வாழ்க்கைச் சுவடியை நாம் எழுத!
அதை பதிவகம் செய்யும்!
காலத்தின் மடியில்!
செல்லரித்துக் கிடக்கிறது!
காதல் காவியங்கள் எண்ணற்று!
உண்மைக் காதலே - உனக்கு!
வரப் பொன்று போட்ட மன்னவரால்!
சமாதிக்குள்ளும் சன்னிதியிலும் சங்கமித்தாய்!
மரணம் ஆட்கொண்டது!
மனிதக் கூட்டை மட்டுமே!
முகவுரை தொலைக்கவில்லை நீ!
உன்னை வாழால் கீறி!
வேலால் துளைத்து!
வதை கொண்ட!
கொற்றவர் அவையில்!
தீர்ப்புகளை திருத்தி!
புதிய வார்ப்புகளாய் பதித்து!
காலன் அவைக்கும் மனு கொடுத்து!
சாம்பிராட்சிய சன்னத பேய்களை!
துப்பாக்கித் துளைக்குள்!
துவைத் தெடுத்துவிட்டான் உன் பக்தன்!
இரண்டாம் மிலேனிய நேப்பாள இளவல்!
உனது வார்ப்புகள் மடை திறந்த ஊற்றே!
விடையிருந்தும் வினா தொடுப்பது வீணே!
உண்மைக் காதலரே!
புதிய வார்ப்புகள் உங்களுக்கானதே

வல்வை சுஜேன்