயணம்.!
ஒத்த ஓலக் குடிசையில!
காத்திருக்கும் என் பாட்டி. !
போன பொங்கலுக்கு வாங்கின பானையில !
எரும தயிருல ஊறவச்ச பழைய சாதமும்,!
பக்கத்துக்கு தோட்டத்துல உதிர்ந்த மாவடுவும்!
எனக்காக காத்திருக்கும். !
பக்கத்து வீட்டு தெண்டுல்கரும், எதிர் வீட்டு டோனியும்,!
மட்டையுடன் கண்முன் வந்து போனார்கள்.!
வாடகை சைக்கிளும், வாய்க்கால் வரப்பில திரிஞ்சதும்.!
நினைப்புல வந்து போச்சி .!
ஊர்க்கோடியில் பட்டம் விடவும் ,!
ஊருணியில் குளிக்கவும் ஆச வந்துச்சி. !
பனைமரக் காத்துல, பாட்டி மடில படுத்துக்கிகிட்டு!
விக்கிரமாதித்தன் கத கேட்க நினைப்பு வந்துச்சு.!
ஊர்க்கோடி அய்யனாருக்கு, காசு முடிஞ்சு நேர்ந்துக்கனும்!
வருஷத்துக்கு ரெண்டு கோடைக்காலம் வரணும்னு

அயல் நாட்டு இளவேனில்

சின்னு (சிவப்பிரகாசம்)
வெண்பனி சூடிட பூமகள் வேண்டி!
சுடர் கதிர் வேடுவன் உறங்கிடும் நாட்களில்!
பூமகள் போர்த்த பெய்திடும் பொன்மழை!
ஓவியன் வேண்டிடும் அலைகடல் ஓடத்தின்!
சொப்பனப் புன்னகை!
முதல்பனி கண்டதும் முகங்கொண்ட குறுநகை!
முப்பனி காண்கையில் வெறுத்திடும் மனநிலை!
வெண்பனி போக்கிட வந்திடும் கோமகன்!
உறங்கும் மங்கையை உயிர்த்திட பெய்திடும்!
பெருமழை தந்திடும் புன்னகை பொன்நகையா!
நாடு விட்டு நாடுவந்தால்!
புழுதி அடங்க கல்மாரி பொழிய!
காளான் முளைக்க மின்னல் தெறிக்கும்!
பொட்டல் காட்டின் வாசனை வேண்டி!
அழியுதே என் மனது!