கலவரப்படும் மனது - மு. பழனியப்பன்

கலவரப்படும் மனது - Tamil Poem (தமிழ் கவிதை) by மு. பழனியப்பன்

Photo by Maria Lupan on Unsplash

மரணம்!
சம்பவிக்கும் நேரத்தைத் தவிர!
வேறு ஒன்றும் முன்னேற்பாடு!
இல்லாதது!
கடிதங்கள்!
இதனைத் தெரிவிக்கின்றன!
தாமதமாக!
அழுகைகள்!
விளம்பரப் படுத்துகின்றன!
இதனை!
சுமக்கின்ற!
வண்டிகள்!
அடையாளங்களாகின்றன!
வருபவர்களுக்கு!
இழப்பின் வலி!
மரணத்தின் அடுத்த நிமிடத்தில்!
மறந்து போகிறது!
ஏற்பாடுகளுக்கு!
பணத்தை எண்ணிப் பார்க்கிறது!
சுற்றம்!
நாள் போனால் நாற்றம் வீசும்!
பக்கத்து வீட்டுக்காரர்களின்!
மனிதாபிமானம்!
அமெரிக்க பாசம்!
வரும் வரை காத்திருக்கிறது கூட்டம்!
எதுவும் இல்லாமல் போகப் போகிறது!
வாழ்க்கை!
கழுவி விட்டார்கள்!
வீட்டையும் மரணத்தையும் சேர்த்து!
அடுத்த மரணத்தின்போது!
கலவரப்படும் மனது

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.