தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

வானிலை அறிக்கை

ரசிகவ் ஞானியார்
அதிகப்படுவதாய்!
நீ அனுப்புகின்ற!
குறுந்தகவல்,!
அங்கே!
மழைபொழிந்துகொண்டிருப்பதற்கான ...!
வானிலை அறிக்கை!

அப்பா

வி. பிச்சுமணி
அப்பாவை தினமும் எழுப்பும்!
என் செல்போன் அழைப்புகள்!
மறுமுனையில் அப்பாவின்!
என்ன குழந்தை பதில்!
இரத்தணுக்களில் இன்னும் !
அத்தனை பிள்ளைகளிலும் !
என்மீது கொள்ளைபிரியம்!
கொண்ட அப்பாவின் !
இரவு வணக்கமாக!
என் விசாரிப்புகள் !
உன்னோடிட்ட சண்டையில்!
என் குரலுக்கெங்கிய!
அப்பாவின் கடைசிஇரவில்!
நான் பேசாத சொற்கள்!
என் தொண்டையில் !
நஞ்சாக கரைந்து!
உடலெல்லாம் பரவி!
உன் உயிரணுக்களை!
அனுமதிக்க மறுத்துவிட்டன !
குற்ற உணர்வுகள் !
உன்னை குதறி தின்றும்!
உன் உதடுகளை கிழித்தும்!
நடைதளர்ந்த உன் ஆண்மை!
என்னிடம் வருந்தவில்லை !
என்றாவதொரு நாள்!
நீ மன்னிப்பு கேட்டாலும்!
உன்னை மன்னிக்க வியலாதற்கு!
என்னை மன்னித்துவிடு

கைமாத்து

ராமலக்ஷ்மி
அவசரத்தேவை!
வேறு வழியேயில்லை.!
தேடிச் சென்ற நண்பன்!
நாசூக்காய் கைவிரிக்க..!
உறவுகள்!
உதட்டைப் பிதுக்க..!
பழகிய சில இடங்களில்!
'பழைய பாக்கியே இன்னும்..'!
என இழுக்க..!
ஏதோ ஒரு பேருந்தில்!
ஏறி அமர்ந்தேன்.!
நல்லவேளையாய்!
காசு இருந்தது டிக்கெட்டுக்கு.!
நெஞ்சு வெடித்து!
விடக் கூடாதென!
அஞ்சு வரி அதன் பின்னே!
நுணுக்கி எழுதி!
'அவமானம்'!
எனத் தலைப்பிட்டேன்.!
அழகாய் வந்திருக்க!
ஆறியது சற்றே மனசு..!
கைமாத்தாகக் கவிதையாவது!
கிடைத்ததே என்று.!

துயர மலைகளைச் சுமக்கும் மடிகள்

துவாரகன்
உரையாடலின் நடுவில்!
‘இது எனது மூத்தவனின்’ என்றபடி!
அந்தப் பச்சைப் பிளாஸ்ரிக் கோவையை!
என்னிடம் தந்தபோது!
என் கைகள் நடுங்கின!
அவனைத் தாங்குவதுபோல்!
மிக மெதுவாகப் பற்றிப் பிடித்தேன்.!
பள்ளியில் அவன் பெற்ற!
பெறுபேறுகள் சான்றிதழ்கள் திறமைகள் எல்லாம்!
அந்தக் கோவையில் இருந்து சிரித்தன!
என் கைவிரல்கள் ஒவ்வொன்றாகத் தட்டிக் கொண்டிருந்தன.!
அந்த பெரிய உருவத்தில் சின்னக் கண்களும்!
பழைய கரியல் வைத்த சைக்கிளில்!
எப்போதும் சரித்துக் கொழுவப்பட்ட!
வளைபிடியிட்ட கறுப்புக் குடையும்!
சின்னச் சிரிப்புடன் கதைகூறும் மென்மையும்!
ஒவ்வொரு சான்றிதழ்களிலும் படமாய்த் தொங்கின.!
உன் அன்னை!
நீ படிக்கும் இரவுகளில்!
நித்திரைத் தூக்கத்தோடு!
சுவரில் சாய்ந்திருந்து காவலிருந்தாள்!
உனக்குப் பிடித்தவற்றைத்!
தேடித் தேடிச் சேர்த்து வைத்துக் கொண்டாள்.!
தன் வாழ்நாளில் சிறுகச் சிறுகச் சேமித்து!
உன்னைப் படிக்க வைத்து!
உயர்வில் மகிழும் ஒவ்வொரு கணமும்!
உன் தந்தைக்கு காத்திருந்த கணங்களாகியது.!
முதற்பக்கத்தில் குழந்தையாய்த் தவழ்ந்த!
படத்தைச் செருகி வைத்திருந்தாள் உன் தங்கை.!
இறுதிப் பக்கத்தில்!
அஞ்சலிப் பிரசுரத்தை!
ஞாபகமாய் வைத்திருந்தான் உன் தம்பி!
இந்தத் துயரமலையை!
எப்படித்தான்!
தாங்கிக் கொண்டாள் உன்னைப் பெற்றவள்.!
‘இது என்ரை மூத்தவன்ரை தம்பி பாருங்கோ’!
உன்னைப் பெற்றவன் என் கரங்களில் தந்தபோது!
கண்கள் பனித்ததடா?

சங்கப் பாடம்

நா.முத்து நிலவன்
தி.மு.க.தலைவருக்காகப் !
போராடினார்கள், !
நான் மௌனமாயிருந்தேன். !
ம.தி.மு.க.தலைவருக்காகப் !
போராடினார்கள், !
நான் மௌனமாயிருந்தேன். !
மார்க்சிஸ்ட் வாலிபர்கள் !
போராடினார்கள், !
நான் மௌனமாயிருந்தேன். !
போக்குவரத்துத் தொழிலாளர்கள் !
போராடினார்கள், !
நான் மௌனமாயிருந்தேன். !
பொதுத்துறை ஊழியர்கள் ஊழியர்கள் !
போராடினார்கள், !
நான் மௌனமாயிருந்தேன். !
தொழிலாளிகள் போராடினார்கள் !
போராடினார்கள், !
நான் மௌனமாயிருந்தேன். !
விவசாயிகள் போராடினார்கள் !
போராடினார்கள், !
நான் மௌனமாயிருந்தேன். !
இப்போது நான் போராடுகிறேன், !
எனக்காகக் குரல்கொடுக்க !
யாருமே இல்லை. !
(உலகத் தொழிற்சங்கக் கவிதையை !
உள்நாட்டில் தழுவியது) !
- நா.முத்து நிலவன்

சுட்டு எரிந்ததொரு.. முள்ளிவாய்க்கா

வித்யாசாகர்
சுட்டு எரிந்ததொரு காடு.. முள்ளிவாய்க்காலிலிருந்து...!
01.!
சுட்டு எரிந்ததொரு காடு!
---------------------------!
யார் மரணமும்!
யாரையுமே நோகவில்லை !
முடிவில் -!
முள்ளிவாய்க்காலை விழுங்கி !
சுடுகாடாய் கனத்தது !
உலக தமிழரின்; கல்மனசு!!
போர் போரென!
கதறிய கத்திய!
அவலகுரலில்;!
செவிடாகிப் போயினர்!
உலகத்தினர்,!
ஊமையாகிப் போயினர்!
தமிழர்கள்!!
ஆணும் பெண்ணும்!
குழந்தையுமென -!
கொன்று குவித்தவனுக்கு !
பெயர் போர்வீரனும்,!
கொள்ளப் பட்டவனுக்குப் பெயர்!
தீவிரவாதியுமெனில்,!
சொன்னவனை இனி!
சிங்களனென உரைப்போம்!!
தாய்மை பூண்ட!
பெண்களின் அடி வயிற்றில்!
பற்றி எரியட்டும்;!
முள்ளிவாய்க்காலின் இழப்பும்!
ஈழக் கனவும் -!
காரணம், ஆண்கள் விட்டதை!
பெண்களாவது பிடிக்கட்டும்!!
காசு காசென்று!
அயல் தேசங்களில் அலைந்ததில்!
வாழ்க்கையை!
வாழாவிட்டாலும்!
இன பற்றும்!
தேசப் பற்றினையும் கொண்டோம்;!
ஈழத்தை மட்டுமே!
கைவிட்டோம்!!
சுட்டு எரிந்ததொரு!
காடு;!
யாரும் -!
ஈழமென எண்ணி!
விடாதீர்கள்;!
தமிழன் இனியும் !
தலைகுனிவதாய் இல்லை!!
02.!
முள்ளிவாய்க்காலிலிருந்து...!
---------------------------------!
ஒரு நூறு தெரு !
தள்ளி தான் !
கேட்கிறதந்த சப்தம்;!
கண்ணீரால் யாரையோ!
கூப்பாடு போட்டழைக்கும்!
ஒரு ஓலம் அது;!
சுலபமாய் சொன்னால்!
மரணம் எனலாம்,!
வாழ்பவன்!
கற்றும் தெளியாத!
அல்லது -!
கற்காத பாடம்.!
மரணம் என்றாலே!
நெஞ்சை உலுக்கும் பயத்திற்கு!
மரணமின்றியே இயங்குகிறது!
நிறைய சதைகள்;!
ஆம், ஜாதி பேசி!
மதம் பேசி!
இனம் பேசி !
ஏற்றத் தாழ்வு பேசி!
யாரை கொன்றேனும்!
சுயநலம் காக்கும் சதைகளாக தானே!
வாழ்கிறோமென சொன்னால்!
எத்தனை பேர் ஏற்பீர்களோ!
எத்தனை பேர் மறுப்பீர்களோ;!
மறுக்க உங்களுக்கு!
சுதந்திரமுண்டு -!
ஏற்க எனக்கு மனமில்லை - நீங்கள்!
சதைகளே;!
சதை குவிந்த ஒரு பிண்டமே;!
வேண்டுமெனில்!
பிணமென்றும் வைத்துக் கொள்ளுங்கள்.!
டேய்........, யாரையடா !
பிணமென்றாய்' என !
விரட்டி பின்னால் ஓடுகிறேன்..!
என்னை விட வேகமாக ஓடி!
முட்கம்பிகளை தாண்டி!
முள்ளிவாய்க்காளின் ஒரு!
ரத்தக் கரை படிந்த பாறைக்குள் சென்று!
மறைகிறதந்த உருவம்

சிறை பிடிக்கப்பட்ட.. உன் மனத்திரும்ப

இராமசாமி ரமேஷ்
சிறை பிடிக்கப்பட்ட கனவுகள்....உன் மனத்திரும்பலுக்காய்...!
01.!
சிறை பிடிக்கப்பட்ட கனவுகள்....!
----------------------------------------!
கனவுகள் திருடப்பட்டு!
காலத்தின் கரங்களில்!
கட்டாயப்படுத்தப்பட்டு!
கைதியாக்கப்பட்டுப் போனேன்....!
ஆற்றுவதற்கும் தேற்றுவதற்கும்!
யாருமேயின்றி அனாதையாக நகர்கிறது!
எனது பொழுதுகள்.....!
சுகங்கள்!
யாருடையதோ சுரண்டலில்!
அபகரிக்கப்பட்டதும்!
நிஜங்கள் கானல்களாகி!
எனக்காக எதுவுமேயின்றி!
காணாமல் போயின!
உரிமைகள் எனைவிட்டு வெகுதூரமாய்....!
விரக்தியின் விளிம்பில்!
விழித்துக் கொள்கிறேன்!
தூங்குகின்ற பொழுதுகளில்கூட......!!!
வண்ண வண்ணமாய் !
என் தேசத்தில் வருமென!
நான் எதிர்பார்த்த தருணங்கள்!
சுடுகாட்டில் கருக்கப்பட்ட!
பூச்சரமாய்!
இருட்டடிப்புச் செய்யப்பட்டு!
இரும்புக் கரங்களுக்குள்!
இறுக்கப்படுகின்றன...........!
வயது வந்துவிட்டதால்!
வாலிபமே என் வாழ்க்கைக்கு!
வலியாகிப் போனது.....!
தங்கக் கூண்டில்!
தடுமாறும் பறவையாக!
வசதிகள் கொட்டிக் கிடந்தும்!
வெளி வாழ்க்கைக்கு!
வழி பார்க்கின்ற!
என் விழிகளின் கனவுகளை!
யார்தான் புரிந்துகொள்வார்களோ....??!
!
02.!
உன் மனத்திரும்பலுக்காய்...!
-----------------------------------!
வெறுமையாய் கிடந்த!
என் உள்ளத்து பூமியில்!
காதல் விதைகளைத் தூவியவளே...!
பாசக் கதைகளை பேசி!
என் காதல் விதை விருட்சமாக!
வியாபிக்கச் செய்தவளே....!
அந்த விதை!
வளர்ந்து விருட்சமான போது!
நீருற்றி வளர்த்த நீயே!
வெப்பத்தைப் பாய்ச்சி!
வேரறுக்கப் பார்ப்பது நியாயமா...??

வண்ணத்து பூச்சி.. புரிதல்

மோகன் குமார், சென்னை
01.!
வண்ணத்து பூச்சி!
-----------------------!
ஒவ்வொரு முறையும்!
உந்தன் தெருவினுள் வரும் போது!
எனை கடந்து போகும்!
வண்ண பட்டாம் பூச்சிகள்!
வெண்ணிறமாய், மஞ்சளாய்!
இன்னும் சொல்ல வொண்ணா நிறங்களில்!
முகத்திற்கெதிரே வந்து!
முணு முணுத்து போகும்.!
அவை சொன்ன சேதி !
விளங்கியதே இல்லை !
வருடங்களுக்கு பிறகு !
இன்று நீயில்லாத !
அதே தெருவில்.. !
முணு முணுப்பின் அர்த்தம் !
முழுசாய் புரிகிறது இன்று. !
!
02.!
புரிதல்!
----------!
ஒன்றன்!
அருகில் உள்ள போதல்ல!
ஒன்றை விட்டு!
தூரமான பின்பே!
ஒன்றைப் புரிய முடியும்

சமாதான பயணம்

விசித்ரா
மனசில் பாரச்சிலுவைகளுடன் !
உயிரின் இருப்புக்காய் குழந்தைகளின் பயணம்!
மலைகளின் பெருவெளியில் !
கபாலங்களையும் எலும்புத் துண்டங்களையும் !
மிதித்து நடக்கிறார்கள்!
தொலைந்து போன உறவுகளின்!
சிவப்புக் கோடுகளை நெஞ்சில் சிலுவையாய் வரித்து!
கரிக்கும் கண்ணீரைப் பருகி நடக்கிறார்கள்!
அதர்ம ஒலி எழுப்பி கொடிய இரத்த வெறியை !
ஆணிகளாலும், கோடரிகளாலும்; மன்னர்கள்!
புண்படுத்திக் காட்டியிருக்கிறார்கள்!
குழந்தைகள்!
தங்கள் ஆத்மாக்களை!
கல்வாரியின் மலைகளுக்கு ஒப்புக்கொடுத்துவிட்டு!
மடிந்தது போக எஞ்சியவற்றுடன் நடக்கிறார்கள்!
இப்போது!
எல்லோருமே அழுகிறார்கள் !
மன்னர்களால் கொல்லப்படுவதற்கு!
இன்னும் எங்களிடம் உரிமைக்கான நியாயங்கள் இருக்கிறதா?!
- விசித்ரா

கவிதைகளும், கேள்விகளும்

அனாமிகா பிரித்திமா
கவிதைகளும்... கேள்விகளும்...!
------------------------------------!
என்னிடம்...!
கேள்விகள்...!
ஆயிரம் உண்டு...!
கேட்க ஆசை உண்டு...!
உங்களிடம் கவிதைகள்...!
ஆயிரம் உண்டு...!
காதலை பற்றி... !
காதல் தோல்வியை பற்றி... !
திருமணத்தை பற்றி... !
உறவை பற்றி... !
உயிரை பற்றி... !
பிரிவை பற்றி... !
உணர்சியை பற்றி... !
எழுதாத எவையும் இல்லை...!
உங்கள் கவிதை அத்தியாயத்தில்... !
ஓன்றை... !
ஓன்றை பற்றி மட்டும் ...!
ஓரு கவிதை வேண்டுமே…!
மனமாற்றத்தை பற்றி…!
மறப்பதை பற்றி...!
எழுதுங்களேன்...!
நானும்... !
முயல்கிறேன்...!
தங்களை...!
மறக்க