எங்களின் தாய்நிலத்தை!
அவ்வளவு இலகுவில் மறந்துவிடமுடியாது!
காலங்கள் எத்தனை கடந்தாலும்!
இந்த உடல்!
கோலங்கள் எத்தனை கண்டாலும்!
சொந்த மண்ணை மறந்திடமுடியாது!
மறந்துவிடச் சொல்கிறாள் என் காதலி!
கனடாவில் குடியேறிவிட்டோம்!
கனடியனாய் வாழ்ந்திடுவோம்!
வா என்கிறாள்!
எனதருமைக் காதலியே!
எதை மறந்துவிடச் சொல்கிறாய் ?!
தை பிறந்தால் பட்டம் விட்ட நாட்களையா ?!
அத்துளு வெளியில் பந்தடித்த நாட்களையா ?!
கோயில் திருவிழாவில் அழகான!
பெண்களைப் பார்த்து ஏங்கி நின்ற!
நாட்களையா?!
எதை மறந்துவிடச் சொல்கிறாய் ?!
சொல்லடி பெண்ணே!
எத்தனை காலமடி ?!
இன்று நினைத்தாலும் !
நெஞ்சம் இனிக்குதடி!
எப்படி மறப்பேன்!
என் தாய் நிலத்தை ?
நிர்வாணி