சாட்சிக் கொரு அக்கினிக் குண்டம்!
அதற்கும் எமக்கும் இடையில்!
ஓர் புரோகிதர்!
கெட்டி மேள நாத சுரத்தோடு!
கட்டப் பட்ட திருமாங்கல்யம்….!
விவாகரத்து கேட்டு!
கோட்டாணையின் அழைப்பில்....!
நீதி தேவனின் தராசுத் தட்டில்!
குறைந்தும் கூடியதுமாய்!
வாழ்க்கைத் தரவின் படிக்கல்கள்!
அடுக்கி வைக்கின்றார் வழக்கறிஞர்!
சாட்ச்சி சொல்ல அக்கினி வரவில்லை!
நல்ல நாள் நல்ல நேரம் கூடவில்லை!
அடித்து வைத்த பத்திரிகையில்!
பிடித்த பாயிண்டுகளை எழுதி!
விவாக இரத்து கொடுக்கின்றார்!
நீதிவான்!
பாக்கு வெத்திலை பரிமாற்றத்தோடு!
மஞ்சள் பூசி இணைக்கப் பட்ட!
நிச்சய தாம்பூல நியமனம்!
ஊர் இன்றி உறவின்றி கூண்டேறி!
விவாகரத்து வாங்கி போகிறது!
போகட்டும் பொல்லாப்பெதற்கு நமக்கு!
தாமரை கொடியும் தடாக நீரும்!
விவாகரத்து கேட்பதில்லை என்றும்.!

வல்வை சுஜேன்