ஆண்டாய்த் தவம்செய்து அடைந்த மணிமகவு!
அன்னை அவளுக்கு அருஞ்சுமை யாகிடுமோ?!
விண்மீனாய் உள்ளே விளையாடும் கண்மணிகள்!
விழித்திரைக் கென்றும் வேண்டாச் சுமையாமோ?!
அடிவயிறு உடையும்வரை அகலா நீர்க்குடங்கள்!
அம்மழை மேகத்திற் கடங்காச் சுமையாமோ?!
கொடியினில் தவழும் குறுமலரும் கிளையிலையும்!
கொண்டதன் கொடிக்கே கூடாச் சுமையாமோ?!
நேற்றா? இன்றா? நாளையா? நினைவேயிலா!
நெடிய காலமுதல் நீள்வா?னக் கூரையதில்!
காற்றாடி போலுலவும் கண்கவர் ஆதவனைக்!
குளிர்நிலவை வானமது கூறுமோ சுமையெனவே?!
வேரெண்ணக் கூடுமோ வெறுமைச் சுமையாக!
வானுயரத் தன்முடியில் வளரும் ஆலதனை!
நாரதுவும் சுமையாக நினைக்குமோ தான்தாங்கும்!
நன்மாலை யாகிநிற்கும் நறுமணப் பூக்களையே?!
எண்ணங்கள் எல்லா மிதயத்தே சுமையானால்!
எதிர்காலம் என்னுமொளி என்றுமே தோன்றுமோ?!
கண்ணிற் குயிர்தரும் காட்சியே சுமையாயின்!
கலைபலக் கற்பினும் கடுகளவும் பயனாமோ?!
சொல்லுக்குப் பொருளே சுமையாயி?ன் கவிதையும்!
சுவையு மிணைநீங்கிச் செத்துடன் மடியாதோ?!
வில்லினை நாணே வெறுத்திடில் சுமையெறு!
விளையுமோ பாரதத்தில் வெற்றி அறத்திற்கே?!
அடியாரைச் சுமையாக ஆண்டவனே எண்ணிடின்!
அமைதியாம் புகலிடம் அடியார்க்கு எங்கே?!
முடியாத சுமையாக முயற்சியே மாறிடின்!
முயல்கின்ற வீரர்க்கு முன்னேற்றம் எங்கே?!
வாரியே வழங்கிடும் வள்ளலே சுமையாய்!
வறியோரை நோக்கிடும் விதியும் வந்திடி?ன்!
பாரினில் பாட்டிசைப் புலவரின் வாழ்க்கை!
பஞ்சாய்த் தீய்ந்திடும் பசியெனும் தீயிலே?!
நிலவும் குளிர்நீரும் நீண்ட வான்வெளியும்!
நிலைபெறா உலகில் நிற்காதே இடம்மாறி!
உலவும் காற்றும் உறவில்லாத் தீப்பொறியும்!
உலகிற் கென்றும் உண்மையில் சுமையாமோ?!
நிற்குமோ நிலைத்தே நொடிப்பொழுது மிவ்வுலகு!
நிலத்தாய் அனைத்தையும் நினைத்தால் சுமையாக?!
கற்கவே முய?ன்றால் கடலாய விப்பொருளை!
காணலாம் புவியினிலே கண்ணெதிரே நற்பயனை!!
அடியார்க்கு அடியான்