அறிவுப்புதையலே.. மாற்றுத் திறன்
இரா.இரவி
அறிவுப்புதையலே..மாற்றுத் திறன் படைத்தோரின் மனசு..!
01.!
அறிவுப்புதையலே!
------------------------!
கடுகு அளவும் கவலை நாளும் கொள்ளாதவரே!
முயற்சி திருவினையாக்கும் என்பதற்கும் முன் மாதிரியானவரே!
மூளையை விஞ்ஞானத்திற்கும் பயன்படுத்திய முக்கியமானவரே!
படகோட்டி மகனாய்ப் பிறந்து விஞ்ஞானி ஆனவரே!
பொக்ரான் அணுகுண்டு வெடித்து வியப்பில் ஆழ்த்தியவரே!
செய்தித்தாள் விற்றுப் படித்துத் தலைப்புச் செய்தியானவரே!
செய்தியாக மக்களுக்கு அறநெறி அருள்பவரே!
செடி கொடி வளர்க்கும் இயற்கையின் நேசரே!
சின்னஞ்சிறு அரும்புகளை விரும்பும் இனியவரே!
பல்லாயிரம் மாணவர்களைச் சந்தித்த சாதனையாளரே!
பண்பை விதைத்து வரும் போதகரே!
ஆடம்பரம் விரும்பாத அடக்கத்தின் அடையாளமானவரே!
ஆரவாரம் இல்லாத அன்பின் இமயமானவரே!
போலி மரபுகளைப் புறக்கணித்த வரலாற்று நாயகரே!
போதி மரத்துப் புத்தனைப்போல ஆசை துறந்தவரே!
தோல்விக்குத் துவளாமல் முயற்சித்து வென்றவரே!
தன்னம்பிக்கை வலிமையை தரணிக்குச் சொன்னவரே!
அக்னிச் சிறகுகள் விரித்து அளப்பரிய சிகரம் சென்றவரே!
அனûத்துக் குடிமக்களின் இதயத்தில் நின்றவரே!
உங்களைக் குடியரசுத் தலைவர் பதவி கௌரவப்படுத்தவில்லை!
உங்களால் குடியரசுத் தலைவர் பதவி கௌரவப்படுத்தப்பட்டது!
நேர்வழியின் சிகரத்திற்கு மகுடம் சூட்டுங்கள்!
நேர்மையின் சின்னத்திற்கு நோபல் பரிசு தாருங்கள்!!
02.!
மாற்றுத் திறன் படைத்தோரின் மனசு !
--------------------------------------------!
கலக்குவோம் கலக்குவோம் இந்த!
உலகத்தையே கலக்குவோம் நாங்கள்!
மாற்றுத்திறன் படைத்தோர் நாங்கள் உலகில்!
மட்டற்ற சாதனை படைத்திடுவோம் என்றும்!
கை கால் குறையின்றி நாளும்!
உழைக்காமல் உண்ணும் சோம்பேறிகள் உண்டு!
கை கால் குறையிருந்தும் என்றும்!
உழைக்காமல் உண்பதில்லை நாங்கள்!
பார் புகழ்ந்திட உழைப்போம் நாங்கள்!
பரிசுகள் பல வெல்வோம் நாங்கள்!
கவலைக்கு இடம் கொடுப்பதில்லை நாங்கள்!
கலை வளர்க்கவும் தவறுவதில்லை நாங்கள்!
ஆடுவோம் பாடுவோம் என்றும்!
ஆனந்தக் கூத்தாடுவோம் நாங்கள்!
கருணை கேட்கவில்லை நாங்கள்!
கனிவோடு நடத்திடுங்கள் நீங்கள்!
உடல்குறை குறையே அன்று!
உள்ளத்தின் குறையே பெரும் குறையாகும்!
குறையை குறையாக நினைப்பதில்லை நாங்கள்!
குறையையும் நிறையாக நினைப்பவர்கள் நாங்கள்!
பிறக்கும் போதும் குறை உண்டு!
பிறந்த பின்னும் குறை உண்டு!
கல்வியிலும் படைத்தோம் பல சாதனை!
விளையாட்டிலும் வென்றோம் கடந்தோம் சோதனை!
சகலகலா வல்லவர்கள் உண்டு எங்களில்!
நடனக் கலைஞர் மறைந்த குட்டியும், வாழும் சுதாசந்திரனும் எங்களினம்!
பார்வையின்றி பார் புகழ வாழ்கின்றார் பலர்!
பார்வை இருந்தும் பயனற்று வாழ்கின்றார் பலர்!
மண்ணுக்கும் தீயுக்கும் இரையாகும் விழிகளை!
மனிதனுக்கு வழங்கும் உள்ளம் பெறுங்கள்