தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

கிராமத்து வாழ்க்கை

முருகன் சுப்பராயன்
ஆடு மாடு மேச்சி !
உளுந்து பயறு புளி!
காய வச்சி !
அம்மி குடக்கல் உரல்!
பயன் படுத்தி!
அப்பளம் வடவம் போட்டு!
கம்பு கேழ்வரகு !
பழைய சாதம் ஊறுக்காய்!
சாப்பிட்டு!
வாசல் பெருக்கி !
அடுப்பு மொழுவி !
வெத்தலை போட்டு !
பழகியவளுக்கு !
மிக்சி கிரைண்டர் குக்கர் !
ஃபிஸா பெப்சி !
அஞ்சு நாளைக்கு !
தேவையானத சமச்சி !
ஃபிரிட்ஜ்-க்குள் வச்சு!
டிவி பாத்துட்டே !
புழுக்கமான ஃபேன் காத்துல !
சாப்பிட்டு தூங்கி !
தூங்கி சாப்பிட்டு !
இந்த வேகமான !
நகர நரக!
வாழ்க்கை!
பிடிக்காமல்.....!
கிராமத்துக்கு !
பஸ் ஏத்திவிடுரா மொவனே!
என்கிறாள்!
அம்மாக்காரி.!
- முருகன் சுப்பராயன்

நான்

கல்யாணி
உயர்ந்தவன், உன்னதமானவன்!
தனித்துவமானவன்!
நான் ஆண்!
ஆண் என்பதால்!
ஆற்றல் உள்ளவன்!
அனைத்தும் அறிபவன்!
குற்றம் செய்ய முடியாதவன்!
குற்றம் இருந்தாலும்!
மன்னிக்கப்படவேண்டியவன்!
ஏனெனில்!
நான் ஆண் குறியை உடையவன்!
எனது ஆண்குறி!
எப்போதும் எங்குவேண்டுமானாலும்!
யாரைக் கண்டாலும்!
விறைக்கக் கூடியது!
சகோதரியோ மகளோ!
யாரும் விதிவிலக்கல்ல!
எனது ஆண்குறி விறைக்கக்கூடியது!
அது இயற்கை!
பண்பாடு!
எனக்கு நடிப்பிற்குரியது!
நான் வேடம் போடக்கூடியவன்!
சமுதாயத்திற்காக!
இந்த விறைப்பை வளப்படுத்த!
நீலப் படங்கள் உண்டு!
புத்தகங்கள் உண்டு!
அதனால் இது வளப்படுத்த வேண்டியது!
நீ யார்?!
வெறும் பெண்!
இந்த விறைப்பைத் தீர்க்கப்!
படைக்கப்பட்டவள்!
நான்!
உயர்வானவன்!
உன்னதமானவன்!
போற்றப்படவேண்டியவன்!
நான் ஆண்!
கட்டுப்பாடுகள் அற்றவன்!
சந்தோசமானவன்!
எனது ஆண்குறி!
விறைக்கக்கூடியது!
-கல்யாணி!
பெண் இதழ் (மட்டக்களப்பு,இலங்கை)

நான் இரவு மற்றும் நாவல்

பொ.வெண்மணிச் செல்வன்
இலக்கியம் தின்ற!
இரவுகளில் இன்னுமொன்று.!
இன்னும் விழித்திராத!
சூரியனை!
எனக்குள் மட்டும்!
ஜொலிக்கச் செய்திருந்தது!
வாசித்து முடித்த நாவல்.!
தூங்கித் தொலைக்காமல்!
வாழ்ந்து சேர்த்த!
எத்தனையாவது இரவு இதுவென்று!
கணக்குப் பார்த்துக் கொண்டேன்.!
நான்!
வாழ்ந்த வாழ்கிற!
வாழப் போகிற!
வாழ மறந்த!
வாழ்கையின்!
சகல நாற்றங்களையும் மலர்களையும்!
கண்ணீரையும் கனவுகளையும்!
பார்த்து முடித்துவிட்டு!
என்னோடு பகிர்ந்தும்!
போயிருந்த!
நாவல் கதாபாத்திரங்கள்!
மங்கிக் கொண்டிருக்கும்!
நட்சத்திரஙளோடு!
அடிவானில் உலாத்தினார்கள்.!
உலகத்தில்!
இந்த வினாடியில்!
கற்பழிக்கப்பட்பவர்கள் இத்தனை,!
கொல்லப்படுபவர்கள் இத்தனையென்று!
கணக்கெடுத்து சொல்லும்!
எவனாவது ஒருவன்,!
இந்த நிமிடத்தில்!
என்னைப் போலவே!
இலக்கியம் வாசித்து!
விழித்திருப்பவனை(ளை)!
கண்டுபிடித்து சொன்னால்,!
இரவை இன்னும் கொஞ்சம் நீட்டித்து,!
உரையாடிக் கொண்டிருக்கலாமென்று!
நினைத்துக் கொண்டென்!!
உறங்கும் தென்னைமரங்களைத்!
தட்டியெழுப்பி,!
விழித்தே கழித்த!
இரவேதும் உண்டா!
உம் இடம்நகரா!
வாழ்க்கைப் பயனத்தில்!
என்று கேட்டுவைத்தேன்.!
உறங்கும் மனிதர்கள்!
விழித்துவிடக் கூடாதேயென்ற பயத்தில்!
ஒவ்வொரு கடவுகளாய்!
ஒலிபெருக்கியில்!
சத்தமாய் பாடத்தொடங்க,!
நானோ!
அவர்களைப் பார்த்து!
அலட்சியமாய் சிரித்துவிட்டு,!
முதற்பறவையின்!
சிறகிசைக்காய்!
காத்திருக்கத் தொடங்கினேன்

எங்கிருந்தோ வந்தாள்

அகணி
மல்லிகைப் பூவற்ற பூந்தோட்டத்தில்!
மல்லிகை வாசத்தை தாங்கி வந்தாள்!
இவனுக்காய் காத்திருக்கும்!
இடைஞ்சல் இல்லையென்ற உணர்வை!
சுந்தரியின் சிரிப்பழகு!
சொல்லிக் கொண்டது!
இவளுக்காய் காத்திருந்ததில்!
எனக்கும் ஓர் இன்பம் இருந்தது!
இவள் நடையை பார்த்து ரசிக்க!
எனக்கு கிடைத்த பலனே அது!
நிறையவே பேசினோம்!
நீண்ட நேரம் காதலும் செய்தோம்!
சின்ன சண்டைகள்!
நேரத்தைக் கொன்றன!
மாலையாகி மதியும் தோன்றினன்!
மனமற்று மெல்லப் பிரிந்தோம்!
காதல் சவாரியை நினைத்துக்!
களிப்புறத் துடிக்கையில்!
கற்பனைக் குதிரையின்!
கனைப்புக் கேட்டது!
குதிரைக் கடிவாளத்தை மெல்லப்பிடித்து!
கீழே இறங்கி மெல்ல நடந்தேன்!
இன்றைய சவாரி இத்துடன் போதுமென

கரடியுடன் பொருதல்

காருண்யன்
பயத்தை வெளிக்காட்டாமல்............சும்மா!
சிலிர்த்துக்கொண்டு நில்!
உன் கண்களை நேர் நோக்கவிடாதே!
எதிரி நீ ரௌத்ரம் கொண்டதாய் நினைக்கட்டும்!
கழி ஏதும் இருந்தால் தூர வீசிவிடு!
உன்னால் பிரயோகிக்கவே முடியாது!
இனிச்சர்வ ஜாக்கிரதை!
உம்முள் இடைவெளிவிடுதல் அபாயம்!
நீ கடிபட்டுக் குதறவோ பிராண்டவோ படலாம்!
ஆதலால்........!
எதிரி எதிர்பாராத ஒரு மின் கணத்தில்!
'லபக்'கெனப் பாய்ந்து கட்டிப்பிடி!
கிடுக்கிப்பிடிபோட்டு நெருக்கிப்பிடி!
இம்மியும் திணற அனுமதிக்காதே!
இன்னும் இன்னும் முழுவலுவுடனும்!
காற்றுவெளி இலாதபடி இறுக்கிப்பிடி!
மேன்மேலும் அமுக்கி அழுத்தி மெருகுகையில்!
ஜெயமும் சாந்தியும் பெருகும் காண்.!
முக்கிய முன் குறிப்பு:-!
மேற்படி உத்தியை யாரும் பெண்களிடம்!
பிரயோகித்தால் விளைவுகட்கு!
நான் ஜவாப்தாரி அல்ல

ஆதித்தாய்

நளாயினி
முள்ளந்தண்டு முன் வளைந்த படிக்கு!
கையில் தடியோடும் கோணிப்பையோடும்.!
அப்பப்போ!
மண்ணள்ளி முகத்தில் பூசுவதும்!
அழுவதும் ஆடுவதும் பாடுவதும் சிரிப்பதுமாய்.!
புரிந்து கொள்ள முடியவில்லை.!
மாமரத்தின் கீழும்!
தென்னையின் கீழும்!
கிணற்றடி ஆடுகாலினுள்ளும்!
ஏலாத போது தனது வீட்டுத் திண்ணையிலுமாய்!
தன்னை காப்பாற்றிபடியே.!
இன்னும் சாகேலை ஆச்சி.!
ஆடிப்பாடி குதாகலித்து!
நிலாக்காட்டி சோறூட்டி!
மடியிலும் தோழிலுமாய் சுமந்து!
தூங்க வைத்து......!
பூட்டி பேரன்கள்!
யாருமில்லை அவளருகில்.!
பசியோடும்!
துன்ப துயரோடும்!
போரின் கொடுமையோடும்!
வெறுமை பொழுதை!
சுமந்தும் துடைத்தெறிந்தும்..!
வீரத்தோடும்!
இன்னும் பல மடங்கு வீரியத்தோடும்!
மகரந்தங்களையும்!
விதைகளையும் வேர்களையும்!
இன்னும் இன்னும் அதிகமாய்!
தன்னகத்தே சேமித்தபடிக்கு ஆச்சி.!
உரு சிதைந்து சிதிலமாகுமுன்!
நாமெல்லாம் தன் மடியில் வந்து வீழ்வோம்!
என்ற நம்பிக்கையோடு!
கோணிப்பையை இறுக அணைத்தபடி ஆச்சி.!
நளாயினி தாமரைச்செல்வன்.!
10-02-2007

ரசூல் கவிதைகள்

ரசூல்
ஒரே உதையில் து£ரப்போய் விழுந்த!
பொம்மை சொன்னது!
இப்படி எல்லாம் நடந்திருக்காது!
எனக்கும் ஒரு உம்மா இருந்திருந்தால்.!
நீயற்ற பிரபஞ்சம் எதுவுமில்லை!
பிரபஞ்சமே நீயெனச் சொல்லியது!
காற்று!
கை நிறைய பரிசுப்பொருள்களோடு!
வரவேற்றது எதிரே ஒரு கவிதை.!
முலை திருகி நகரெரித்த!
என் தோழி கண்ணகிக்கு!
இன்னும் ஒற்றை முலை.!
பறவையின் பெயர் கேட்டேன்!
மௌனம்!
மௌனத்தை மொழிபெயர்த்தேன்!
பெயர் சொல்லி பறந்தது பறவை!
மரம்கொத்தி பறவையின் அலகில்!
எத்தனை மரங்களின் ருசி!
என்னிடம் எதுவும் சொல்லவில்லை!
புது வீடொன்றை கட்டிக்கொண்டது!
வண்ணத்துப்பூச்சி!
கதவுகளை அறைந்து சாத்திவிட்டாய்!
கைகளை பிசைந்து கொண்டு!
வெளியே ஒரு நட்சத்திரம்.!
நீ கட்டிய வீட்டில்!
வேறு எல்லாமும் இருந்தது!
வெளியே நான் எட்டிப்பார்ப்பதற்கு!
ஒரு ஜன்னலைத் தவிர.!
!
-ரசூல்

கிழித்துப்போடு

துவாரகன்
மண்டைக்குள் குறவணன் புழு!
நரம்புகளுள் கொழுக்கிப்புழு!
வாயில் செத்துப்போன மிருகத்தின் நாற்றம்!
உடலெங்கும் ஊனம்!
இன்னும்!
பேசிப்பேசியே வாசனை பூசு!
கவச குண்டலம்!
பந்தியில் பறிபோனது!
காண்டீபம்!
திருவிழாவில் தொலைந்து போனது!
சாரதியும்!
தேரோடு செத்துப்போனான்!
இந்த அழகிய உலகில்!
அழுகிய மனிதர்களோடு!
இன்னமும் வாழ்கிறேன்!
என்று உன் வரலாற்றில் எழுது.!
இல்லையெனில்!
இந்தக் கவிதையைக் கிழித்துப்போடு!!

காதலில்

கவிதா. நோர்வே
ஆதிகாலத்து!
வாள், வேலில்இருந்து!
நிகழ்காலத்து!
நவீன துப்பாக்கிகள் வரை!
ஆள்க் கொல்லி !
சாதனங்கள் ஆயிரம் இருக்கிறது!
இத்தனையும் இல்லாமல்!
என்னை கொன்று போகிறது!
உன் இரு கண்கள்!
எனது துடிக்கும் இதயத்தைத்!
துளையிடுகிறது !
எழுந்த உன் ஒற்றைப் புருவம்!
என் கண்ணிகளே !
கரு மை எடுத்து !
உன் விரல்கள்!
எழுதிப் போகிறது!
கவிதையென்று சொல்லி!
காதல் சாசனம்!
கால்நகம் இருந்து!
காற்றலையும் என் முடிவரை!
நீ எழுதிய முகவுரையே!
முடியவில்லை!
முற்றுப் புள்ளி!
மறந்துபோனது !
எங்கள் இலக்கியத்தில்!
காதலில் தொலைந்த என்னை!
தேடியெடுத்து அறைந்து செல்கிறாய்!
உன் காதல் சிலுவையில்!
முத்தமுட்களில் கிரிடம்!
செய்து ஏந்தி வருகிறாய்!
இரத்தம் போல் உணர்வுகள் !
காற்றடிக்கும் திசையெல்லாம்!
அடங்காது பாய்கிறது!
முழுமையாய் இறக்குமுன்பே!
புதைத்து விடுகிறாய்!
உன் புன்னகைப் புதைகுளியில்!
அந்த புன்னகையால்!
என் அவஸ்தையின்!
ஆயுள் மட்டும் !
நீண்டு கொள்கிறது!
என் இறப்பின் நுனியில்!
முடங்கிக் கிடக்கிறேன்!
கடைசிப் படியில்!
சொர்க்க வாசலென்று!
உன் இரு கை நீள்கிறது!
ஓடி வந்து விழுகையிலே!
புரிகிறது...!
காதலில் இதெல்லாம்!
சகஜம் என்று.!
- கவிதா நோர்வே

குடைக்குள் அவள்

ராம்ப்ரசாத், சென்னை
வெய்யிலின் வெம்மை இல்லை.!
தூறல் துளியும் இல்லை.!
இருந்தும்,!
நீ குடையில் செல்வது!
சிலைகளைக் கண்டால்!
காகங்கள் எச்சம் இட்டு!
விடுகின்றன என்பதாலா !!!...!