தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

நாளின் மறைவு... பாடலின் பிறப்பு

சத்தி சக்திதாசன்
மாலைதான் இது !
மயக்கும் வேளைதான் !
மனதில் ஒரு ராகம் !
பறவை மீண்டும் !
பறக்குது தன் !
கூட்டுக்கு !
நிலவு மீண்டும் !
நீந்துது அந்த !
வானில் !
பகலை அணைக்க !
இரவு அசைந்து !
வருகுது. !
ஆண்டவன் தூங்க !
அணைக்கின்றானோ !
விளக்கை .... !
ஆந்தைக்கு ஏனோ !
கொண்டாட்டம் !
ஆரம்பம் அதன் உலகம் !
காரில் ஏறி !
விரைகின்றேன் !
அது கூட என் கூடோ ? !
உழைப்பதும் பின் நம் !
பிழைப்பதும் உலகில் !
இயந்திரச் சுழற்சி .. !
எங்கே தொடங்குகிறோம் !
அங்கேயா முடிக்கின்றோம் ? !
அதுவும் தெரியவில்லை !
சிரிப்பதும் செயற்கை !
அழுவதும் செயற்கை !
இதுகூட இயற்கையோ .... !
என் நாளின் முடிவு !
ஏக்கத்திற்கு எங்கே முடிவு !
தேவைகளுக்கு எங்கே .... !
தூக்கத்தைத் தொலைத்தது !
தொலைத்ததை மறந்தது !
துன்பத்தில் விளைந்ததா அன்றி .... !
காலையில் தொடங்கி !
மாலையில் முடிவது , நாள்தான் !
மனதின் எண்ணங்களல்ல !
காரும் பறக்குது என் !
மனமும் பறக்குது !
நான் செல்வதும் ஒரு கூடுதான்

ஊரறியும்... உறவறியும்... நீயறியாய்... பெண்மனமே!

மன்னார் அமுதன்
நமக்குள்!
ஒன்றுமில்லையெனவே!
நாம் முன்மொழிகிறோம்!
வலியின்!
மொழிகளையே!
மனமோ வழிமொழிகிறது!
என் விழிகள்!
திருடுபோயின!
இரவுகளுமென்னை!
ஒதுக்கியே விட்டன!
மெத்தை தணலாக!
தூக்கமும் நானும்!
தூரமாகிப் போனோம்!
உண்ணா நோன்பனை!
உறவாக்கிக் கொண்டது!
யுக்தா!!
என்னுயிர்க் காற்றே!
எங்கேயடி சென்றாய்!
என்னைத் திணறவிட்டு!
மூச்சுத் திணறலோடே!
நகருகின்றன!
நீயில்லாத நாட்கள்!
கண்ணீர் குடித்து வளரும்!
பொழுதுகளின் விழுதுகளில்!
சிக்கிச் சிக்கியே!
சிதிலமடைகிறேன்!
உன் நினைவுகள்!
தின்று தின்றே!
நாள்தோறும் தேய்பிறையாய்!
உருக்குலைகின்றன!
என்னுயிரின் ஓரங்கள்!
இந்த வானம் ... பூமி...!
அந்த மரம்...!
அதன் கீற்றுகளைக்!
கொஞ்சும் காற்று...!
சாலை நடுவில்!
ஏதோ நினைவில்!
நான் மோதப் போன!
முச்சக்கரச் சாரதி...!
என எல்லோரும்!
அறிந்திருக்கிறார்கள்!
உன்னைத் தவிர!
தோள்களில் நீ!
சாய்ந்திருந்த பொழுதுகளைக் கேட்பாயா..!
நான் வாழ்ந்த நிமிடங்களைச்!
சொல்லும்!
விரல்கள் இணைத்து!
நடைபயின்ற வீதியைக் கேளேன்!
சொல்லுமது காதலா? காமமாவென்று?!
உன் கண்ணீரைத் துடைத்த!
கைக்குட்டை கூட!
இன்னும் ஈரமாய்!
என் நினைவுகளில்!
என்றோ எவனோ!
அணைத்த தீயிற்காய்!
நீயேன் இன்னும் எரிகிறாய்!
மாமிசம் சுவைத்தும்!
எலும்பைக் காக்கும் பிராணியாய்!
இன்னும் ஏனடி!
கசப்பைக் காவித் திரிகிறாய் !
தொடுகைகள் பிழையோ?!
உரைப்பாய் - உன்!
தொடுகையில் பனியாய்!
உறைந்தேன், பிழையோ?!
உணர்வினைச் சிலுவையில்!
அறைகிறாய் சரியோ?- சிலுவையைச்!
சுகமாய்ச் சுமத்தலும் முறையோ?!
மலரைச் சூழ்ந்து!
அதரம் கடித்தேன்!
தேனைச் சுவைத்தேன்!
தேடிப் புசித்தேன்!
தேனை ருசிக்கவோ!
பூவை அழகென்றேன்?!
பூவை! நீ சொல்..!
நமக்குள்!
ஒன்றுமில்லையெனவே!
நாம் முன்மொழிகிறோம்!
வலியின்!
மொழிகளையே!
மனமோ வழிமொழிகிறது!

வேதம் புதிது

த.சு.மணியம்
கூலிக்கு மாரடிக்கும்!
கூனல் கிழவி சிலர்!
வேலிக்குப் பொட்டு வைத்து!
வெளியேறி நாட்சிலவில்!
போலிக்கு வாழ்வளிக்கும்!
புலம்பெயர் மண் கால் பதித்தே -இன்று!
தாலிக்குக் கொடிபோதா!
தடிப்பாகத் தேடுகின்றார்.!
கைநாட்டுப் போட்ட கதை!
கடக்கு முன்பே மறந்து விட்டு!
ரை கோட்டு சகிதமுடன்!
இராக்காலப் பனியில் நின்று!
பை போட்டு கதைத்த அப்போ!
பார்த்திருந்த வட்டு ஒன்று -ஆச்சி!
டைபோட மறந்ததினை!
ஞாபகத்தில் கொண்டு வந்தான்.!
ஆங்கிலமும் தெரியுமென்று!
அருகிருப்போர் அறிந்துகொள்ள!
பாங்கிலவள் பேச எண்ணி!
பத்து தரம் நோ நோ சொல்ல!
மூங்கிலவன் கையெடுத்த -நல்ல!
முரட்டுப் பொடியனுமோ!
வாங்கினிலில் உட்கார்த்தி!
வடிவாகச் சாத்திவிட்டான்.!
வட்டிலிலே பழஞ்சோறு!
குடித்த கதை கேட்கவுமே!
வட்டிஸ்தற்? பழஞ்சோறு!
பாட்டியவள் கேட்டுவிட்டு!
கொட்டிக்க தன் பசிக்கு!
கம்பூர்கர் வேணுமென -சந்தை!
பெட்டிக்கை பாரன் என்று!
பேரனுமோ சொல்லிவிட்டான்.!
அப்புவுடன் சேர்ந்திருந்தால்!
அரசுப் பணம் குறையுமெண்ணி!
தப்புகளைத் தவிர்ப்பதற்காய்!
தாத்தாவைத் தனியிருத்தி!
கொப்பு ஒன்று வேண்டுமென்று!
கோதையவள் தன்னருகே!
சப்பு ஒன்றை வைத்தபடி!
சந்தி பல சுற்றுகிறாள்.!
சித்தெறும்பு கடித்த பாட்டை!
சிறுகப் படித்தபடி!
பெத்த பிள்ளையோடிருந்தால்!
பேத்தி என்று சொல்வரெண்ணி!
மெத்த சுகம் காண!
மேல் மாடி வீடெடுத்து!
செத்த பிணம் பலவும்!
நித்தம் சுடலையிலே.!
ஊரறியேன் பேரறியேன்!
உண்மையிது நானறியேன்!
வாழ்வறியேன் தொழிலறியேன்!
வந்த இடம் வாழ்வறியேன்!
சூதறியேன் வாதறியேன் -அவர் !
சொல்லியதால் ஈதறிவேன்!
நீதறிவீர் நினைத்திடுவீர்!
நிலையற்ற வாழ்வுணர்வீர்.!
த.சு.மணியம்

சுமை

தென்றல்.இரா.சம்பத்
என் பேனாமுனையில்!
பிறவியெடுக்கும்!
இந்த மௌனச்சொற்களில்!
என் மனதோடு மல்லுக்கட்டும்!
உன் பிரிவை.. நினைவை...!
பெரிதுபடுத்தி!
எழுதத்தெரியவில்லை எனக்கு.!
உறவு! பிரிவு!!
இரண்டும் சுமைதான்!
உறவில் !
மகிழ்வே ஒரு சுமை!!
மகிழ்ந்து பிரிந்தபின்-அதுவே!
நமக்கு மனச்சுமை!!
பிரிவுக்காக !
இந்த மனம் ஏன்!
இப்படி கணக்கிறது.!!
பிரிவு-அது!
உறவில் அரங்கேறிய!
ஊமை நாடகம்.........!!
நாடகம் முடியும் நேரம்!
நாமாக கலையாமல்!
நாட்களும் நாழிகளுமே!
நமை கலைக்கும்போது!
நமக்கென்ன கவலை!
காத்திருப்போம் காதலோடு........!
தென்றல்.இரா.சம்பத்!
ஈரோடு-2

ஆயுதம் மிரண்டால்

க. உதயகுமார்
ஐ.நா. விடம் சொல்லி வையுங்கள்!!
ஆயுதம் அகிம்சை!
அறியாது!!
அணுவின் ஆட்சியில்.....!
ஆளுமை தோற்கும்!!
மனித நேயங்கள்!
மான்பை இழக்கும்!!
பச்சை வர்ணங்கள்!
இனி பார்வை இழக்கும்!!
காசு கொடுத்தால்தான்!
காற்று!!
எமனை மிஞ்சும் எரிவாயு!!
மண்ணுக்கு பதிலாக!
இனி மனிதப்பிணங்கள்!!
இலையுதிர்காலம்!
இனி இருக்காது!!
ஈரக்காற்று இனி சுரக்காது!!
ஐ.நா. விடம் சொல்லி வையுங்கள்!!
இனி...பூனை கண்ணை முடிகொண்டால்!
பூமி இருண்டுவிட்டது என்று அர்த்தம்!!
அணுவின் ஆட்சியில்....!
நிலவு கூட நெடுந்தூரம் தெரியும்!!
இரவில் ஒளிந்த சூரியனக்!
காலையில் தூசு தட்டி எழுப்பும்!!
ஐ.நா. விடம் சொல்லி வையுங்கள்!!
ஆயுதம் அகிம்சை!
அறியாது

நிகழாதிருப்பின்

கவிமதி
எப்போதும் நிகழ்ந்து !
விடலாம் என்கிறதான !
சம்பவங்கள் குறித்த !
சர்ச்சைகள் !
நிகழ்ந்து விட்ட சம்பவத்திற்கு !
முன்போ பின்போ !
எதிர்கொள்வதற்குண்டான !
சாத்திய கூறுகள் !
தசைகளிழ்ந்த !
உயிர்களாய் !
எப்போதும் !
நிகழ்ந்துவிடக்கூடுமென்று !
எதிர்நோக்கப்பட்ட !
சம்பவத்தின் !
மிச்சங்கள் !
எப்போதும் நிகழ்வதேயில்லை !
நிகழக்கூடுமென்று !
நினைத்ததுபோல்

ஏ-9 வீதி

தீபச்செல்வன்
நமது நகரத்த சூழ்ந்திருந்த!
எல்லா வண்டிகளும் புறப்பட்டுவிட்டன!
புனரமைக்கப்பட்ட வீதி!
மீண்டும் தனித்திருக்கிறது!
நம்மிடம் இப்பொழுது!
ஒரு பயங்கர அமைதியும்!
குருர கலவரமும் திணிக்கப்பட்டிருக்கிறது.!
வெள்ளயைடித்து பயணிக்கப்பட்ட!
இந்த வீதியை சிதைப்பது பற்றி!
யாரிடம் முறையிடுவது?!
அல்லது எப்படி தடுத்து நிறுத்துவது?!
குருதியால் பெறப்பட்ட!
சிவப்பு வீதியின் வரலாற்றை!
வெள்ளைத்தோரணங்கள்!
பிரதிபலிக்காமலே போய்விட்டன!
வீதி கிழிந்து கிடக்கிறது.!
இது எனது வீதி!
எனது வீட்டிற்கு பிரதானமானது!
எனக்காக நீளுகிறது!
இதற்காக நம்மில் பலர்!
குருதி சிந்தியிருக்கிறார்கள்!
உயிரை புதைத்திருக்கிறார்கள்.!
இப்பொழுது இந்த வீதி!
பசியின் வரலாராகவும்!
நோயின் தரிப்பிடமாகவும்!
உயிர்களை பறிகொடுக்கிறது!
நிழலுக்காக முளைத்த!
பனைமரங்களின் கனவுகள்!
தின்னப்படுகிற முகாமாகிவிட்டது.!
பனைமரங்களை வறியாதீர்!
என்ற மூத்தோரின் குரல்கள் கேட்கின்றன!
எத்தனை பனைமரங்கள்!
காயப்பட்டிருக்கின்றன!
எத்தனை பனைமரங்கள்!
அழிந்துவிட்டன!
எதிர்கால பனைமரங்களுக்கான!
விதைகளும் நாற்றுக்களும்!
எங்கிருக்கின்றன.?!
வந்த வண்டிகள் எதையோ!
ஏற்றி விட்டு திரும்பிபோகின்றன.!
எங்கள் வண்டிகள் எதுவும்!
எரிபொருள்இன்றி நகருவதில்ல!
வெள்ளபைபோர்நம்ம சூழ்கிறது.!
எமது வீதிகளை யார் தீர்மானிக்கிறார்கள்?!
எமது வண்டிகளை யார் தீர்மானிக்கிறார்கள்?!
எமது நகரங்களை யார் தீர்மானிக்கிறார்கள்?!
எமது வீடுகளை யார் தீர்மானிக்கிறார்கள்?!
எமது பனைமரங்களை யார் தீர்மானிக்கிறார்கள்?.!
!
- தீபச்செல்வன்!
14.08.2007

உனது சீற்றத்தை புரிந்திடுவார்களா ?

றஞ்சினி
யாரும் நினைத்திரா ராட்சத அலைகளால் இழந்து !
நிற்கிறோம் எம் அன்பு உறவுகளை !
குழந்தைகள் பெண்கள் முதியோர் ஆண்களென !
பல்லாயிரக் கணக்கில் . !
!
இந்து சமுத்திர திவுகளெங்கும் !
மனித இறப்பின் அவலம் தொடர்கிறது !
ஆபிரிக்காவையும் விட்டுவிடவில்லை !
!
இது என்ன கொடுமை !
இலங்கை இந்திய கரைகள் தோறும் !
மிருகங்கள் போல மனித உடல்கள் !
அநாதைகளாக பல்லாயிரக் கணக்கில், !
அள்ளி அடுத்து புதைக்கும் நிலமை !
பார்த்து நிக்க இதயம் வலித்து கண்கள் நிறைகிறது !
!
போரினால் இழந்தோம் பல்லாயிரக் கணக்கில் !
அதையும் தாண்டி இயற்க்கையிடம் சிக்கி இறந்த உறவுகள் . !
யாரை நோவது யாரிடம் உரைப்பது !
இயற்க்கையே உனக்கு ஏன் இந்த சீற்றம் !
மனிதர்கள் உன்னை அழிப்பதனாலா !
மனிதர்கள் உன்னை வதைப்பதனாலா !
உன்னை பரிசித்து வல்லரசுகள் !
தம்மை பலம் செய்வதனாலா !
!
ஏழை மக்களின் உயிரை ஏன் பதிலாக கொண்டாய்!
இயற்கையை அன்னையின் சீற்றக்கணக்கில் !
இன்னும் எத்தனை அழிவுகள் உழதோ !
இனியாவது உன்னை !
உனது சீற்றத்தை மனிதர்கள் புரிந்திடுவார்களா !
!
Ranjini Frankfurt

காகித‌ம்.. மெர்க்குரிக் கனவு.. இள‌மை

ராம்ப்ரசாத், சென்னை
01.!
காகித‌ம்!
------------!
பேராசைக்கேட‌ய‌ம் தாங்கி!
எதிர்த்துவ‌ரும் த‌ர்ம‌ங்க‌ளை!
த‌க‌ர்த்தெறிகிற‌து ஒரு!
கையெழுத்திட்ட காகித‌ம்...!
ப‌ரிமாறிக்கொள்ளப்பட்ட‌!
தேவைக‌ள் நின்றுவிட‌!
கேடயங்களுக்குள்!
ஒளிந்து கொண்டன காகித‌ங்கள்...!
இது ஒரு!
போர்...!
என்ன‌வென்று தெரியுமுன்!
தொட‌ங்கிவிடும் போர்....!
இங்கு வெட்டிச்சாய்ப்பது!
பிரதானமல்ல‌...!
போர் தொடர்வதே!
பிரதானம்...!
அதைத்தான் விரும்புகின்ற‌ன‌!
காகித‌ங்க‌ளும்...!
!
02.!
மெர்க்குரிக் கனவுகள்!
--------------------------!
திரைச்சீலை இடுக்குவழி...!
நுழைந்துவிட்ட‌!
மெர்க்குரி விளக்கொளி...!
அனும‌தியின்றி உறங்கியிருந்தது!
த‌டுமாறி விழுந்த‌!
என் ப‌டுக்கையில்...!
கொட்டும் பனியை!
நினைவூட்டியபடி!
இறங்கிக்கொண்டிருந்தன‌!
அதன் கனவுகள்!
துகள்களாய்...!
!
03.!
இள‌மை!
------------!
மெளனத்தை முன்னிறுத்தி!
பின்னால் ஒளிந்து கொள்ளும்!
ஐயங்கள்...!
அரைகுறையாய்!
முழுமையடைகிறது!
வயதுக்குரிய சில!
விளக்கங்கள்...!
நொடிப்பொழுதுகளில்!
கவனிக்கப்படாமல்!
கடந்து போய்விடுகிறது!
படிப்பினைகள் ...!
இன்றும் நாளையும்!
பகிர்ந்து கொள்ளும்‌!
நம்பிக்கைகள்...!
கேட்கப்படாத‌ கேள்விகளில்!
மிக அரிதாகிவிடுகின்றது!
இளமை

ஒரு தேடலின் பொழுது

துர்கா
உன்னை ரசிக்க தேடிய !
கண்கள்!
பார்க்க மறந்து நின்ற பொழுது!
நீ!
முழுவதும்!
என் மனபிம்பமானாய்..!
விழியின் தேடல் பயணம்!
இன்னும் தொடர்ந்து கொண்டேயிருக்க!
நான் மௌனமாய் காத்திருப்பேன்!
உன்னை ரசிக்க....!
என்னை மறந்து!
உன்னை நினைத்த !
பொழுதுகளில்!
உலகை மறந்து நின்றேன்!
என் வாழ்க்கைப் பாதையில்!
ஏதோ ஒரு கீறல்...!
மூச்சற்ற உன் பிம்பத்துடனும் !
உணர்வற்ற உன் குரலுடனும்!
உறவாடத் துடிக்கும்!
என் மனத்தை நினைத்து...!
நீ வந்து செல்லும்!
பாதை!
உன்னாலேயே நிறைந்து கிடக்கிறது!
ஒரு முறை தான்!
வந்து விட்டுச் செல்லேன்....!
உன் பாதச்!
சுவடுகளையாவது!
நான்!
ரசித்துவிட்டுச்!
சென்று விடுகிறேன்